285. ஓலமிட்டு


ராகம்: ஜோன்புரிதாளம்: ஆதி திச்ர நடை
ஓல மிட்டி ரைத்தெ ழுந்த வேலை வட்ட மிட்ட இந்த
ஊர்மு கிற்ற ருக்க ளொன்றுமவராரென்
றூம ரைப்ர சித்த ரென்று மூட ரைச்ச மர்த்த ரென்றும்
ஊன ரைப்ர புக்க ளென்றுமறியாமற்
கோல முத்த மிழ்ப்ர பந்த மால ருக்கு ரைத்த நந்த
கோடி யிச்சை செப்பி வம்பிலுழல்நாயேன்
கோப மற்று மற்று மந்த மோக மற்று னைப்ப ணிந்து
கூடு தற்கு முத்தி யென்றுதருவாயே
வாலை துர்க்கை சக்தி யம்பி லோக கத்தர் பித்தர் பங்கில்
மாது பெற்றெ டுத்து கந்தசிறியோனே
வாரி பொட்டெ ழக்ர வுஞ்சம் வீழ நெட்ட யிற்று ரந்த
வாகை மற்பு யப்ர சண்டமயில்வீரா
ஞால வட்ட முற்ற வுண்டு நாக மெத்தை யிற்று யின்ற
நார ணற்க ருட்சு ரந்தமருகோனே
நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்ம னைக்க ளைந்த
நாக பட்டி னத்த மர்ந்த பெருமாளே.

Learn The Song




Jonpuri (janya rāga of Natabhairavi, shadava sampoorna raga)

Arohanam: S R2 M₁ P D1 N2 Ṡ    Avarohanam: Ṡ N2 D1 P M1 G2 R2 S


Dr. Charulata Mani's Isai PayaNam


Paraphrase

ஓலமிட்டு இரைத்தெழுந்த வேலை வட்டமிட்ட இந்த ஊர் ( Olamittu iraiththu ezhuntha vElai vatta mitta intha Ur) : This town is surrounded by sea having rising waves roaring all the time.

முகில் தருக்கள் ஒன்றும் அவர் யாரென்று (mugil tarukkaL onRum avar yAr enRu) : I roam here in search of wealthy lords who can give alms like the cloud (without expecting anything in return) or like the KaRpaga tree (granting whatever I desire). முகில் ஒன்று = மேகம் போல் (கைம்மாறு கருதாது கொடுக்கும் வள்ளல்கள்) தருக்கள் = (கற்பக மரம்) போன்றவர்கள்

ஊமரை ப்ரசித்தரென்று மூடரைச் சமர்த்தர் என்றும் (Umarai prasiththar enRu mUdarai chamarththar enRum) : Calling dumb ones as famous lords, and utter fools as intelligent,

ஊனரை ப்ரபுக்கள் என்றும் அறியாமல் (Unarai prabukkaL enRum aRiyAmal) : and calling people with defective limbs as handsome lords, I was carrying on ignorantly;

கோல முத்தமிழ் ப்ரபந்த மாலருக்கு உரைத்து (kOla muth thamizh prabantha mAlarukku uraiththu) : I was reciting beautiful poems from the three branches of Tamil to those deluded fools

அநந்த கோடி இச்சை செப்பி வம்பில் உழல் நாயேன் (anantha kOdi icchai seppi vampil uzhal nAyEn) : and narrate millions of my desires to them and I roam about purposelessly like a lowly dog;

கோப மற்று மற்றும் அந்த மோகமற்று (kObam atRum atRum antha mOgam atRu) : I want to give up anger; and further, I want to steer clear of my desires.

உனைப் பணிந்து கூடுதற்கு முத்தி என்று தருவாயே (unai paNinthu kUduthaRku muththi enRu tharuvAyE) : When are You going to grant me Liberation so that I could prostrate before You and attain Your lotus feet?

வாலை துர்க்கை சக்தி அம்பி (vAlai dhurgai sakthi ambi) : She is ever youthful; She is Durga; She is Sakthi; She is the Mother of the Universe;

லோக கத்தர் பித்தர் பங்கில் ( lOga kaththar piththar pangil) : She forms the left half of the body of SivA, who is the crazy Lord of the worlds;

மாது பெற்றெடுத்து உகந்த சிறியோனே (mAthu petReduthth ugantha siRiyOnE ) : and that PArvathi delivered You happily, Oh Young One!

வாரி பொட்டெழ க்ரவுஞ்சம் வீழ ( vAri pottezha kravunjam veezha) : The seas dried up while Mount Krouncha was shattered,

நெட்டயில் துரந்த (nettayil thurantha) : when You threw Your long spear!

வாகை மற்புய ப்ரசண்ட மயில் வீரா (vAgai maR buya prasaNda mayil veerA ) : You were victorious! Your shoulders are strong and fit for wrestling! You mount Your fierce Peacock! வெற்றி பொருந்திய மற்போருக்கு தக்கதான புயங்களை உடைய மயில் வீரனே;

ஞால வட்டம் முற்ற உண்டு (gnAla vatta mutRa uNdu) : He devoured the entire world and other planets;

நாக மெத்தையில் துயின்ற (nAga meththaiyil thuyinRa) : He slumbers on the thick bed of AdhisEshan (Serpent)

நாரணற்கு அருள் சுரந்த மருகோனே (nAraNaRku aruL surantha marugOnE) : and He is NArAyanan (Vishnu). You are His kind nephew who bestowed grace on Him!

நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்மனைக் களைந்த (nAlu dhikkum vetRi koNda sUra pathmanai kaLaintha) : SUra Pathman, who had conquered all worlds in all the four directions, succumbed to You in the battlefield!

நாக பட்டினத்தமர்ந்த பெருமாளே. (nAga pattinathth amarntha perumALE.) : You have Your abode at NAgappattinam, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே