461. கீத விநோத
Learn The Song
Raga Thilang (Janyam of 28th mela Hari Kambhoji)
Arohanam: S G3 M1 P N3 S Avarohanam: S N2 P M1 G3 SRaga Thilang Alapana By Mathangi Chandrasekaran
Paraphrase
கீத விநோத மெச்சு குரலாலே (geetha vinOdha mechchu kuralAlE) : Enchanted by the versatile voices of women displaying musical wonders, (மாதரின்) ராக ஜாலங்கள் காட்டக்கூடிய மெச்சத்தக்க குரலின் இனிமையிலும்,
கீறு மையார் முடித்த குழலாலே (keeRu maiyAr mudiththa kuzhalAlE) : and attracted by their beautiful dark hair, neatly parted, with the braid neatly tucked, வகிடு எடுத்த, கரிய நிறமுள்ள, வாரி முடிக்கப்பட்ட கூந்தலினாலும்,
நீதி இலாது அழித்தும் உழலாதே (needhiyilAdhu azhiththum uzhalAdhE) : I have been doing immoral things, and before I degenerate roaming around like this, நீதி என்பதே இல்லாத வகையில் பொருளையும் நேரத்தையும் அழித்து அடியேன் உழன்று வீணாகாத வண்ணம்,
நீ மயிலேறி உற்று வர வேணும் (nee mayil Eri utru varavENum) : You have to come to my rescue mounted on Your peacock! நீ மயில் மீது ஏறி மனது வைத்து வர வேண்டுகிறேன்.
சூதமர் சூரர் உட்க பொரு சூரா (sUdhamar sUrar utka poru sUrA) : The demons (asuras) full of evil thoughts were afraid when You fought and won over them! சூது - வஞ்சனை. சூதான எண்ணங்கள் நிறைந்த சூரர்கள் பயப்படும்படி போர் செய்த சூரனே,
சூது - சூதம், அமர் சூரர் - எனப் பிரித்து, மாமரமாய் நின்ற சூரபதுமன் என்றும் பொருள் கொள்ளலாம்.
சோண கிரீயில் உற்ற குமரேசா (sONagireeyil utra kumarEsA) : You have Your abode at SoNagiri (thiruvaNNAmalai)! (சோணகிரி) திருவண்ணாமலையில் வாழும் குமரேசனே,
ஆதியர் காது ஒருச்சொல் அருள்வோனே (Adhiyar kAdho ruchchol aruLvOnE) : Into the ears of the Foremost DEvA (Lord SivA) You preached the unique ManthrA (OM)! ஆதிதேவர் சிவனது காதில் ஒப்பற்ற பிரணவச்சொல்லை ஓதியவனே,
ஆனை முகார் கனிட்ட பெருமாளே. (Anai mukAr kanishta perumALE.) : You are the younger brother of elephant-faced GaNapathi, Oh Great One! யானைமுகக் கணபதிக்கு கனிஷ்ட (தம்பியான) பெருமாளே.
Comments
Post a Comment