286. விழுதாதெனவே


ராகம் : யமுனா கல்யாணி தாளம்: ஆதி
விழுதா தெனவே கருதா துடலை
வினைசேர் வதுவேபுரிதாக
விருதா வினிலே யுலகா யதமே
லிடவே மடவார்மயலாலே
அழுதா கெடவே அவமா கிடநா
ளடைவே கழியாதுனையோதி
அலர்தா ளடியே னுறவாய் மருவோ
ரழியா வரமேதருவாயே
தொழுதார் வினைவே ரடியோ டறவே
துகள்தீர் பரமேதருதேவா
சுரர்பூபதியே கருணா லயனே
சுகிர்தா வடியார்பெருவாழ்வே
எழுதா மறைமா முடிவே வடிவே
லிறைவா எனையாளுடையோனே
இறைவா எதுதா வதுதா தனையே
இணைநா கையில்வாழ்பெருமாளே.

Learn The Song




Yamuna Kalyani (Janyam of 65th mela Kalyani; Sampoorna Bhashanga)

Arohanam: S R2 G3 M2 P D2 N3 S    Avarohanam: S N3 D2 P M2 G3 M1 R2 S   OR
S N3 D2 P M2 G3 M1 G3 R2 S (M1 anya swara)



Paraphrase

விழு தாது எனவே கருதாது உடலை (vizhu dhAdhu enavE karudhAdh udalai) : Without realizing that this body is nothing but a sperm which fell into a womb (by Divine grace), தாது (thaathu) : sperm, சுக்கிலம்;

வினை சேர்வதுவே புரிதாக (vinai sErvadhuvE puridhAga ) : I have been bent on accumulating bad karma, வினை சேர்வதுவே விரும்பி ;

விருதாவினிலே (virudhAvinilE) : and wasting my life;

உலகாயதம் மேலிடவே (ulagAyadha mElidvE) : my mind was filled up with worldly matters (thinking that this body is the soul and carnal pleasure is the heaven) and

மடவார் மயலாலே (madavAr mayalAlE ) : passion for women

அழுது ஆ கெடவே அவமாகிட (azhudhA kedavE avamAgida) : because of which I cry alas, degenerate and degrade myself.

நாளடைவே கழியாது (nALadaivE kAzhiyAdh) : I waste my life in this way. Instead,

உனை ஓதி அலர் தாள் அடியேன் உறவாய் (unaiyOdhi alar thAL adiyEn uRavAy ) : I must praise Your fresh flowery feet which are my only affinity and attachment

மருவ ஓர் அழியா வரமே தருவாயே (maruva vOr azhiyA varamE tharuvAyE) : and You must grant me that unique and everlasting boon.

தொழுதார் வினை வேர் அடியோடு அறவே (thozhudhAr vinai vEr adiyOdu aRavE) : You uproot the karmas of Your devotees,

துகள் தீர் பரமே தருதேவா (thugaL theer paramE tharu dhEvA) : and grant them unblemished Heaven, Oh Lord!துகள் தீர் (thugaL theer ) : குற்றமற்ற;

சுரர் பூபதியே கருணாலயனே (surar bUpathiyE karuNAlayanE) : You are the King of all DEvAs and the Seat of Compassion!

சுகிர்தா அடியார் பெருவாழ்வே (sugirthA adiyAr peru vAzhvE) : You are the Blessed One and Bestower of great life to Your devotees! சுகிர்தம் (sugirtham) : moral merit, புண்ணியம்;

எழுதா மறை மா முடிவே (ezhudhA maRai mA mudivE) : You are at the Zenith of unwritten VEdAs!

வடிவேல் இறைவா எனையாள் உடையோனே (vadivEl iRaivA enaiyAL udaiyOnE) : Oh God with the Spear, You have already conquered me!

இறைவா எதுதா அதுதா (iRaivA edhuthA adhuthA) : My God, grant me whatever You deem fit to grant me!

தனையே இணை நாகையில் வாழ் பெருமாளே. (thanaiyE iNai nAgaiyil vAzh perumALE.) : You reside at the unique NAgappattinam, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே