362. சமய பத்தி


ராகம் : சாரங்கா அங்கதாளம்
(1½ + 2 + 2 + 3 (8½)
சமய பத்தி வ்ருதாத்தனைநினையாதே
சரண பத்ம சிவார்ச்சனை தனைநாடி
அமைய சற்குரு சாத்திர மொழிநூலால்
அருளெ னக்கினி மேற்றுணைதருவாயே
உமைமுலைத்தரு பாற்கொடு அருள்கூறி
உரிய மெய்த்தவ மாக்கிநலுபதேசத்
தமிழ்த னைக்கரை காட்டியதிறலோனே
சமண ரைக்கழு வேற்றிய பெருமாளே.

Learn The Song



Raga Saranga (Janyam of 65th mela Kalyani)

Arohanam: S P M2 P D2 N3 S    Avarohanam: S D2 P M2 R2 G3 M1 R2 S

Paraphrase

சமய பத்தி வ்ருதாத்தனை நினையாதே (samaya baththi vrudhAth thanai ninaiyAdhE) : Instead of assuming that religious belief is worthless, வ்ருதா(vrutha) : based on Sanskrit word वृथा which means worthless;

சரண பத்ம சிவ அர்ச்சனைதனை நாடி அமைய ( charaNa padhma sivArchchanai thanai nAdi amaiya) : I should make Saivite offerings to Your lotus feet. For that to happen,

சற்குரு சாத்திர மொழி நூலால் (saRguru sAththira mozhi nUlAl) : the guidance of a Master and instructions from the scriptures

அருள் எனக்கு இனிமேல் துணை தருவாயே (aruL enakku inimEl thuNai tharuvAyE) : will have to be my protection from now on. Kindly bless me with that support.

உமை முலைத் தரு பாற் கொடு அருள் கூறி (umai mulaith tharu pAlkodu aruL kURi) : You imbibed the holy milk from the breast of Mother UmA, You sang (as ThirugnAna Sambandhar) the sacred hymns (ThEvAram on Lord SivA).

உரிய மெய்த் தவமாக்கி (uriya meyth thavamAkki ) : made Your life righteous with the mission, தனக்கு உரிய உண்மைத் தவ ஒழுக்கமாகக் கொண்டு,

நல் உபதேசத் தமிழ்தனை கரை காட்டிய திறலோனே (nal upadhEsath thamizh thanaik karai kAttiya thiRalOnE) : to preach high moral values (described in the hymns in Tamil) and became a light house (கலங்கரை விளக்கம் ) standing loftily on the banks of the River Tamil, Oh competent one! நல்ல உபதேசங்களைக் கொண்ட தமிழ் தன்னை கரை கண்ட பராக்கிரமசாலியே,

சமணரைக் கழுவேற்றிய பெருமாளே.( samaNaraik kazhuvEtriya perumALE.) : You sent the ChamaNas to the gallows (after conquering them in debate), Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே