452. இருவினை அஞ்ச


ராகம் : பூர்விகல்யாணிமிஸ்ரசாபு (3½) 2 + 1½
இருவினை யஞ்ச மலவகை மங்க
இருள்பிணி மங்கமயிலேறி
இனவரு ளன்பு மொழியக டம்பு
வினதக முங்கொ டளிபாடக்
கரிமுக னெம்பி முருகனெ னண்டர்
களிமலர் சிந்தஅடியேன்முன்
கருணைபொ ழிந்து முகமும லர்ந்து
கடுகிந டங்கடருள்வாயே
திரிபுர மங்க மதனுடல் மங்க
திகழ்நகை கொண்டவிடையேறிச்
சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு
திகழந டஞ்செய்தெமையீண
அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை
அமலன்ம கிழ்ந்தகுருநாதா
அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை
அமளிந லங்கொள் பெருமாளே.

Learn The Song



Raga Poorvikalyani (Janyam of 53rd mela Gamanashrama)

Arohanam: S R1 G3 M2 P D2 P S    Avarohanam: S N3 D2 P M2 G3 R1 S

Paraphrase

தேவர்கள் மலர் மாரி பொழிய, அருமை தம்பி எதிர் கொண்டழைக்க மயிலேறி முருகன் ஆடும் நடனத்துடன் அவன் அணிந்திருக்கும் கடப்ப மலரின் உள் இருந்து வண்டுகள் ரீங்காரமிடும் போது பிறக்கும் தாளக்கட்டுடனான இசையொலிகள் அடியார்கள் உடலுக்குள் ஊடுருவும்போது அவர்கள் உடலும் அவற்றின் சுருதியில் அனுநாதம் செய்கிறது. ஆழ்மனதும் அந்த அதிர்வுகளுக்கு ஆட்பட்டு உடலுடன் ஒத்ததிர்வு செய்து பிரபஞ்சத்தில் ஒலிக்கும் அலாதியான அந்த அனாதி நாதத்துடன் ஒன்றிப் போகிறது.

இருவினை அஞ்ச (iruvinai anja) : Scaring away both my karmas (good deeds and bad deeds), நல்வினை, தீவினை இரண்டுமே அஞ்சி ஒழிய,

மலவகை மங்க (malavagai manga) : driving all my faults and defects out of sight, and மலக் கூட்டங்கள் (மாசுகள்) மங்கி அழிய,

இருள் பிணி மங்க (iruL piNi manga) : making my ignorance and diseases disappear, அஞ்ஞானமும், நோய்களும் அகல,

மயிலேறி (mayil ERi) : You must come riding on Your peacock, நீ மயில் வாகனத்தில் ஏறிவந்து,

இனவருள் அன்பு மொழிய (inavaruL anbu mozhiya) : speaking all graceful and kind words to me; அருள் வாக்குகளும், அன்பான மொழிகளும் கூற, இனவு (inavu) : kind;

கடம்புவின் அது அகமும் / அதகமும் கொடு அளிபாட (kadambuvin athu agamum (or athagamum) kodu aLipAda) : Beetle seated inside the Kadappa flowers hum / beetles hum around Your kadappa flowers seeking the life-sustaining nectar; கடப்ப மலரின் உள் இருந்து வண்டுகள் இனிது பாடவும் / உன் கடப்பமலரின் உயிர்தரு மருந்தாம் தேனைச்சுற்றி வண்டுகள் ரீங்காரம் செய்யவும், அதகம் (athagam) : A medicine;

கரி முகன் எம்பி முருகன் என (kari mugan embi murugan ena) : Elephant-faced Ganapathi will call You fondly "Oh my younger brother, Muruga"; யானைமுகன் கணபதி 'என் தம்பியே, முருகா' என்றழைக்க, எம்பி (embi) : எமக்குப் பின் பிறந்தவன், என் தம்பி

அண்டர் களி மலர் சிந்த (aNdar kaLimalar sindha) : DEvAs in heaven will happily shower flowers happily; தேவர்கள் மகிழ்ந்து மலர் மாரி பொழிய,

அடியேன் முன் கருணை பொழிந்து முகமும் மலர்ந்து (adiyEn mun karuNai pozhindhu mugamum malarndhu) : and You must appear before me pouring Your Grace over me and with a bright smile, என் முன்னே கருணை மிகக் காட்டி மலர்ந்த முகத்தோடு

கடுகி நடம் கொடு அருள்வாயே (kadugi nadam kod aruLvAyE) : as fast as You can in Your dancing pose! வேகமாக நடனம் செய்தவாறு வந்து அருள் புரியவேண்டும்.

திரிபுர மங்க மதனுடல் மங்க (thiripura manga madhan udal manga) : Thiripuram (Asuras' abode) was burnt down and so also was Manmathan's (Love God) body திரிபுரம் அழியவும், மன்மதனின் உடல் எரியவும்,

திகழ் நகை கொண்ட விடையேறிச் சிவம் (thigazh nagai koNda vidaiyERi sivan) : by a smile from Sivan, the One who mounts the Bull, விளங்கும் புன்சிரிப்பைச் சிரித்தே எரித்த ரிஷப வாகனம் ஏறும் சிவபெருமான்

வெளி அங்கண் அருள் குடி கொண்டு (veLi angaN aruLkudi koNdu) : and who appears as a Cosmic Light, பரவெளியில் திருவருளோடு வீற்றிருந்து,

திகழ நடம் செய்து (thigazha natam seydhu) : dancing gracefully; விளங்க நடனம் செய்து,

எமை ஈண் அரசி இடம் கொள (emai eeNa arasi idam koL) : He also takes Mother Goddess on the left side of His body; எம்மைப் பெற்ற தேவியை இடது பாகத்தில் ஏற்றுக்கொண்டு,

மழுவுடை எந்தை அமலன் மகிழ்ந்த குருநாதா (mazhuvudai endhai amalan magizhndha gurunAthA) : in one arm, He carries mazhu (pick-axe); and Our Father Sivan, the spotless one, is thrilled about You, His Master! மழு ஆயுதத்தை ஏந்திய எம் தந்தை மாசற்றவன் மகிழ்ச்சியடைந்த குருநாதனே,

அருணை விலங்கல் மகிழ் குற மங்கை (aruNai vilangal magizh kuRa mangai) : At the mount of ThiruvaNNAmalai, VaLLi, the damsel of KuRavAs, is happy because திருஅண்ணாமலைக் குன்றிலே மகிழும் குறமங்கையின், விலங்கல்(vilangal) : a hill, or mountain,

அமளி நலம் கொள் பெருமாளே. (amaLi nalam koL perumALE.) : she shares her flowery bed with You, Oh Great One! மலர்ப் படுக்கையிலே மனமகிழும் பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே