457. கருணை சிறிதுமில்
Learn The Song
Raga Hamsanandi (Janyam of 53rd mela Gamanashrama)
Arohanam: S R1 G3 M2 D2 N3 S Avarohanam: S N3 D2 M2 G3 R1 SParaphrase
கருணை சிறிதும் இல் பறி தலை நிசிசரர் (karuNai siridhum il paRi thalai nisicharar) : Totally lacking compassion, those demon-like folks resort to plucking hairs; கருணை என்பதே சிறிதும் இல்லாது, தலை மயிர் பறிப்பவரும் ('பாயன்றியுடாப் பேதைகள் கேசம் பறிகோப்பாளிகள்' (தவர் வாள்), அரக்கர்களுக்கு ஒப்பானவரும்,
சமணர் ஒருவனைக் குருவாக நியமிக்கும்போது ஏனைய குருமார்கள் அவனைச் சூழ்ந்து நின்று ஆளுக்கு ஒன்றாக தலைமயிரைப் பறிப்பார்கள்..
பிசித அசன மறவர் இவர் முதலிய ( pisidha asana maRavar ivar mudhaliya) : These ChamaNas, who are like hunters, devour meat, புலால் உண்ணும் வேடர்களை ஒத்தவரும் ஆகிய சமணர் முதலிய
கலக விபரித வெகு பர சமயிகள் பலர் கூடி (kalaga viparitha vegupara samayigal palar kUdi) : and various other religious fanatics, gather to start insurgence, fan controversy and instigate violence;
கல கல என நெறி முறை கெட முறை முறை கதறி (galagalena neRi muRai keda muRai muRai kadhaRi) : they shout immoral slogans, break laws, and yell whenever their turn comes for speech; ஆரவாரம் செய்து நீதி முறை கெட்டு, அவரவர் முறை வரும் போதெல்லாம் பெருங் கூச்சலிட்டுக் கதறி,
வதறிய குதறிய கலை கொடு கருத அரியதை (vadhaRiya kudhaRiya kalaikodu karudha ariyadhai) : they argue endlessly, using abusive language about something that cannot be discerned even by classic texts. தங்களுடைய சமயமும் தாம் கூறுவதது மட்டுமே முறை என்றும், ஓ என்று வாதிட்டுப் பேசி, வாயாடி நெறிகெட்டுக் நிலை குலைகின்ற கலைகளைக் கொண்டு கருத முடியாத செம்பொருளை; கலை = சாத்திரம், கல்வி;
விழி புனல் வர மொழி குழறா அன்பு உருகி (vizhipunal varamozhi kuzhaRA anburugi) : With eyes brimming with tears, speech staggering and heart overwhelmed with love, கண்களில் நீர் வர, பேச்சுக் குழறி, அன்புடன் மனம் உருகி
உனது அருள் பரவு வகை வரில் (unadhu aruL paravu vagai varil) : if I could attain such a mental state and praise Your glory, உன் திருவருளைப் போற்றும் மன நிலை வந்தால்,
விரகு ஒழியில் உலக இயல் பிணை விடில் (viragu ozhiyil ulagiyal piNai vidil) : if I destroy deceitful thinking, if my attachment to materialistic things of this world is severed, தந்திர புத்தி ஒழிந்தால், உலக சம்பந்தமான கட்டுக்கள் விட்டால், விரகு ஒழியில் = வஞ்சனை நீங்கினால், பிணை = பற்று;
உரை செயல் உணர்வு கெடில் (urai seyal uNarvu kedil) : if my speech, action and thought are all wiped out, மனம், வாக்கு, காயம் இம் மூன்றின் தொழிலும் அழிந்தால் (கருவிகரணங்கலால் அறியும் பசுபோதம் நீங்கினால்);
உயிர் புணர் இருவினை அளறு அது போக உதறில் (uyir puNar iruvinai aLaRu adhu poga udhaRil) : if I can shake off the sludge of two kinds of deeds that govern my life, உயிரைச் சார்ந்து ஆட்டுவிக்கும் இரண்டு வினைகளாகிய சேறு போகும்படி உதறி விலக்கினால்,
எனது எனும் மலம் அறில் (enadhu enum alam aRil) : If I crush the offence of possessiveness in me, எனது என்னும் ஆசையாகிய குற்றம் அற்றுப் போனால்,
அறிவினில் பெறல் எளிது என மறை பறை அறைவது ( aRivinil peRal eLidhu ena maRai paRai aRaivadhu) : then the True Wisdom or Knowledge that is easy to acquire, as asserted emphatically by the vEdAs; அறிவில் எளிதாகப் பெறுதல் முடியும் என்று வேதங்கள் பறையறைந்து சொல்லுவதான அதனை,
ஒரு உதயம் மரணம் இல் பொருளினை அருளுவது ஒரு நாளே (oru udhaya maraNam il poruLinai aruLuvadhu orunALE) : then I can behold the Eternal Matter that has no beginning or end. Will You shower that Divine Grace on me? ஒப்பற்ற, தோற்றமும் முடிவும் இல்லாத பொருளை அடியேனுக்கு நீ அருள் செய்யும் ஒரு நாள் கிட்டுமா?
தருண சத தள பரிமள பரிபுர சரணி (tharuNa sathadhaLa parimaLa paripura charaNi) : Her fragrant lotus feet are for ever youthful, adorned by anklets;என்றும் இளமையோடு கூடியதாய், தாமரை போன்றதாய், நறு மணம் வீசுவதாய், சிலம்பு அணிந்ததாயுள்ள திருவடிகளை உடையவள்,
தமனிய தநு தரி திரி புர தகனி (dhamaniya dhanudhari thiripura dhahani) : She took in Her hand the golden Mount Meru as a bow ('dhanu') OR she has golden complexion ('tanu' or body) and burnt down Thiripuram; பொன் மயமான மேருவை வில்லாக ('धनु') ஏந்தியவள் அல்லது அவள் பொன்னிறமானவள் ('तनु'), திரி புரத்தை எரித்தவள்,
தமனிய தனு தரி धमनि = தமனி= artery, பொதுவாக குழாய்(tube) என்பதோடு மஞ்சள் (turmeric) என்ற பொருளுடைய சொல். இதன் அடியாகப் பிறக்கும் தமிழ்ச் சொல் 'தமனியம்' என்பதற்கு 'பொன்' என்ற பொருள். ஸம்ஸ்க்ருத இலக்கணப்படி இச்சொல் 'தபனீய' என்பதன் திரிபு. அதன் பொருள் ''சூடேற்றப்பட்டது'' 'காய்ச்சப்பட்பது', 'தீயில் இடப்பட்டது. சிறப்பாக, தீயில் பன்முறை இடப்படுவதால் 'தங்கம்' என்ற பொருள். இந்தப் பொருளையே உரையாசிரியர்கள் கொண்டு 'தமனிய தனு தரி' धमनीय/ तपनीय तनु धरी என்பதற்கு 'பொன்மேனியாள்' என உரைத்தனர். ஆனால் இன்னொரு சிறப்புப் பொருளையும் கொள்ளலாம். உமாதேவி சிவனைக் குறித்துத் தவம் புரியும் உக்கிரமான தவத்தின் அதிக வெப்பத்தால் அவளது திருமேனி பழுக்கக் காய்ச்சிய உலோகம் போல தீப்பிழம்பாய் ஒளிர்ந்தது (ஜ்வலித்தது) எனக் கவித்துவ நயத்தோடு 'துர்கா ஸூக்தம் 'தாம் அக்னி வர்ணம் தபஸா ஜ்வலந்தீம்' என முழங்குகிறது. இதன்படியும் தபனீய (தமனிய) தனு தரி என்பது அம்பாளின் வர்ணனையாகப் பொருந்துகிறது.
கவுரி பவதி பகவதி பயிரவி சூலி (gavuri bavathi bagavathi bayiravi sUli) : She is Gowri, PArvathi, Bhagavathi, Bhairavi and one holding the trident in Her hand;கெளரி, பார்வதி, பகவதி, பயிரவி, சூலத்தைக் கையில் ஏந்தியவள், பகவதி = ஆறு கல்யாண குணங்களை உடையவள்;
சடில தரி அநுபவை உமை திரி புரை(jatiladhari anubavai umai thiripurai) : She has matted hair; She has experienced all kinds of bliss; She is Goddess UmA; She is ThiripurA!சடை தரித்தவள், போகங்களை நுகர்பவள், உமா தேவி, திரிபுரை, அநுபவை = நல்வினை தீவினை உணர்ச்சிகளானவள்;
சகல புவனமும் உதவிய பதிவ்ருதை ( sakala buvanamum udhaviya pathivruthai) : She has created the entire universe; She is devoted to Her Consort;எல்லா உலகங்களையும் ஈன்றருளிய பதிவிரதை,
சமய முதல்வி தனய பகிரதி சுத (samaya mudhalvi thanaiya bagirathi sutha) : She presides over all religions; and You are the son of that PArvathi! You are also the son of Bhagirathi (River Gangai)! எல்லா சமயங்களுக்கும் தலைவியும் ஆன பார்வதியின் மகனே, பாகீரதியின் (கங்கையின்) மகனே,
சத கோடி அருண ரவியினும் அழகிய ப்ரபைவிடு கருணை (satha kOdi aruNa raviyinum azhagiya prabai vidu karuNai) : You are Compassion personified, dazzling with a brilliant radiance greater than that of millions of red suns! நூறு கோடி சிவந்த சூரியர்களை விட அழகான ஒளியை வீசும் கருணையே,
வருணித தனுபர குருபர (varuNitha dhanupara gurupara) : You have a highly decorated body, Oh Supreme Master! அலங்கார உருவான உடலை உடையவனே, குருபரனே, தனு பர = நல்ல நிறமுடைய திருமேனியை உடைய தலைவரே!
அருணை நகர் உறை சரவண குரவு அணி புய வேளே (aruNai nagaruRai saravaNa kuravaNi buya vELE) : You are seated in ThiruvaNNAmalai, Oh Saravanabava! Your shoulders are adorned with garlands of KurA flowers, Oh Great Leader! திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் சரவணனே, குரா மலரை அணிந்த புயங்களை உடைய தலைவனே,
அடவி சரர் குல மரகத வனிதையும் ( atavi charar kula marakatha vanithaiyum ) : VaLLi, the emerald-green complexioned damsel of the hunters in the forest, காட்டில் சஞ்சரிக்கும் வேடர் குலத்து, பச்சை நிறம் உள்ள பெண்ணான வள்ளியும்,
அமரர் குமரியும் அனவரதமும் அருகு அழகு பெற நிலை பெற (amarar kumariyum anavarathamum arugu azhagu peRa nilai peRa) : and DEvayAnai, the daughter of the celestials, remain with exquisite beauty for ever on either side of You, தேவர் குமரியான தேவயானையும் எப்போதும் இரு பக்கத்திலும் அழகு விளங்க நிலை பெற்றிருக்க,
வரம் அருளிய பெருமாளே. (varam aruLiya perumALE.) : were both blessed by You to Oh Great One! அவர்களுக்கு வரம் தந்தருளிய பெருமாளே.
Comments
Post a Comment