குமரி காளி - J.R. கருத்துரை
By Smt Janaki Ramanan You may read Kumari Kali for an explanation in English. சோணாசலத்தின் சுந்தரா சரணம். "குமரி காளி" என்று இதமாய் இடையில் தொடங்கும் திருவருணைப் பாடல் (ஆரம்ப வரி - அமுதமூறு சொலாகிய) முன்னுரை ஒப்புயர்வற்ற அத்தனுக்கும், அன்னைக்கும் செல்வக் குமாரன், குமரன். எத்தனையோ திருப்புகழ் பாடல்களில் அந்தப் பெற்றோரின் ஆற்றலை, கருணையை, பாடிக் களிக்கிறார் அருணகிரியார். ஷண்முகனைப் பாடும் பொழுதே ஷண்மதத்தின் தலையாய தெய்வங்களையும் பாடி மத இணைப்புக்கும், மன இணைப்புக்கும் வழி வகுக்கிறார். இந்தப் பாடலில் 35 நாமங்களால் ஜகன் மாதாவைத் துதிக்கிறார். அன்னையின் ஒவ்வொரு நாமமும் அமுத ஊற்று. ஊற்றுக் கண் திறப்போம்.