Posts

Showing posts from October, 2016

391. நீலங்கொள்

ராகம் : சாரங்கா/குறிஞ்சி அங்கதாளம் கண்ட நடை (8) நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே நீவந்த வாழ்வைக்கண் டதனாலே மால்கொண்ட பேதைக்குன் மணநாறும் மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா நாலந்த வேதத்தின் பொருளோனே நானென்று மார்தட்டும் பெருமாளே.

390. நீரு மென்பு

ராகம் : நவரச கன்னட தாளம் : ஆதி திச்ர நடை (12) நீரு மென்பு தோலி னாலு மாவ தென்கை கால்க ளோடு நீளு மங்க மாகி மாய வுயிரூறி நேச மொன்று தாதை தாய ராசை கொண்ட போதில் மேவி நீதி யொன்று பால னாகி யழிவாய்வந் தூரு மின்ப வாழ்வு மாகி யூன மொன்றி லாது மாத ரோடு சிந்தை வேடை கூர உறவாகி ஊழி யைந்த கால மேதி யோனும் வந்து பாசம் வீச ஊனு டம்பு மாயு மாய மொழியாதோ

389. நிருதரார்க்கொரு

ராகம் : மத்யமாவதி அங்கதாளம் (7½) 1½ + 2 + 2 + 2 நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய சுரர்க ளேத்திடு வேலா ஜேஜெய நிமல னார்க்கொரு பாலா ஜேஜெய விறலான நெடிய வேற்படை யானே ஜேஜெய எனஇ ராப்பகல் தானே நான்மிக நினது தாட்டொழு மாறே தானினி யுடனேதான் தரையி னாழ்த்திரை யேழே போலெழு பிறவி மாக்கட லூடே நானுறு சவலை தீர்த்துன தாளே சூடியு னடியார்வாழ் சபையி னேற்றியின் ஞானா போதமு மருளி யாட்கொளு மாறே தானது தமிய னேற்குமு னேநீ மேவுவ தொருநாளே

388. நிமிர்ந்த முதுகும்

ராகம் : காபி தாளம் : சதுச்ர ரூபகம் (6) நிமிர்ந்த முதுகுங் குனிந்து சிறந்த முகமுந் திரங்கி நிறைந்த வயிறுஞ் சரிந்து தடியூணி நெகிழ்ந்து சடலந் தளர்ந்து விளங்கு விழியங் கிருண்டு நினைந்த மதியுங் கலங்கி மனையாள்கண் டுமிழ்ந்து பலருங் கடிந்து சிறந்த வியலும் பெயர்ந்து உறைந்த உயிருங் கழன்று விடுநாள்முன் உகந்து மனமுங் குளிர்ந்து பயன்கொள் தருமம் புரிந்து ஒடுங்கி நினையும் பணிந்து மகிழ்வேனோ

387. நித்தமுற்று உனை

ராகம் : குந்தலவராளி அங்கதாளம் 1½ நித்தமுற் றுனைநினைத்து மிகநாடி நிட்டைபெற் றியல்கருத்தர் துணையாக நத்தியு தமதவத்தி னெறியாலே லக்யலக் கணநிருத்த மருள்வாயே

386. நாளு மிகுத்த

ராகம் : கமாஸ் தாளம் : அங்கதாளம் 2 + 1½ + 3 (6½) நாளு மிகுத்த கசிவாகி ஞான நிருத்த மதைநாடும் ஏழை தனக்கு மநுபூதி ராசி தழைக்க அருள்வாயே

385. நாலிரண்டிதழ்

Image
ராகம் : துர்கா அங்க தாளம் (7½) 1½ + 2 + 2 + 2 நாலி ரண்டித ழாலே கோலிய ஞால முண்டக மேலே தானிள ஞாயி றென்றுறு கோலா காலனு மதின்மேலே ஞால முண்டபி ராணா தாரனும் யோக மந்திர மூலா தாரனு நாடி நின்றப்ர பாவா காரனு நடுவாக மேலி ருந்தகி ரீடா பீடமு நூல றிந்தம ணீமா மாடமு மேத கும்ப்ரபை கோடா கோடியு மிடமாக வீசி நின்றுள தூபா தீபவி சால மண்டப மீதே யேறிய வீர பண்டித வீரா சாரிய வினைதீராய்

384. நாராலே

ராகம்: மலஹரி தாளம்: ஆதி – 2 களை நாரா லேதோல் நீரா லேயாம் நானா வாசற் குடிலூடே ஞாதா வாயே வாழ்கா லேகாய் நாய்பேய் சூழ்கைக் கிடமாமுன் தாரா ரார்தோ ளீரா றானே சார்வா னோர்நற் பெருவாழ்வே தாழா தேநா யேனா வாலே தாள்பா டாண்மைத் திறல்தாராய்

383. நரையொடு

ராகம் : நாதநாமக்ரியா அங்கதாளம் (7½) 2 + 1½ + 1½ + 2½ நரையொடு பற்க ழன்று தோல்வற்றி நடையற மெத்த நொந்து காலெய்த்து நயனமி ருட்டி நின்று கோலுற்று நடைதோயா நழுவும்வி டக்கை யொன்று போல்வைத்து நமதென மெத்த வந்த வாழ்வுற்று நடலைப டுத்து மிந்த மாயத்தை நகையாதே விரையொடு பற்றி வண்டு பாடுற்ற ம்ருகமத மப்பி வந்த வோதிக்கு மிளிருமை யைச்செ றிந்த வேல்கட்கும் வினையோடு மிகுகவி னிட்டு நின்ற மாதர்க்கு மிடைபடு சித்த மொன்று வேனுற்றுன் விழுமிய பொற்ப தங்கள் பாடற்கு வினவாதோ

382. தோலத்தியால்

ராகம் : சுருட்டி சதுச்ர த்ருபுடை கண்ட நடை (20) தோலத்தி யாலப்பி னாலொப்பி லாதுற்ற தோளுக்கை காலுற்ற குடிலூடே சோர்வற்று வாழ்வுற்ற கால்பற்றி யேகைக்கு வேதித்த சூலத்த னணுகாமுன் கோலத்தை வேலைக்கு ளேவிட்ட சூர்கொத்தொ டேபட்டு வீழ்வித்த கொலைவேலா கோதற்ற பாதத்தி லேபத்தி கூர்புத்தி கூர்கைக்கு நீகொற்ற அருள்தாராய்

381. தோரண கனக

ராகம் : மோகனம் மிஸ்ர சாபு 2 + 1½ (3½) தோரண கனக வாசலில் முழவு தோல்முர சதிர முதிராத தோகையர் கவரி வீசவ யிரியர் தோள்வலி புகழ மதகோப வாரண ரதப தாகினி துரக மாதிர நிறைய அரசாகி வாழினும் வறுமை கூரினு நினது வார்கழ லொழிய மொழியேனே

380. துள்ளுமத

Image
ராகம் : ஹம்சானந்தி அங்கதாளம் 1½ + 1 + 2 + 3 (7½) துள்ளுமத வேள்கைக் கணையாலே தொல்லைநெடு நீலக் கடலாலே மெள்ளவரு சோலைக் குயிலாலே மெய்யுருகு மானைத் தழுவாயே தெள்ளுதமிழ் பாடத் தெளிவோனே செய்யகும ரேசத் திறலோனே வள்ளல்தொழு ஞானக் கழலோனே வள்ளிமண வாளப் பெருமாளே.

379. திரை வஞ்ச

ராகம் : நாட்டகுறிஞ்சி தாளம் : கண்டசாபு (2½) திரைவஞ்ச இருவினைகள் நரையங்க மலமழிய சிவகங்கை தனில்முழுகி விளையாடிச் சிவம்வந்து குதிகொளக வடிவுன்றன் வடிவமென திகழண்டர் முநிவர்கண மயன்மாலும் அரன்மைந்த னெனகளிறு முகனெம்பி யெனமகிழ அடியென்க ணளிபரவ மயிலேறி அயில்கொண்டு திருநடன மெனதந்தை யுடன்மருவி அருமந்த பொருளையினி யருள்வாயே

378. திரிபுரம் அதனை

ராகம் : தர்பாரி கானடா மிஸ்ரசாபு (3½) திரிபுர மதனை யொருநொடி யதனி லெரிசெய்த ருளிய சிவன்வாழ்வே சினமுடை யசுரர் மனமது வெருவ மயிலது முடுகி விடுவோனே பருவரை யதனை யுருவிட எறியு மறுமுக முடைய வடிவேலா பசலையொ டணையு மிளமுலை மகளை மதன்விடு பகழி தொடலாமோ

377. தவநெறி தவறிய

ராகம் : ஆபோகி தாளம் : சதுச்ர துருவம் (14) தவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறிய பரபாதத் தருமிகள் கருமிகள் வெகுவித சமயிக ளவரொடு சருவாநின் றவனிவ னுவனுட னவளிவ ளுவளது இதுவுது வெனுமாறற் றருவுரு வொழிதரு வுருவுடை யதுபதி தமியனு முணர்வேனோ குவலய முழுவதும் மதிர்பட வடகுவ டிடிபட வுரகேசன் கொடுமுடி பலநெரி தரநெடு முதுகுரை கடல்புனல் வறிதாகத் துவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெடநிசி சரர்சேனை துகளெழ நடநவில் மரகத துரகதம் வரவல பெருமாளே.

376. தலைவலய

ராகம் : பிலஹரி அங்க தாளம் 2½ + 1½ + 1 (5) தலைவலய போகமுஞ் சலனமிகு மோகமுந் தவறுதரு காமமுங் கனல்போலுந் தணிவரிய கோபமுந் துணிவரிய லோபமுஞ் சமயவெகு ரூபமும் பிறிதேதும் அலமலமெ னாஎழுந் தவர்களநு பூதிகொண் டறியுமொரு காரணந் தனைநாடா ததிமதபு ராணமுஞ் சுருதிகளு மாகிநின் றபரிமித மாய்விளம் புவதோதான்

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே