449. இரவியும் மதியும்



ராகம்: குந்தலவராளி மிஸ்ரசாபு 2 + 1½ (3½)
இரவியு மதியுந் தெரிவுற எழுமம்
புவிதனி லினமொன்றிடுமாதும்
எழில்புதல் வருநின் றழுதுள முருகும்
மிடர்கொடு நடலம்பலகூறக்
கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண்
டுயிரினை நமனுங்கருதாமுன்
கலைகொடு பலதுன் பமுமக லிடநின்
கழலிணை கருதும்படிபாராய்
திருமரு வியதிண் புயனயன் விரியெண்
டிசைகிடு கிடவந் திடுசூரன்
திணிபுய மதுசிந் திடஅலை கடலஞ்
சிடவலி யொடுகன் றிடும்வேலா
அருமறை யவரந் தரமுறை பவரன்
புடையவ ருயஅன்றறமேவும்
அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்
கருணையி லுறையும்பெருமாளே.

Learn The Song


Raga Kuntalavarali (Janyam of 28th mela Hari Kambhoji)

Arohanam: S M1 P D2 N2 D2 S    Avarohanam: S N2 D2 P M1 S

Paraphrase

Saint Arunagirinathar has described the death scene in many of his songs. Here, the beloved wife, children and other relatives gather around the bed crying piteously, as the dark Yama approaches. The poet asserts that all intellectual pursuits and scholarliness bring only miseries and come to a nought at this juncture. Only His feet can bring us salvation.

இரவியு மதியும் தெரிவுற எழும் அம் புவிதனில் ( iraviyu mathiyum thoivuRa ezhum am puvithanil) : In this world, where the sun and moon shine visibly. சூரியனும், சந்திரனும் தெரியும்படி விளங்கும் இப்பூமியில்

இனம் ஒன்றிடு மாதும் எழில் புதல்வரும் (inam onRidu mAthum ezhil puthalvarum) : the close relatives like the wife and lovely children சுற்றம் என்று பொருந்தி வரும் மனைவியும் அழகிய மக்களும்

நின்று அழுது உளம் உருகும் (ninRu azhuthu uLam urugum) : stand by my side, and cry uttering heart-rendering words உடன் நின்று அழுது, உள்ளம் உருகும்படியான

இடர் கொடு நடலம் பல கூற (idar kodu nadalam pala kURa) : full of grief and sometimes speak harshly too! வருத்தத்துடன் துன்ப மொழிகள் பல சொல்ல, நடலம் (nadalam) : ostentation, ஒய்யாரம், செருக்கு, அதிநாகரிகம் காட்டுகை, பாசாங்கு

கருகிய உருவம் கொடு கனல் விழி கொண்டு (karugiya uruvam kodu kanal vizhi koNdu) : He has dark scary body and eyes spitting fire; கறுத்த உருவமும் நெருப்பு வீசும் கண்களுடனும் உள்ள;

உயிரினை நமனும் கருதா முன் (uyirinai namanum karuthA mun) : before that Yaman (God of Death) nears me on a mission to snatch my life யமனும் என் உயிரைக் கவர்ந்து செல்லக் கருதி வருவதற்கு முன்பாக,

கலை கொடு பல துன்பமும் அகலிட (kalai kodu pala thunpamum agalida) : I want all the arts I have learned and all my miseries to be erased altogether; and for that யான் கற்ற பல கலைகளும், என் துயரங்களும் ஒருங்கே நீங்கிட

நின் கழலிணை கருதும் படி பாராய் (nin kazhaliNai karuthum padi pArAAy) : You have to cast Your glance of grace at me so that I could contemplate only Your Lotus Feet! உன் திருவடிகளையே யான் தியானிக்கும்படி கண் பார்த்தருள்வாயாக.

திரு மருவிய திண் புயன் அயன் (thiru maruviya thiN buyan ayan) : Broad-shouldered Vishnu (who holds Lakshmi in His heart), BrahmA, திருமகளை மார்பில் வைத்த திண்ணிய தோளினன் திருமாலும், பிரமனும்,

விரி எண் திசை கிடுகிட வந்திடு சூரன் (viri eN disai kidukida vanthidu sUran) : and people in the wide world from all eight directions were trembling when SUran came to the battlefield; பரந்த எண் திசையிலுள்ள யாவரும் நடுநடுங்க வந்த சூரனுடைய

திணி புயமது சிந்திட அலை கடல் அஞ்சிட (thiNi puyamathu sinthida alai kadal anjida) : and that SUran's strong shoulders were cut and scattered into pieces and the wavy seas were scared away வலிமையான புயங்கள் அறுபட்டு விழ, அலை வீசும் கடல் பயப்படுமாறு

வலியொடு கன்றிடும் வேலா ( valiyodu kanRidumvElA) : when You with Your Spear and valour showed Your rage! வலிமையோடு கோபித்த வேலனே, கன்றுதல் (kanRuthal) : to go red (in anger);

அருமறையவர் அந்தரம் உறைபவர் (arumaRaiyavar antharam uRaipavar) : Great scholars who have mastered the rare scriptures, all the DEvAs in Heaven, அரிய வேதங்களில் வல்லவரும், வானில் உறையும் தேவர்களும்,

அன்புடையவர் உ(ய்)ய (anbudaiyavar u(y)ya) : and all Your beloved devotees prosper hailing You! உன்னிடம் அன்பு மிகுந்த அடியார்களும் பிழைக்கும் வண்ணம்,

அன்று அற மேவும் அரிவையும் (anRu aRamEvum arivaiyum) : In those days, DEvi PArvathi performed thirty-two kinds of religious duties; அன்று முப்பத்திரண்டு அறங்களையும் விரும்பிச் செய்த தேவி பார்வதியை

ஒரு பங்கு இடமுடையவர் தங்கு (oru pangu idam udaiyavar thangu) : and She was given the left side of His body by Lord SivA. They both reside at தம் ஒரு பாகத்தில் இடப்பக்கமாகக் கொண்டவரான சிவபிரான் தங்கும்

அருணையில் உறையும் பெருமாளே. (aruNaiyil uRaiyum perumALE.) : ThiruvaNNAmalai, which is Your abode, Oh Great One! திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

See Also

  1. விரகொடு வளை
  2. கருகி அறிவு
  3. முனை அழிந்தது
  4. பஞ்ச பாதக
  5. பரியகைப் பாசம்
  6. கட்டழகு விட்டு
  7. செனித்திடும்
  8. தமர குரங்களும்

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே