280. தவர் வாள்

ராகம் : மோகனம்தாளம்: சதுச்ர ரூபகம் (6)
தவர்வாட் டோமர சூலந் தரியாக் காதிய சூருந்
தணியாச் சாகர மேழுங் கிரியேழுஞ்
சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலு நீலந்
தரிகூத் தாடிய மாவுந் தினைகாவல்
துவர்வாய்க் கானவர் மானுஞ் சுரநாட் டாளொரு தேனுந்
துணையாத் தாழ்வற வாழும்பெரியோனே
துணையாய்க் காவல்செய் வாயென் றுணராப் பாவிகள் பாலுந்
தொலையாப் பாடலை யானும்புகல்வேனோ
பவமாய்த் தாணது வாகும் பனைகாய்த் தேமண நாறும்
பழமாய்ப் பார்மிசை வீழும் படிவேதம்
படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள் கேசம்
பறிகோப் பாளிகள் யாருங் கழுவேறச்
சிவமாய்த் தேனமுதூறுந் திருவாக் காலொளி சேர்வெண்
டிருநீற் றாலம ராடுஞ்சிறியோனே
செழுநீர்ச் சேய்நதி யாரங் கொழியாக் கோமளம் வீசுந்
திருவோத் தூர்தனில் மேவும் பெருமாளே.

Learn The Song



Know The Raga Mohanam (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S R2 G3 P D2 S    Avarohanam: S D2 P G3 R2 S

Paraphrase

தவர் வாள் தோமர சூலந் தரியாக் காதிய சூரும் தணியாச் சாகரம் ஏழும் கிரி ஏழும் சருகாக் காய் கதிர் வேலும் (thavarvAt tOmara sUlan thariyAk kAdhiya sUrum thaNiyA sAgaram Ezhum giri Ezhum sarugAk kAy kadhir vElum) : The bright vel or spear that destroyed the demon who was armed with a bow, sword, mace and trident, and burned like dry leaves, the seven oceans that were filled to the brink and the seven mountains; வில், வாள், தண்டாயுதம், சூலம் முதலியவைகளை தரித்து கொலைகளைச் செய்த சூரனையும், வற்றாத ஏழு கடல்களும், ஏழு மலைகளும் சருகைப் போல உலர்ந்து போகும்படி எரித்து அழித்த ஒளி வேலும்; தவர் (thavar) : bow; தோமரம் (thOmaram) : தண்டாயுதம்; காதிய (kAdhiya) = கொலைகளைச் செய்த;

பொரு கால் சேவலு (poru kAl sEvalu) : the Rooster with legs capable of fighting; சண்டை செய்கின்ற காலை உடைய சேவலும்,

நீலந் தரி கூத்தாடிய மாவும் ( neelan thari kUth adiya mAvum) : the horse-like dancing peacock which is of bluish hue; நீல நிறம் கொண்டு நடனம் செய்ய வல்ல மயிலாகிய குதிரையும், மா(mA) : horse;

தினை காவல் துவர் வாய்க் கானவர் மானும் (thinai kAval thuvar vAyk kAnavar mAnum ) : VaLLi, the deer-like damsel with lips of coral colour, and dwelling in the forest, guarding the millet-field; தினைப் புனம் காத்து வந்த பவளம் போன்ற வாயைக் கொண்ட வேடுவர்களுடைய மான் போன்ற வள்ளியையும் , துவர் (thuvar) : coral, பவளம்; கானவர் (kaanavar) : forest-dweller;

சுர நாட்டாளொரு தேனும் (sura nAttALoru thEnum) : the honey-like sweet damsel of the celestials, the unique DEvayAnai, விண்ணுலக மங்கையாகிய தேன் போன்ற தேவசேனையையும்

துணையாத் தாழ்வற வாழும் பெரியோனே (thuNaiyAth thAzhvaRa vAzhum periyOnE) : You keep all of them for Your company, Oh Great One, Your life is flawless; துணையாகக் கொண்டு ஒரு குறையும் இன்றி வாழும் கோமானே!

துணையாய்க் காவல் செய்வாய் என்று உணராப் பாவிகள் பாலும் தொலையாப் பாடலை யானும் புகல்வேனோ (thuNaiyAy kAval seyvAy endru uNarA pAvigaL pAlum tholaiyAp pAdalai yAnum pugalvEnO ) : Should I sing immortal songs to those who never realise that You shall protect them like a guardian? நீ துணையாகக் காவல் செய்து ரக்ஷிப்பாய் என்று உணராத பாவிகளிடத்தில் சென்று அழிவில்லாத அருமையான பாடல்களை நானும் சொல்லித் திரியலாமோ? தொலையாப் பாடல் (tholaiyaa paadal) : immortal songs;

பவ மாய்த்து ஆணது வாகும் பனை (bava mAyththu ANadhu vAgum panai kAyththE) : You terminated the future births of the male palm trees and பவ மாய்த்து (bava maayththu) : பிறப்பை ஒழித்து;

காய்த்தே மண நாறும் பழமாய்ப் பார்மிசை வீழும்படி (maNa nARum pazhamAyp pArmisai veezhum padi) : made them yield aromatic palm fruits which fell down on earth.

The following three lines describe chamaNas (Jain monks) :

வேதம் படியாப் பாதகர் (vEdham padiyAp pAthakar) : The sinners who have never read the scriptures;

பாயன்றி உடாப் பேதைகள் (pAy andriyudAp pEdhaigaL) : those stupid people who wear only mats made of weeds (as clothing)

கேசம் பறி கோப்பாளிகள் (kEsam paRi kOppALigaL) : those clowns who pluck the hair of the fellow monks; கோப்பாளி (kOppALi) : acrobat, கூத்தாடி;

யாரும் கழுவேற (yArum kazhuvERa) : all went to the gallows when (ThirugnAna Sambandhar).

சிவமாய்த் தேன் அமுதூறும் திருவாக்கால் (sivamAyth thEn amudhUrun thiru vAkkAl ) : with songs and speech, full of SivA and sweet like the honey and the nectar,

ஒளி சேர் வெண் திருநீற்றால் அமராடும் சிறியோனே (oLi sErveN thiru neetrAl amarAdum siRiyOnE) : Oh Young One! You, as Sambandhar, conquered them (the Jain monks) in debates with the bright white holy ash (VibUthi),

This temple of Lord Vedapureeswarar at ThiruvOththur is situated on the banks of Cheyyaru river. Concerned about the frequent floods and subsequent damages to the temple, a Murugan devotee raised the banks across the river and planted palm trees. None of the trees could bear fruit since all the trees were male and there wasn't a single female tree. On seeing this, a few jain monks started mocking at the power of Shiva. The worried devotee mentioned this to the visiting Thirugnana sambandar. Thirugnanasambandar sung a Thevara Pathigam and in the end of the pathigam he sang "குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்". Immediately, all the male trees were transformed into female trees and yielded the fruits. On seeing this all jains in that area converted to Saivism. Today we can see the stone palm tree in front of Ambal Sannithi. Poojas are conducted for this tree.

பவ மாய்த்து ....அமராடும் சிறியோனே:
பிறப்பை ஒழித்து, ஆணாக இருந்த பனைமரம் காய்த்து நறுமணம் வீசும் பழங்களாக பூமியின் மீது விழும்படியாக, வேதத்தைப் படிக்காத பாதகர்கள், பாயைத் தவிர வேறு எந்த ஆடையும் உடுக்காத பேதைகள், தலைமயிரைப் பிய்த்துப் பறிக்கும் கூத்தாடிச் சமர்த்தர்கள் ஆகிய சமணர் எல்லாருமாகக் கழுவில் ஏறும்படியாக, சிவமயமானதும், தேனும் அமுதும் ஊறினது போலத் தித்திக்கும் உனது (திருஞானசம்பந்தரது) திருவாக்கினாலும் தேவாரப் பாடல்களினாலும், பெருமை வாய்ந்த வெள்ளைத் திருநீற்றாலும், வாதுப் போர் புரிந்த இளையோனே
,

செழுநீர்ச் சேய் நதி ஆரம் கொழியாக் (sezhuneer sEy nadhiyAram kozhiyA ) : The river sEy has plenteous water, throwing into its banks garlands of pearls, ஆரம் (Aram) : pearls;

கோமளம் வீசும் திருவோத்தூர்தனில் மேவும் பெருமாளே. (kOmaLam veesun thiruvOth thUr thanail mEvum perumALE.) : at this beautiful place, ThiruvOththUr, which is Your abode, Oh Great One.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே