361. சந்தம் புனைந்து
Learn The Song
Raga Amrithavarshini (Janyam of 66th mela Chithrambari)
Arohanam: S G3 M2 P N3 S Avarohanam: S N3 P M2 G3 SParaphrase
சந்தம் புனைந்து சந்தம் சிறந்த தண் கொங்கை வஞ்சி மனையாளும் (sandham punaindhu sandham siRandha thaN kongai vanji manaiyALum) : My slender-as-creeper lovely wife who smears sandal paste on her beautiful cool bosom; and சந்தனத்தைப் பூசிக்கொண்டு மிகவும் அழகு சிறந்த குளிர்ந்த மார்புடைய வஞ்சிக்கொடி போன்ற மனைவியும், சந்தம் (santham) : sandalwood paste, beautiful, சந்தனம், அழகு;
தஞ்சம் பயின்று கொஞ்சுஞ் சதங்கை தங்கும் பதங்கள் இளைஞோரும் (thanjam payindru konjum sadhangai thangum padhangaL iLainyOrum) : my children who wear lilting anklets around their ankles and are totally dependent on me; என்னையே பற்றுக்கோடாகக் கொண்டு, கொஞ்சி ஒலிக்கும் கிண்கிணிகள் அணிந்த பாதங்களை உடைய குழந்தைகளும்,
எந்தன் தனங்கள் என்றென்று நெஞ்சில் ( endhan dhanangaL endrendru nenjil) : My heart is filled with the thought that these alone are my wealth,
என்றும் புகழ்ந்து மிக வாழும் (endrum pugazhndhu migavAzhum) : and I keep praising them saying how lucky my life is!
இன்பம் களைந்து துன்பங்கள் மங்க (inbam kaLaindhu thunbangaL manga) : To keep away from this short-lived bliss, and to make my worries weaker and feebler; மிக்க மகிழ்ச்சியுடன் வாழும் நிலையில்லா இன்பத்தை நீக்கி, எனது துயரங்கள் யாவும் அடங்கி ஒழிய,
இன்று உன் பதங்கள் தரவேணும் (indrun padhangaL tharavENum) : You should grant me Your holy feet today. இன்று உனது திருவடிகளைத் தந்தருள வேண்டும்.
கொந்தின் கடம்பு செந்தண் புயங்கள் கொண்டு (kondhin kadambu senthaN buyangaL koNdu) : Wearing garlands made of bunches of kadappa flowers on Your lovely cool shoulders, கொத்துக் கொத்தாக உள்ள கடப்ப மலர் மாலையை செவ்விய குளிர்ந்த புயங்களிலே அணிந்து கொண்டு
அங் குறிஞ்சி உறைவோனே (ang kuRinji uRaivOnE) : You reside at several beautiful mountains! அழகிய மலையிடங்களில் எல்லாம் வீற்றிருப்பவனே,
கொங்கின் புனம் செய் மின் கண்ட கந்த (kongin punansey minkaNda kandha) : You went to the fragrant millet-field to find VaLLi, who is bright as a lightning, Oh KandhA. வாசனை மிக்க தினைப்புன வயலிலே இருந்த மின்னல் போன்ற அழகி வள்ளியைக் கண்டு மகிழ்ந்த கந்தனே, செய் (sey) : field ( as in புன்-மை + செய் or புஞ்சை means dry land); கொங்கு (kongu) : fragrant;
குன்றம் பிளந்த கதிர்வேலா (kundRam piLandha kadhirvElA) : You split the Mount Krouncha with Your bright spear, VElA! கிரெளஞ்சமலையைப் பிளந்த ஒளி படைத்த வேலனே,
ஐந்து இந்த்ரியங்கள் வென்று ஒன்றும் அன்பர் ( aindhu indhriyangaL vendrendrum anbar) : Your devotees who have always conquered the five sensory organs மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளையும் அடக்கி வென்றிருக்கும் அன்பர்களுடைய
அங்கம் பொருந்தும் அழகோனே (angam porundhum azhagOnE) : will find You residing in their bodily organs, Oh Handsome One! அங்கங்களில் எல்லாம் பொருந்தி விளங்கும் அழகனே,
அண்டம் தலங்கள் எங்கும் கலங்க (aNdan thalangaL engum kalanga) : When all the worlds and planets shook with fear (of asuras), அண்டங்களும் உலகங்களும் எங்கும் அன்று சூரனுக்கு அஞ்சிக் கலங்க,
அன்று அஞ்சல் என்ற பெருமாளே. (andranjal endra perumALE.) : You declared that day "Never Fear", Oh Great One! அந்த வேளையில் பயப்படாதீர்கள் என்று அருளிய பெருமாளே!.
Comments
Post a Comment