272. பழியுறு சட்டகமான


ராகம் : கல்யாணி தாளம்: கண்டசாபு (2½)
பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான
பகரும்வினைச் செயல்மாதர்தருமாயப்
படுகுழிபுக் கினிதேறும் வழிதடவித் தெரியாது
பழமைபிதற் றிடுலோகமுழுமூடர்
உழலும்விருப் புடனோது பலசவலைக் கலைதேடி
யொருபயனைத் தெளியாதுவிளியாமுன்
உனகமலப் பதநாடி யுருகியுளத் தமுதூற
உனதுதிருப் புகழோதஅருள்வாயே
தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேரு
திடுதிடெனப் பலபூதர்விதமாகத்
திமிதிமெனப் பொருசூர னெறுநெறெனப் பலதேவர்
ஜெயஜெயெனக் கொதிவேலைவிடுவோனே
அழகுதரித் திடுநீப சரவணவுற் பவவேல
அடல்தருகெற் சிதநீலமயில்வீரா
அருணைதிருத் தணிநாக மலைபழநிப் பதிகோடை
அதிபஇடைக் கழிமேவுபெருமாளே.

Learn The Song




Raga Kalyani (65th Mela)

Arohanam: S R2 G3 M2 P D2 N3 S    Avarohanam: S N3 D2 P M2 G3 R2 S


Paraphrase

பழியுறு சட்டகமான குடிலை எடுத்து (pazhiyuRu sattagamAna kudilai eduththu) : Entering the body which is a cottage functioning as a seat for all sins. சட்டகம் (chattagam) : outline, framework, body;

இழிவான பகரும் வினை செயல் மாதர் தரும் மாய படு குழி (izhivAna pagarum vinai seyal mAdhar tharu mAya padu kuzhi) : and seeking women with foul words and deeds who set up treacherous traps for this body.

புக்கு இனிது ஏறும் வழி தடவி தெரியாது (inidhERum vazhi thadavith theriyAdhu) : Having been trapped, and not knowing the way out of those pits, people grope in the dark.

பழமை பிதற்றிடு(ம்) லோக முழு மூடர் (pazhamai pidhatridu lOka muzhu mUdar) : Such stupid fools of this world talk only about their so-called old values;

உழலும் விருப்புடன் ஓது(ம்) பல சவலை கலை தேடி ( uzhalum virup pudan Odhu pala savalaik kalai thEdi) : and roam about in search of many confusing books. சவலை(savalai) : confusion, மனக் குழப்பம் ;

ஒரு பயனை தெளியாது விளியா முன் (oru payanaith theLiyAdhu viLiyAmun) : Ultimately, they die without deriving any benefit whatsoever. Before I perish like them, விளியா முன் (viLiaa mun) : before dying;

உன கமல பத(ம்) நாடி உருகி உ(ள்)ளத்து அமுது ஊற (una kamalp padha nAdi urugi uLath amudhURa) : I seek Your lotus feet, melting in ecstasy, with the nectar of devotion gushing in my heart.

உனது திருப்புகழ் ஓத அருள்வாயே (unadhu thiruppugazh Odha aruLvAyE) : Do bless me with the capacity to sing Your glory!

தெழி உவரி சலராசி மொகு மொகு என (thezhi uvari jalarAsi mogu mogena) : As the saline water in the ocean simmered, தெழி (thezhi) : roaring; உவரி (uvari) : saline water;

பெரு மேரு திடு திடு என (peru mEru dhidu thidu ena) : as the large mount Meru rumbled and trembled,

பல பூதர் விதமாக திமி திமி என (pala bUthar vidhamAga dhimi dhimi ena) : as various bhUthAs (SivA's armies) jumped about and rejoiced,

பொரு சூரன் நெறு நெறு என (poru sUra neRu neRena) : as the warring SUran (in the disguise of a mango tree) began to crack and collapse,

பல தேவர் ஜெய ஜெய என (pala dhEvar jeya jeyena) : and as the numerous celestials hailed Your victory,

கொதி வேலை விடுவோனே ( kodhi vElai viduvOnE) : You flung the red hot Spear!

அழகு தரித்திடு நீப (azhagu dharith thidu neeba) : You are adorned with the beautiful kadappa garland!

சரவண உற்பவ வேல (saravaNa uRbava vEla) : You emerged from the Pond of SaravaNa! Oh VElA! சரவண உற்பவ(saravana uRbava) : born amidst reeds in the forest (saravana means clump of reeds);

அடல் தரு கெற்சித நீல மயில் வீரா (adal tharu geRjitha neela mayil veerA) : You mount valorously on the blue Peacock, roaring triumphantly! அடல் தரு (adal tharu) : yielding victory; கெற்சித (gerjitha) : roaring;

அருணை திருத்தணி நாக மலை பழநிப் பதி கோடை அதிப (aruNai thiruththaNi nAgamalai pazhanip padhikOdai adhipa) : ThiruvaNNAmalai, ThiruththaNigai, ThiruchchengkOdu, Pazhani and VallakkOttai are some of the places under Your reign!

இடைக் கழிமேவு பெருமாளே. ( idaik kazhi mEvu perumALE.) : You love to reside at Thiruvidaikkazhi, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே