287. அஞ்சுவித



ராகம்: சிம்மேந்திர மத்யமம் தாளம்: ஆதி
அஞ்சுவித பூத முங்கரண நாலு
மந்திபகல் யாது மறியாத
அந்தநடு வாதி யொன்றுமில தான
அந்தவொரு வீடு பெறுமாறு
மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர்
மங்கைதனை நாடிவனமீது
வந்தசர ணார விந்தமது பாட
வண்டமிழ்வி நோதமருள்வாயே
குஞ்சரக லாப வஞ்சியபி ராம
குங்குமப டீர வதிரேகக்
கும்பதன மீது சென்றணையு மார்ப
குன்றுதடு மாறஇகல்கோப
வெஞ்சமர சூர னெஞ்சுபக வீர
வென்றிவடி வேலைவிடுவோனே
விம்பமதில் சூழு நிம்பபுர வாண
விண்டலம கீபர்பெருமாளே.

Learn The Song




Know Raga Simhendramadhyamam (57th mela)

Arohanam: S R2 G2 M2 P D1 N3 S    Avarohanam: S N3 D1 P M2 G2 R2 S

Learn The Talam



Paraphrase

What is liberation? It is the state of consciousness that goes beyond the limitations of time, space, and causation.

அஞ்சுவித பூதமும் (anju vidha bUthamum) : The five elements, namely, earth, water, fire, air and sky, and

கரண நாலும் (karaNa nAlum) : the four entities, namely, mind, intellect, perception and egoism; மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கு கரணங்களும், கரணம்(karaNam) : intellectual faculties;

அந்தி பகல் யாதும் அறியாத (andhi pagal yAdhum aRiyAdha) : day or night: It does not know about any of these;

அந்த நடு ஆதி ஒன்றும் இலதான (andha nadu vAdhi ondru miladhAna) : and It does not have an end, or middle or origin;

அந்த ஒரு வீடு பெறுமாறு (andha oru veedu peRumARu) : Such is the blissful liberation which I want to attain. To do that,

மஞ்சு தவழ் சாரல் அம் சயில வேடர் மங்கைதனை நாடி வன மீது வந்த சரண அரவிந்தம் அது பாட (manju thavazh sAral anchayila vEdar mangai thanai nAdi vana meedhu vandha charaNa Aravindham adhu pAda ) : I should sing songs praising and glorifying the lotus feet that went to the forest looking for the damsel Valli who lived in the hill over whose peaks clouds hover and was brought up by the hunters or KuRavAs,

வண் தமிழ் விநோதம் அருள்வாயே (vaN tamizh vinOdham aruLvAyE) : kindly bless me with the miraculous power to compose such songs in beautiful Tamil language;

குஞ்சர கலாப வஞ்சி (kunjara kalAba vanji ) : DEvayAnai, the damsel looking like a peahen (or wearing a jewelled girdle), reared by the elephant AirAvatham, குஞ்சரம்(kunjaram) : elephant; கலாபம் (kalaabam) : Peacock feather; Jewelled girdle of a woman;

அபிராம குங்கும படீர அதிரேக கும்ப தன மீது (abirAma kungkuma pateera adhirEka kumba thana meedhu) : and who has a rich fragrant coating of vermilion and sandal paste on her beautiful bosom —

சென்று அணையு மார்ப (sendru aNaiyu mArba) : You went to her and hugged her with Your chest!

குன்று தடுமாற இகல் கோப (kundru thadu mARa igal kOpa) : Your anger made the mount of the enemies, Krouncha, stumble, and left it trembling! இகல் கோப (igal kOpa) : பகைமையும் கோபமும் கொண்டு:

வெம் சமர சூரன் நெஞ்சு பக வீர (vem samara sUra nenju paga veera) : Oh Brave One, who split the heart of the fierce warrior SUran! பக (paga) : நெஞ்சு பிளவுபட

வென்றி வடி வேலை விடுவோனே (vendri vadivElai viduvOnE) : You threw Your victorious and sharp Spear!

விம்ப மதில் சூழு நிம்பபுர வாண (vimbam adhil sUzhu nimbapura vANa) : Nimbapuram (வேப்பூர்), Your abode, is surrounded by bright fortress walls. விம்ப — ஒளி பொருந்திய;

விண் தல மகீபர் பெருமாளே. (viN thala mageepar perumALE.) : You are praised by all the leaders of the land of DEvAs, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே