கீத விநோத -- J.R. விளக்கவுரை
By Smt Janaki Ramanan, Pune.
For a paraphrasing of this song in English, click geetha vinOtha
முன்னுரை
மனிதனின் ஐம்பொறிகளுக்கும் மூவாசைகளுக்கும் நடக்கும் கயிற்று இழுப்புப் போட்டியில் பொறிகள் கலங்கித் துவண்டு தோல்வியுறுவது வாடிக்கையாகி விடுகிறது. அதிலும் பெண்ணாசை, அதர்மச் செயல்கள் அத்தனையையும் செய்யத் தூண்டி, பேரழிவில் கொண்டு சேர்க்கிறது. மீட்சிப் பாதையில் நடக்க ஆரம்பித்த பின்னரும், பெண்ணாசை இன்னும் மிச்சம் இருக்குமோ என்று அச்சம் கொண்டு, அறுமுகவனை அழைக்கிறார் அருணகிரிநாதர். சரவணனிடம் சரணாகதி செய்து விட்டாலோ அந்தப் பெண்ணாசையே மண்ணோடு மண்ணாகும் விந்தை நடந்து விடுகிறது என்று விளக்கேற்றும் பாடல்.
கீத விநோத மெச்சு குரலாலே
கீறு மையார் முடித்த குழலாலே
நீதியிலா தழித்தும் உழலாதே
நீ மயிலேறி யுற்று வரவேணும்
சூதமர் சூரருட்க பொரு சூரா
சோணகிரீயிலுற்ற குமரேசா
விளக்கம்: என்னைக் காத்துக் கொள்ளும் வலிமை எனக்கில்லை. என் வினையும் அதற்கு விடப் போவதில்லை. வஞ்சம் நிறைந்த சூரர் நெஞ்சம் நடுங்க அவர்களைப் பந்தாடி அழித்த வீரத் திலகமே, வடிவேலா, வழித் துணையே, அன்று சோணாசலத்தில் காட்சி தந்த விழிச்சுடரே, இன்று மீட்சிக்கு வந்து விடு!
ஆதியர் காதொருச் சொல் அருள்வோனே
ஆனைமுகார் கனிட்ட பெருமாளே
Comments
Post a Comment