284. தாரகாசுரன்
Learn The Song
Raga Valaji (Janyam of 16th mela Chakravakam)
Arohanam: S G3 P D2 N2 S Avarohanam: S N2 D2 P G3 SParaphrase
தை பூச தினம் தந்தையாகிய சிவபிரானிடமிருந்து பதினோரு ஆயுதங்களும், தாய் உமையிடமிருந்து சக்தி வேலையும் பெற்று, தேவர்களுக்கு நீங்காத துயர் கொடுத்து வந்த தாரகாசுரன் என்னும் அசுரனை முருகன் வென்று வீழ்த்தினார்.
தாரகாசுரன் சரிந்து வீழ ( thArakAsuran sarindhu veezha ) : Knocking down the demon ThArakAsuran, தந்தையாகிய சிவபிரானிடமிருந்து பதினோரு ஆயுதங்களும், தாய் உமையிடமிருந்து சக்தி வேலையும் பெற்று, தேவர்களுக்கு நீங்காத துயர் கொடுத்து வந்த தாரகாசுரன் என்னும் அசுரனை வென்று வீழ்த்திய நாள் தைப் பூசம்.
வேருடன் பறிந்து சாதி பூதரம் குலுங்க (vErudan paRindhu jAthi bUtharang kulunga) : shaking and uprooting the celebrated Mount Meru, சாதி பூதரம் (s(j)Athi bUtharam) : mountain of ancient ancestral descent; refers to Mount Meru;
முது மீனச் சாகர ஓதை அம் குழம்பி நீடு தீ கொளுந்த (mudhumeena sAga rOdhai yang kuzhambi needu thee koLundha) : making the awesome and noisy ocean, containing large fish, to become turbulent and sending it up in flames, அம் ஓதை சாகரம் குழம்பி (am odhai saagaram kuzhambi) : அழகும் ஆரவாரமும் கொண்டுள்ள கடல் கலக்கமுற;
அன்று தாரை வேல் தொடும் கடம்ப (andru thArai vEl thodung kadamba) : You wielded the sharp spear, Oh Lord, who wears the garland of kadappa flowers!
கருத்து: கூர்மையான ஞானமாகிய வேல் வெளிப்பட்டபோது தாரகனாகிய மாயாமலமும், வினைத் தொகுதிகளாகிய மலைகளும், பிறவியாகிய பெருங் கடலும் அழிந்தன.
மத தாரை ஆரவார உம்பர் கும்ப வாரண அசலம் (madha thArai Ara vAra vumbar kumba vAraNa achalam ) : Juices indicating intoxication profusely flow from the mouth of the clamouring, large-headed and mountain-like elephant (AirAvadham) belonging to the celestials;
பொருந்து மானை ஆளு (porundhu mAnai yALu) : and mounting that elephant is the deer-like damsel, DEvayAnai;
நின்ற குன்ற மறமானும் (nindra kundra maRamAnum) : the deer-like, hunter girl (Valli) standing on the Vallimalai hill; குன்றம் நின்ற மற மானும்(kundram nindra maRa mAnum) : வள்ளிமலையில் இருந்த மான் போன்ற வேடப்பெண்;
ஆசை கூரு நண்ப என்று (Asai kUru naNba endru) : "You are the beloved friend of both consorts, Oh Lord!
மா மயூர கந்த என்றும் (mA mayUra kandha endrum ) : You mount the great peacock, Oh KandhA!"
ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ (Aval theera endru nindru pugazhvEnO ) : When shall I praise You thus to my heart's content and with single-minded devotion?
பார மார் தழும்பர் செம்பொன் மேனியாளர் (pAra mAr thazhumbar sempon mEniyALar) : His chest has scars from the hugging heavy bosoms (of Mother PArvathi); His complexion is reddish-golden; Explanation: Mother Parvathi established a Shivalinga made out of the sands of the Kampa river at kancheepuram. To test the devotion of Devi, Lord Shiva caused a flash flood that threatened to wash away the Linga. Parvati Devi hugged the Linga to prevent any passible damage to it. Shiva's heart melted by this affection and this made the Linga carry the marks of Devi's bangles and her bosoms. பாரம் - தனபாரம். கச்சியில் காமாட்சியம்மை கம்பா நதியில் மணலால் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டனர். அம்மையின் அன்பை சோதிக்க எண்ணி இறைவர் வெள்ளத்தை ஏவினார். அம்மை தன் உயிர்க்குப் பரிந்து ஓடாமல், சிவலிங்கமூர்த்திக்கு ஊறு வரக் கூடாதே என்று தணியாத அன்புடன் சிவலிங்கத்தைத் தழுவினார். அம்மையின் அன்பைக் கண்ட ஐயர் குழைந்தனர். தழுவக் குழைந்தபடியால், அம்மையின் வளைச்சுவடும், திருமுலைத் தழும்பும் ஏற்பட்டன.
கங்கை வெண் கபால மாலை கொன்றை தும்பை சிறுதாளி (gangai veNkapAla mAlai kondrai thumbai chiRu thALi) : the river Ganga, a garland of white skulls, flowers of kondRai (Indian laburnum), thumbai (leucas) and siruthALi,
பார மாசுணங்கள் சிந்துவார ஆரம் என்பு அடம்பு (bAra mAsu NangaL sindhu vAra vAra men padambu ) : large snakes, garlands of nochchi flowers, bones, adambu flowers; பாரமான பாம்புகள், நொச்சிப்பூ இவற்றை மாலையாகப் பூண்டவர், எலும்பு, அடம்பு என்ற மலர்; சிந்து வாரம் = நொச்சி;
பானல் கூவிளம் கரந்தை அறுகோடே (pAnal kUviLang karandhai aRugOdE ) : black lily, leaves of vilwa, karanthai and aRugam (cynodon) grass கருங்குவளை, வில்வம், கரந்தை, அறுகம்புல் இவற்றோடு
சேரவே மணந்த நம்பர் ஈசனார் (sEravE maNandha nambar eesanAr) : - all these adorn His fragrant body; He is our Lord SivA;
இடம் சிறந்த சீதள அரவிந்த வஞ்சி பெருவாழ்வே (idam siRandha seetha LAra vindha vanji peru vAzhvE:) : and on the left part of His body, creeper-like Mother Parvathi is seated on a grand and cool lotus. You are the great treasure delivered by Her! வஞ்சி (vanji ) : winding shrub or creeper;
தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்திறைஞ்சு (dhEvar yAvarun thiraNdu pArin meedhu vandhu iRainju) : All the celestials congregate and come to the earth to worship You ardently at
தேவனூர் விளங்க வந்த பெருமாளே. (dhEvanUr viLanga vandha perumALE.) : Devanoor that is brightened by Your presence, Oh Great One!
Comments
Post a Comment