354. கருப்பற்றூறி
Learn The Song
Raga Natabhairavi (20th mela)
Arohanam: S R2 G2 M1 P D1 N2 S Avarohanam: S N2 D1 P M1 G2 R2 SParaphrase
கருப்பற்று ஊறிப் பிறவாதே (karup patrURip piRavAdhE) : Without the longing to be born in a womb again, and மீண்டும் கருவிலே பிறக்கவேண்டும் என்ற ஆசையில் ஊறி மறுபடி பிறக்காமலும்,
கனக்கப் பாடுற்று உழலாதே (kanakkap pAdutru uzhalAdhE) : without being tossed about in extreme hardships, மிகவும் கஷ்டங்களை அடைந்து அலைந்து திரியாமலும், கனக்க (kanakka) : மிகவும் ;
திருப்பொற் பாதத்து அநுபூதி (thiruppoR pAdhath anubUthi) : the experience of the eternal bliss of Your lovely lotus feet, உன் அழகிய திருவடிகளாம் முக்தி அனுபவத்தை;
சிறக்கப் பாலித்து அருள்வாயே (siRakkap pAlith aruLvAyE) : bless me so that I receive the grace of eternal blissful experience and prosper for ever.
பரப்பற்றாருக்கு உரியோனே (parap patrAruk uriyOnE) : You belong to those who are free from greed and desire; ஆசைப் பெருக்கு இல்லாதவர்களுக்கு உரிமையானவனே, பரப்பு (parappu) : ஆசைப் பெருக்கு, பேராசை;
பரத்து அப்பாலுக்கு அணியோனே (paraththu appAlukku aNiyOnE) : You are closer to that which transcends all things! மேலானதாய் யாவற்றையும் கடந்து நிற்கும் பொருளுக்கு அருகில் உள்ளவனே; பரத்து அப்பால் = பிரமத்திற்கு அப்புறமான இடத்தில்; அணியோன் = அருகிலிருப்போன்,
திருக்கைச் சேவற் கொடியோனே (thirukkaich sEvaR kodiyOnE) : You hold in Your hallowed hand the staff of the Rooster!
செகத்திற் சோதிப் பெருமாளே.(jegaththiR jOthip perumALE.) : Your form is that of Universal Light, Oh Great One!
Comments
Post a Comment