264. இபமாந்தர்


ராகம் : காம்போதி அங்கதாளம் (6)
2½ + 3½
இபமாந்தர் சக்ர பதிசெறி
படையாண்டு சக்ர வரிசைக
ளிடவாழ்ந்து திக்கு விசயமணரசாகி
இறுமாந்து வட்ட வணைமிசை
விரிசார்ந்து வெற்றி மலர்தொடை
யெழிலார்ந்த பட்டி வகைபரிமளலேபந்
தபனாங்க ரத்ந வணிகல
னிவைசேர்ந்த விச்சு வடிவது
தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழுவியபோது
தழல்தாங்கொ ளுத்தி யிடவொரு
பிடிசாம்பல் பட்ட தறிகிலர்
தனவாஞ்சை மிக்கு னடிதொழநினையாரே
உபசாந்த சித்த குருகுல
பவபாண்ட வர்க்கு வரதன்மை
யுருவோன்ப்ர சித்த நெடியவன் ரிஷிகேசன்
உலகீன்ற பச்சை யுமையணன்
வடவேங்க டத்தி லுறைபவ
னுயர்சார்ங்க சக்ர கரதலன்மருகோனே
த்ரிபுராந்த கற்கு வரசுத
ரதிகாந்தன் மைத்து னமுருக
திறல்பூண்ட சுப்ர மணியஷண்முகவேலா
திரைபாய்ந்த பத்ம தடவய
லியில்வேந்த முத்தி யருள்தரு
திருவாஞ்சி யத்தி லமரர்கள்பெருமாளே.

Learn The Song




Paraphrase

இபமாந்தர் சக்ர பதி ( ibamAndhar chakra pathi) : As an emperor with armies of elephants and soldiers; இபம்(ibam) : elephant; மாந்தர்(mAnthar) : people;

செறி படையாண்டு (seRi padai ANdu) : with the whole regimen at his command;

சக்ர வரிசைகளிட வாழ்ந்து திக்கு விசய மண் அரசாகி (chakra varisaigaLida vAzhndhu dhikku vijaya maN arasAgi) : and held command with the wheel of power and became world emperor after establishing dominion in all the directions; சக்ர வரிசைகள் இட (chakra varisaigaL ida) : carrying on work by royal command, தனது ஆணைப்படி வேலை முறைகளை நடத்த ; திக்கு விசய மண் அரசாகி (dhikku vijaya maN arasAgi) : become victorious in all directions and become the world emperor, திக்கு விசயம் செய்து உலகுக்கு அரசனாகி.

இறுமாந்து வட்ட அணைமிசை விரி சார்ந்து (iRumAndhu vatta aNai misai viri sArndhu) : he reigned proudly, reclining on a round cushion,

வெற்றி மலர்தொடை (vetri malar thodai) : adorned with garlands of victory,

எழிலார்ந்த பட்டி வகை பரிமள லேபம் (ezhilArndha patti vagai parimaLa lEpam) : clad in dazzling royal attires and with fragrant perfumes; பட்டி வகை (patti vagai) : silk clothes; பட்டு ஆடை வகைகள்;

தபனாங்க ரத்ந அணிகலன் (thabanAnga rathna aNikalan) : and wearing jewels with precious gems glistening like the bright sun. தபனம் (thabanam ) : heat; தபனம் அங்க (thabanam anga) : imbibing light from the sun, சூரிய ஒளியைத் தன்னகத்தே கொண்ட;

இவை சேர்ந்த விச்சு வடிவது (ivai sErndha vichchu vadivadhu) : All these constituted this emperor who gained his form from a human seed! விச்சு (vichchu) : seed, வித்து ;

தமர் சூழ்ந்து மிக்க உயிர் நழுவிய போது (thamar sUzhndhu mikka uyir nazhuviya pOdhu) : Near and dear ones thronged his bedside as he was about to breathe his last.

தழல் தாம் கொளுத்தி இட (thazhal thAng koLuththi ida) : His body was later consumed by fire,

ஒரு பிடி சாம்பல் பட்டது அறிகிலர் (oru pidi sAmbal pattadhu aRigilar) : An emperor reduced to a handful of ash with no one realizing this (the ephemeral nature of life)!

தன வாஞ்சை மிக்கு உனடி தொழ நினையாரே (dhana vAnchai mikkunadi thozha ninaiyArE) : People who hanker after riches never care to worship Your feet!

உபசாந்த சித்த குருகுல பவ (upasAntha chiththa kurukula bava) : These people of Kuru clan with calm mind – உபசாந்த (upasantha) : serene, calm, மன அமைதி கொண்ட;

பாண்டவர்க்கு வரதன் (pANdavarkku varadhan) : The five PAndavAs – to whom He granted boons;

மை உருவோன் ப்ரசித்த நெடியவன் ரிஷிகேசன் (mai uruvOn prasidhdha nediyavan rishikEsan) : He was dark complexioned; He was the tallest one (Thrivikraman) of great fame; He was Hrishikesan, having conquered his sensory organs;

உலகீன்ற பச்சை உமை அணன் (ulageendra pachchai umai aNan) : He was the elder brother of UmAdEvi of green hue, who created the entire universe;

வடவேங்கடத்தில் உறைபவன் (vada vEnkataththil uRaibavan) : His favourite abode is the Northern Mount VEnkatam (Thirumalai);

உயர்சார்ங்க சக்ர கரதலன் மருகோனே (uyar sArnga chakra karathalan marugOnE) : He holds the famous weapons of SArangam (bow) and Sudharsanam (Chakram); and He is the great Vishnu, and You are His nephew!

த்ரிபுராந்தகற்கு வரசுத (thripurAntha kaRku vara sutha) : You are also the famous son of SivA, who destroyed Thiripuram!

ரதிகாந்தன் மைத்துன முருக ( rathi kAnthan maiththuna muruga) : You are the cousin of Manmathan, consort of Rathi, Oh MurugA! (Manmathan is the son of Vishnu. Murugan is Vishnu's nephew. Murugan is thus Manmathan's cousin.)

திறல் பூண்ட சுப்ரமணிய ஷண்முகவேலா (thiRal pUNda subramaNiya shaNmuga vElA) : You are the supreme power, Subramaniya, six-faced and with a Spear in hand!

திரை பாய்ந்த பத்ம தட வயலியில் வேந்த (thirai pAyndha padhma thata vayaliyil vEndha) : You are the King of VayalUr which has ponds full of waves and blooming lotuses!

முத்தி அருள்தரு திருவாஞ்சியத்தில் (muththi aruL tharu thiru vAnjiyaththil) : Your abode is ThiruvAnjiyam which confers eternal bliss!

அமரர்கள் பெருமாளே. (amarargaL perumALE.) : You are the Lord of all DEvAs, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே