375. தரணிமிசை
ராகம் : அமிர்தவர்ஷிணி சதுஸ்ர த்ருவம் கண்ட நடை தரணிமிசை அனையினிட வுந்தியின் வந்துகுந் துளிபயறு கழலினிய அண்டமுங் கொண்டதின் தசையுதிர நிணநிறைய அங்கமுந் தங்கவொன் பதுவாயுந் தருகரமொ டினியபத முங்கொடங் கொன்பதும் பெருகியொரு பதினவனி வந்துகண் டன்புடன் தநயனென நடைபழகி மங்கைதன் சிங்கியின் வசமாகித் திரிகியுடல் வளையநடை தண்டுடன் சென்றுபின் கிடையெனவு மருவிமனை முந்திவந் தந்தகன் சிதறுவுயிர் பிணமெனவெ மைந்தரும் பந்துவும் அயர்வாகிச் செடமிதனை யெடுமெடுமி னென்றுகொண் டன்புடன் சுடலைமிசை யெரியினிட வெந்துபின் சிந்திடுஞ் செனனமிது தவிரஇரு தண்டையுங் கொண்டபைங் கழல்தாராய்