288. ஈளை சுரம்


ராகம் : ஹிந்தோளம் தாளம்: ஆதி 2 களை
ஈளை சுரம் குளிர் வாத மெனும்பல
நோய்கள் வளைந்தறஇளையாதே
ஈடு படுஞ்சிறு கூடு புகுந்திடு
காடு பயின்றுயி ரிழவாதே
மூளை யெலும்புகள் நாடி நரம்புகள்
வேறு படுந்தழல்முழுகாதே
மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில்
வாழ்வு பெறும்படிமொழிவாயே
வாளை நெருங்கிய வாவியி லுங்கயல்
சேல்கள் மறிந்திடவலைபீறா
வாகை துதைந்தணி கேதகை மங்கிட
மோதி வெகுண்டிளமதிதோயும்
பாளை நறுங்கமழ் பூக வனந்தலை
சாடி நெடுங்கடல்கழிபாயும்
பாகை வளம்பதி மேவி வளஞ்செறி
தோகை விரும்பியபெருமாளே.

Learn The Song




Paraphrase

கபம், குளிர்ஜுரம், வாயு முதலான நோய்களால் பீடிக்கப்பட்ட இந்த உடல் வலுவிழந்துபோய் சுடுகாட்டை அடையும்படியாக வாட்டமடைந்து உயிரிழக்காமலும்; மூளை, எலும்பு, நரம்பு எல்லாவற்றையும் தீயானது விரோதம் கொண்டு சுட்டெரிக்காமலும் மூலப்பொருளான சிவயோக பதவியிலே நான் வாழ்வுபெறுமாறு உபதேசித்தருள்வாயாக.

ஈளை சுரம் குளிர் வாதம் எனும் பல நோய்கள் ( eeLai surang kuLir vAdha menum pala nOygaL) : Many diseases like the mucus in the lungs, fever, chillness, rheumatism etc., ஈளை(eeLai) : phlegm;

வளைந்தற இளையாதே (vaLaindhaRa iLaiyAdhE) : should not surround and debilitate me;

ஈடுபடும் சிறு கூடு புகுந்து (eedu padunj siRu kUdu pugundhu) : I do not want to inhabit this little shell of my miserable body, வலிமையற்றுப் போய் வாடுகின்ற இந்த உடலாகிய கூட்டில் புகுந்துகொண்டு, ஈடு = வலிமை; ஈடு படும் = வலிமை அழியும்;

இடு காடு பயின்று உயிர் இழவாதே (idukAdu payindruyir izhavAdhE) : lose life one day and enter the cremation ground;

மூளை எலும்புகள் நாடி நரம்புகள் (mULai elumbugaL nAdi narambugaL) : where my brain, bones, veins and nerves

வேறு படும் தழல் முழுகாதே (vERu padun thazhal muzhugAdhE) : will be thrown apart and consumed by fire. Instead, வேறுபடும் தழல் = விரோதம் உள்ளதாகிய தீ;

மூலம் எனும் சிவ யோக பதந்தனில் வாழ்வு பெறும்படி மொழிவாயே (mUla menum siva yOga padhan thanil vAzhvu peRumpadi mozhivAyE) : kindly bestow on me the exalted status of Siva-yOgA, which is the all-pervasive Universal Principle; மூலமாக விளங்குவதான சிவயோகமாகிய பதவியை அடைந்து நான் வாழ்வுறும்படியாக உபதேசத்தை மொழிந்தருள வேண்டும்.

வாளை நெருங்கிய வாவியிலும் கயல் சேல்கள் மறிந்திட வலைபீறா வாகை துதைந்து ( vALai nerungiya vAviyilum kayal sElgaL maRindhida valai peeRA vAgai thudhaindhu) : The VALai fish enter the adjacent tanks and drive away the other fish like kayal and sEl; they tear apart the fishing nets and proclaim victory;

அணி கேதகை மங்கிட மோதி வெகுண்டு (aNi kEthakai mangida mOdhi veguNdu) : they collide fiercely with the neat rows of thAzhai flowers and bend them out of shape;

இள மதிதோயும் பாளை நறுங்கமழ் பூக வனம் தலைசாடி (iLa madhithOyum pALai narung kamazh pUga vananthalai sAdi) : they jump up to the top of the fragrant betelnut trees whose tall branches serve as the resting place for the crescent moon; and பாளை(pALai) : spathe or bract of a palm tree; பூக வனம் (pooga vanam) : thicket/forest of betel nut trees; கமுகுத் தோப்பு, பாக்கு மரத் தோப்பு;

நெடும் கடல் கழிபாயும் (nedum kadal kazhipAyum) : finally they leap into the backwaters of the sea; கடல் கழி = கடலையடுத்த உப்பங்கழி, backwater or estuary. An estuary is an area where a freshwater river or stream meets the ocean.

பாகை வளம்பதி மேவி (pAgai vaLampadhi mEvi) : in this fertile place, PAgai, which is Your abode,

வளஞ்செறி தோகை விரும்பிய பெருமாளே. (vaLancheRi thOgai virumbiya perumALE.) : and where You sought the robust peacock-like belle, VaLLi, Oh Great One!
திருவள்ளூர் மாவட்டம், பாகசாலை என்னும் ஊரில் கங்கைக்கு இணையாகப் போற்றப்படும் குசஸ்தலை (கொற்றலை) ஆற்றின் தென்கரையில் பாலசுப்ரமண்யஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. குறல் என்பது தருப்பைக்கு ஒருபெயர். குறல்தலை மருவி குற்றலை ஆறு என வழங்கி வருகிறது. ஆணவம் கொண்ட பிரம்மனை சிறையில் அடைத்த கந்தக்கடவுள் இத்தலத்தில் தங்கி பிரம்மனின் படைப்புத் தொழிலை தானே மேற்கொண்டதால் இங்கு கரங்களில் ருத்தராட்ச மாலையையும், கமண்டலத்தையும் தாங்கி ‘பிரம்ம சாஸ்தா’ கோலத்தில் சுமார் ஆறடி உயரத்தில் காட்சி தருகின்றார். மந்திர மயிலும், சக்திவேலும் இத்தலத்தின் தனிச் சிறப்புகள் ஆகும்.

வாளை நெருங்கிய....பெருமாளே

வாளை மீன்கள் தமக்கு அருகில் உள்ள குளத்தில் இருக்கும் கயல் சேல் மீன்கள் இவற்றை விரட்டி வலைகளை கிழித்து வெற்றி கொண்டாடி வரிசையாக இருந்த தாழம் பூக்கள் உருக்குலையும் படி அவற்றை மோதிக் கோபிக்க பிறைச் சந்திரன் படியும் உயரமான பாலைகளைக் கொண்ட நறுமணம் கமழும் கமுக மரக்காட்டில் அந்த மீன்கள் உச்சியில் சாடி பெரிய கடலின் உப்பங்கழியில் பாயும் பாகை என்ற வளமான தலத்தில் வீற்றிருந்து வளப்பம் நிறைந்த தோகை மயிலான வள்ளியை விரும்பிய பெருமாளே

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே