271. படி புனல் நெருப்பு


ராகம் : ரேவதி அங்கதாளம் 1 + 1½ + 1½ + 1 (5)
படிபுனல்நெ ருப்படற் பவனம்வெளி பொய்க்கருப்
பவமுறைய வத்தைமுக்குணநீடு
பயில்பிணிகள் மச்சைசுக் கிலமுதிர மத்திமெய்ப்
பசிபடுநி ணச்சடக்குடில்பேணும்
உடலது பொ றுத்தறக் கடைபெறுபி றப்பினுக்
குணர்வுடைய சித்தமற்றடிநாயேன்
உழலுமது கற்பலக் கழலிணையெ னக்களித்
துனதுதம ரொக்கவைத்தருள்வாயே
கொடியவொரு குக்குடக் கொடியவடி விற்புனக்
கொடிபடர்பு யக்கிரிக்கதிர்வேலா
குமரசம ரச்சினக் குமரவணி யத்தன்மெய்க்
குமரமகிழ் முத்தமிழ்ப் புலவோனே
தடவிகட மத்தகத் தடவரைய ரத்தரத்
தடலனுச வித்தகத்துறையோனே
தருமருவு மெத்தலத் தருமருவ முத்தியைத்
தருதிருவி டைக்கழிப்பெருமாளே.

Learn The Song


Exercise for Raga Revati (Janyam of 2nd mela Rathnangi)

Arohanam: S R1 M1 P N2 S    Avarohanam: S N2 P M1 R1 S

Paraphrase

What diverse kinds of matter dwell in this hut called a body? It is made of the five elements; it is filled with falsehood; it is a distressful shack called womb; it is a receptacle for the three gunas, various ailments, numerous components such as brain blood and bones. It is assailed by various hungers of body and mind. I am the unfortunate lowly dog dwelling in this hut and I loaf around with a mind bereft of True Knowledge. Should You not give me the refuge of Your twin feet and the company of Your devotees?

படி புனல் நெருப்பு அடல் பவனம் வெளி ( padi punal neruppu adal pavanam veLi) : The five elements, namely, Earth, Water, Fire, the strong Air and the Cosmos; படி (padi): earth; புனல் (punal) : water; அடல் பவனம் (adal pavanam) : strong wind;

பொய் கரு பவம் உறை அவத்தை ( poy karu bavam uRai avaththai) : falsehood, the agony of entering the pit called the womb in the cycle of birth,

முக்குண(ம்) நீடு பயில் பிணிகள் (muk guNa needu payil piNigaL) : the three characteristics, namely Tranquility (SAthvikam), Aggressiveness (RAjasam) and Lethargy (ThAmasam); the ever-lingering diseases;

மச்சை சுக்கிலம் உதிரம் அத்தி ( machchai sukkilam udhiram aththi) : the brain; the sperm; the blood; the bones; மச்சை(machchai): brain, சுக்கிலம் (sukkilam): semen; அத்தி (aththi): bone;

மெய்ப் பசி படு நிணம் சடக் குடில் பேணும் (meyp pasi padu niNam chadak kudil pENum) : the various hungers of the body and the underlying flesh have all formed this inert body that is like a thatched hut!

உடலது பொறுத்து அறக் கடை பெறு பிறப்பினுக்கு (udaladhu poRuththu aRak kadai peRu piRappinukku) : Bearing this body, and having taken this meanest birth, உடல் அது பொறுத்து (udal athu poRuththu) : bearing this body;

உணர்வுடைய சித்தம் அற்று அடிநாயேன் உழலும் (uNarvudaiya chiththam atru adi nAyEn uzhalum) : I, a lowly dog, loiter about with a mind bereft of True Knowledge; ஞானமுடைய உள்ளம் இல்லாமல் அடி நாயேன் திரிவது

அது கற்பு அல ( adhu kaRpu ala) : This is absolutely unfair and meaningless. கற்பு அல (kaRpu ala) : doesn't serve justice, நீதி அன்று;

கழலிணை எனக்கு அளித்து (kazhaliNai enakku aLithu ) : You should grant me Your two lotus feet wearing the victorious anklets;

உனது தமர் ஒக்க வைத்து அருள்வாயே (unadhu thamarOkka vaith aruLvAyE) : and You should kindly include me among Your elite group of devotees!

கொடிய ஒரு குக்குடக் கொடிய (kodiya oru kukkudak kodiya) : You hold in Your staff the incomparable and fierce Rooster! (The first 'kodiya' means fierce and the second 'kodiya' means one who holds the rooster flag)

வடிவில் புன கொடி படர் புய கிரி கதிர் வேலா (vadivil punak kodi padar buya giri kadhir vElA) : Your mountainous shoulders embrace beautiful VaLLi, the damsel of the millet field, and You hold the sparkling Spear in Your hand!

குமர சமர சினக்கும் அரவு அணி அத்தன் மெய் குமர (kumara samara sinakkum aravu aNi aththan mey kumara) : Oh Kumara! You are the great Son of SivA who wears the serpent that leaps out fiercely in the battlefield or when attacked! குமாரக் கடவுளே! எதிர்த்தால் சீறிப் பாயும் பாம்பை அணியும் தலைவராகிய சிவபரம்பொருளின் மெய்ப் புதல்வரே!

மகிழ் முத்தமிழ்ப் புலவோனே (magizh muththamizh pulavOnE) : You revel in the three branches of Tamil, Oh Great Scholar!

தட விகட மத்தக தட வரையர் அத்தர் அத்த (thada vigada maththagath thada varaiyar aththar aththa ) : You are the Master of Lord SivA who is the father of Ganesha with a unique elephant face and mountainous body; விசேடமான மத்தகத்தோடு கூடிய பெரிய மலையை ஒத்தவரான கணபதியுடைய தந்தையின் குருவே! அத்தன் (aththan) : father, Guru;

அடல் அனுச (adal anuja) : You are also His powerful younger brother!

வித்தகத்து உறைவோனே (viththagathu uRaivOnE) : You reside in the transcendental state of True Knowledge! ஞான நிலையில் உறைபவனே

தரு மருவும் எத்தலத்தரும் மருவ முத்தியைத் தரு (tharu maruvum eththalaththarum maruva muththiyaith tharu ) : Surrounded by trees, and giving salvation to anyone from anywhere on the earth who comes and prays

திருவிடைக்கழிப் பெருமாளே.(thiruvidaik kazhip perumALE.) : at Thiruvidaikkazhi, which is Your abode, Oh Great One!

திருவிடைக்கழி ஸ்தல சிறப்பு

Lord Murugan killed Surapadman in Thiruchendur and then killed Surapadman's son Hiranyasuran in this Sthalam. According to Sthala Puranam, Lord Muruga offered prayers to Lord Shiva known as Pavavimochana Nathar to wash away His sins and get His blessings. Both Lord Shiva and Lord Muruga are present in the same the Garbhagriha. Thiruvidaikazhi is a Rahu Kethu and Sevvai parihara sthalam. Deivanai is also in the "Thapas Kolam" performing penance to marry Lord Muruga. It is also said that Devayani was betrothed to Lord Muruga here.

முருகன் சூரனுடன் போர் புரியும் போது, அவனுடைய இரண்டாவது மகன் ஹிரண்யாசுரன் தரங்கம்பாடி கடலில் மீன் உருவம் எடுத்து போரிலிருந்து மறைந்தான். இதையறிந்த முருகப்பெருமான் அவனைத் தேடிப்பிடித்து சம்ஹாரம் செய்தார். ஹிரண்யாசுரன் சிறந்த சிவபக்தன் என்பதால், அவனைக் கொன்ற முருகப்பெருமானுக்கு பாவம் உண்டானது. அந்தப் பாவத்தில் இருந்து விமோசனம் அடைவதற்காக தரங்கம்பாடி அருகில் உள்ள சிவாலயத்தின் குரா மரத்தடியில் அமர்ந்து தவம் புரிந்து பாவ விமோசனம் பெற்றார். சிவபெருமான் தன் மகனான குமரனை இந்தத் தலத்தில் இருந்து அருள்புரியும்படி கூறி பின்புறத்திலேயே தானும் அமர்ந்தார். இத்தலத்தில் இரண்டு வெவ்வேறு தலமரங்கள் உள்ளன; இவற்றுள் குரா மரம் முருகப் பெருமானுக்கும், மகிழ மரம் இறைவனுக்கும் தல மரங்களாம்.

முருகப்பெருமான் சிவனை வழிபட்ட குரா மரத்தடியில் அமர்ந்து, ராகு பகவான் முருகப்பெருமானை வழிபட்டிருக்கிறார். நவக்கிரகங்கள் இல்லாத இந்த ஆலயத்தில் முருகப்பெருமானே நவ நாயகர்களாக இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். இத்தல முருகனை வழிபட்டாலேயே அனைத்து விதமான நவக்கிரக தோஷங்களும் விலகிவிடும் என்கிறார்கள். தெய்வயானை முருகனை மணக்க தவம் புரிய, இங்கேயே அவர்களது திருமணம் நிச்சயிக்கபட்டது.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே