479. கட்டி முண்டக


ராகம்: முகாரிதாளம்: ஆதி 4 களை (32)
கட்டி முண்டகர பாலி யங்கிதனை
முட்டி யண்டமொடு தாவி விந்துவொலி
கத்த மந்திரவ தான வெண்புரவி மிசையேறிக்
கற்ப கந்தெருவில் வீதி கொண்டுசுடர்
பட்டி மண்டபமு டாடி யிந்துவொடு
கட்டி விந்துபிச காமல் வெண்பொடிகொடசையாமற்
கட்டு வெம்புரநி றாக விஞ்சைகொடு
தத்து வங்கள்விழ சாடி யெண்குணவர்
சொர்க்கம் வந்துகையு ளாக எந்தைபதமுறமேவித்
துக்கம் வெந்துவிழ ஞான முண்டுகுடில்
வச்சி ரங்களென மேனி தங்கமுற
சுத்த கம்புகுத வேத விந்தையொடு புகழ்வேனோ
எட்டி ரண்டுமறி யாத என்செவியி
லெட்டி ரண்டுமிது வாமி லிங்கமென
எட்டி ரண்டும்வெளி யாமொ ழிந்தகுரு முருகோனே
எட்டி ரண்டுதிசை யோட செங்குருதி
யெட்டி ரண்டுமுரு வாகி வஞ்சகர்மெ
லெட்டி ரண்டுதிசை யோர்கள் பொன்றஅயில்விடுவோனே
செட்டி யென்றுசிவ காமி தன்பதியில்
கட்டு செங்கைவளை கூறு மெந்தையிட
சித்த முங்குளிர நாதி வண்பொருளைநவில்வோனே
செட்டி யென்றுவன மேவி யின்பரச
சத்தி யின்செயலி னாளை யன்புருக
தெட்டி வந்துபுலி யூரின் மன்றுள்வளர்பெருமாளே.

Learn The Song



Raga Mukhari (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S R2 M1 P N2 D2 S    Avarohanam: S N2 D1 P M1 G2 R2 S


Paraphrase

For a word-to-word paraphrase of this song in Tamil, read கட்டி முண்டக, an article by Mrs Devaki Iyer, Pune.

கட்டி (katti) : Holding the prana vayu, (without letting it be dissipated) பிராண வாயுவை அதன் நிலையில் பிடித்துக் கட்டி, (சரீரத்திற்குள் உள்ள காற்றைச் சலனமின்றி நிறுத்துவதே கும்பகம். பயிற்சி மூலம் ஓடும் இயல்புடைய மனத்தை பிராணனின் போக்கை கவனிக்க வைத்து உள் நோக்கி திருப்பமுடியும்.)

முண்டக அரபாலி அங்கிதனை முட்டி (muNdaka ara pAli angithanai mutti) : igniting the auspicious flame of SivA, located in the lotus of Mooladhara Chakra, மூலாதார கமலத்திலுள்ள அருள் பாலிக்கும் சிவாக்கினியை மூண்டு எழச் செய்து, முண்டகம் (mundakam) : lotus; அங்கி (angi) : fire;

Kundalini is a Sanskrit word, which literally means coiled. Kundalini is an absolute reflection of the infinite primordial energy (cosmic energy or supreme contentiousness) that keeps the whole universe in order. Kundalini is one of the primary components of man's 'subtle body', which consists of 72,000 nadis (subtle energy channels), chakras (psychic centres), prana (subtle energy), and bindu (drops of essence). Nadis are astral tubes that carry pranic currents. They cannot be seen with the naked eye. Scientists have no idea about their existence. They are not the ordinary nerves, arteries and veins that science can see. Three Nadis are important. They are Ida, Pingala, and the Sushumna. Sushumna is the most important because Kundalini passes through this Nadi only.

மூலாதாரத்தில் குண்டலி சக்தி பாம்பு போல் சுற்றியிருக்கும். அதன் வாயிலின்று எழுகின்ற காற்றே பிராணனாகும். இந்தப் பிராண சக்தி மனித உடலில் உள்ள சுமார் 70000 நாடிகள் வழியாகப் பாய்கிறது. இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு முக்கிய மைய நாடிகளில் ஏழு ஆதார சக்கரங்களாக இணைகின்றன.

சுவாசம் எப்போதும் மூக்கின் இரண்டில் ஒரு துவாரத்தின் வழியாகவே நடைபெறும். அது இரண்டு மணி நேரத்திற்கொரு முறை மாறும். வலதுபக்கமாக வரும் சுவாசத்தை சூரிய கலை என்றும், இடது புறமாக வரும் சுவாசத்தை சந்திரகலை என்றும் கூறுவார்கள். சுவாச பயிற்சியினால் இட நாயிலும் வடநாசியிலும் மாறி மாறி வரும் சுவாசத்தை, நாட்டத்தை நடு மூக்கின் மேல் வைத்து பிராணனை மறித்து, இரண்டு மூக்கு துவாரங்களின் வழியாகவும் வரும்படியாக செய்ய வேண்டும். இப்படி செய்வதால் பிராண ஓட்டம் இட கலைக்கும் வடகலைகளுக்கு மத்தியில் இருக்கும் சுழுமுனை நாடி வழியாக நடக்கும்; குண்டலினி சக்தி தூண்டப்பெற்று, மேல் எழுந்து சக்கரங்களைத் தூண்டும். இவ்வாறு மூலாதாரத்திலிருந்து கனலும், பிரணவமாகிய ஓம் சுழுமுனையில் நாதமாக ஓடி, ஆறு ஆதாரங்களிலும் அமர்ந்து அவற்றை மலரச் செய்து, பிறகு விந்து-ஒளியாகவும் நாதம்-ஓசையாகவும் உச்சியில் மலரும்.

அண்டமொடு தாவி விந்து ஒலி கத்த (aNdamodu thAvi vindhu oli kaththa) : making it leap right up to the cosmic zone (Brahamaranthiram) resulting in the union of SivA and Sakthi, creating a resonant sound, அண்டமாகிய கபாலத்தில் உள்ள பிரமரந்திரம் வரை தாவச் செய்து விந்து நாதம் (சிவ - சக்தி ஐக்கியம்) தோன்றி முழங்க; மனித உடலின் கழுத்துக்கு மேல் உள்ள பகுதி அண்டம் என்றும், கீழ் பகுதி பிண்டம் என்றும் வழங்கப்படும்.

மந்திர அவதான வெண் புரவி மிசை ஏறி (manthir avadhAna veN puravi misai ERi) : mounting the white horse that remains standing in the specially built hall;(white horse indicates Sushumna nadi) சிறப்பாகக் கட்டப்பட்ட கூடத்தில் கவனமாக நிற்கும் வெண்மைக் குதிரையின் மேல் ஏறி, (வெள்ளை குதிரை சுழுமுனையாகிய வெள்ளை நாடியைக் குறிக்கும். தண்டு போன்ற சுழுமுனையின் துவக்கம் மூலாதாரம், முடிவு ஆக்கினை.) அவதானம் (avathaanam) : கவனம், நினைவாற்றல்;
Prana is like a blind horse. To enter the doorway of the mind, therefore, we must harness and guide prana rather than be driven by it. Without the mind holding the reins, prana gallops in whatever direction karma forces it to go. To achieve higher meditative experiences, we must carefully maintain awareness. சித்தர்கள் மூச்சுக் காற்றினை குதிரை ஏற்றம் அல்லது பரியேற்றம் என்று குறிப்பிடுவார்கள். மூச்சாகிய குதிரையின் மேல் ஆட்சி செலுத்த கட்டுப்பாடுடனும் ஆழ்ந்த உள்ளுணர்வுடன் பயிற்சி செய்ய வேண்டும்.

கற்பக அம் தெருவில் வீதி கொண்டு (kaRpagam theruvil veedhi koNdu) : driving that horse along the street of SivA that yields all wishes like the KaRpaga tree, கற்பகத் தருவைப் போல் விரும்பியதை அளிக்க வல்ல அழகிய மேலைச் சிவ வீதியில் அந்த மாயக் குதிரையை நேராக ஓடச் செலுத்தி,

சுடர் பட்டி மண்டபம் ஊடாடி (sudar patti mandapam udAdi) : arriving at the plank called lalAtam where all tenets converge, practicing there many yOgA methods (such as DhyAnam, PrathyAkaraNam, DharaNai), எல்லா தத்துவங்களும் ஒன்றுபடும் ஒளிமயமான லலாட மண்டபத்தில் சென்றடைந்து,
'LalAtam' represents the region between the eye-brows. Here the three 'nAdis', namely, 'susumna', 'idakala' and 'pingaLa' merge - creating a dazzling shrine.

இந்துவொடு கட்டி விந்து பிசகாமல் (indhuvodu katti vindhu pisagAmal) : carefully binding the breath so as to hold the nectar from the moon from spilling and the energy from slipping, சந்திர கலை சலியாமலும், விந்து கழலாமலும் உறுதி பெறக் கட்டி,

ஆறாதாரம் கடந்த அப்பாலைக்கு (சஹஸ்ரார வெளி) குண்டலினி சக்தி செல்லும் போது அங்கே ஞான நடனஜோதி ஒப்புவமையின்றி ஒளி செய்து கொண்டிருக்கும். விந்து என்னும் இந்த ஒளியுடன் நாதம் என்னும் ஒலியும் தோன்றும். சிவவொளியின் நடுவில் காணப்படும் வீதி வழியே சென்றால் ஒரு பொற் பிரகாசமான மண்டபம் தோன்றும். இந்த மண்டபத்தில் தான் சமாதி கைக்கூடும்.

வெண் பொடி கொடு அசையாமல் (veN podi kod asaiyAmal) : wearing the holy ash and standing still, அந்த வெண்ணீற்றை அணிந்துகொண்டு அசையாமல் நின்று &— ஆணவம், கன்மம், மாயை என்று மலங்கள் மூன்றையும் ஞானாக்கினியால் எரித்து வெண்ணீறாக்கி

சுட்டு வெம் புரம் நீறு ஆக (suttu vem puram niRAga) : burning into ashes the three slags (thiripuram - represented by arrogance, karma and delusion), திரிபுரமாகிய (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களும் வெந்து நீறாகும்படி சுட்டு,

விஞ்சை கொடு (vinjai kodu) : acquiring the eight siddhis, அஷ்டமாசித்து வித்தைகள் எல்லாம் கைவரப் பெற்று,

தத்துவங்கள் விழச் சாடி (thaththuvangaL vizha chAdi) : knocking down the mischief created by the ninety-six tenets, தத்துவ சேஷ்டைகள் எல்லாம் வேரற்று விழும்படி அழித்து,

எண் குணவர் சொர்க்கம் வந்து கையுள் ஆக (eNguNavar sorggam vandhu kaiyuL Aga) : attaining the heavenly abode of SivA, the Lord of eight attributes, எண்குணவராகிய சிவபெருமானுடைய பதவி கை கூடி வந்து சித்திக்க,

எந்தை பதம் உற மேவி (endhai padham uRa mEvi) : remaining entrenched in that bliss of my Lord, அச்சிவபதவியில் நிலை பெற்றுப் பொருந்தி,

துக்கம் வெந்து விழ ஞானம் உண்டு (dhukkam vendhu vizha nyAnam uNdu:) : burning away the misery of birth, imbibing the nectar of true knowledge, பிறவித் துன்பம் வெந்து நீறாகி ஒழிய, ஞானாமிர்த பானம் குடித்து,

குடில் வச்சிரங்கள் என மேனி தங்கம் உற (kudil vajjirangaLena mEni thangam uRa) : turning my body into a solid diamond rock, changing my complexion into a golden hue, தேகம் வஜ்ர காயமாகவும், நிறம் தங்கம் போலவும் மாற்றி,

சுத்த அகம் புகுத வேத விந்தையொடு புகழ்வேனோ (sudhdhagam pugudha vEdha vindhaiyodu pugazhvEnO) : and attaining pure liberation, will I be able to sing Your glory in an amazing Vedic meter? தூய முக்தி கூட, விசித்திரமான வேதச்சந்தத்துடன் உனது திருப்புகழைப் பாடுவேனோ?

எட்டு இரண்டும் அறியாத என் செவியில் (ettum iraNdum aRiyAdha en seviyil) : Into my ears, a stupid fool who does not even know that eight and two make ten, எட்டும் இரண்டும் பத்து என்பதையும் தெரியாத என் காதுகளில்

எட்டும் இரண்டும் இது ஆம் இலிங்கம் என எட்டு இரண்டும் வெளியா மொழிந்த குரு முருகோனே (ettiraNdum idhuvAm ilingamena ettiraNdum veLiyA mozhindha guru murugOnE) : You preached that those numbers are the symbols of SivA and further elucidated that they represent the PraNava ManthrA OM, Oh MurugA, my Master! இவையே சிவக் குறியாகிய இலிங்கம் என்று அந்த அகார உகார மகார இலக்கணங்களைத் தெளிவாக உபதேசித்த குருவான முருகோனே,

எட்டு இரண்டு திசை ஓட செம் குருதி (ettiraNdu dhisai Oda senkurudhi) : In all the ten directions (the usual eight directions, along with zenith and nadir, the top and the bottom of the celestial sphere), You let the red blood flow; எட்டுத் திசைகளிலும், இந்த அண்டத்தின் கீழும் மேலுமாக, பத்து திக்குகளிலும் சிவப்பு நிற இரத்தம் ஓடும்படி

எட்டு இரண்டும் உருவாகி வஞ்சகர் மெல் எட்டு இரண்டு திசையோர்கள் பொன்ற அயில் விடுவோனே (ettiraNdum uruvAgi vanchakar mel ettiraNdu dhisaiyOrgaL pondra ayil viduvOnE) : You assumed sixteen postures and wielded the spear upon the treacherous demons in the battlefield and also those demons in many worlds situated in the ten directions, Oh Lord! பதினாறு வகை உருவத் திருமேனி விளங்க (பாசறையில் இருந்து), வஞ்சகர்களாகிய அசுரர்களின் மீதும் பின்னும் பத்துத் திசை அண்டங்களில் இருந்த அசுரர்கள் மீதும் அவர்கள் அழிய வேலை விடுபவனே,

செட்டி என்று சிவகாமி தன் பதியில் (chetti endru sivakAmi than padhiyil) : He assumed the appearance of a bangle-vendor and went around the streets of Madhurai ruled by Angayarkanni (an incarnation of Parvathi); வளையல் செட்டி வடிவெடுத்து, சிவகாமி அங்கயற் கண்ணியாய் வீற்றிருக்கும் மதுரையில்,

கட்டு செம் கை வளை கூறும் எந்தை இட(ம்) (kattu sengkai vaLai kURum endhai ida(m)) : He placed the bangles on the wrists of the women squeezing their hands until they turned red and bargained for the price of the bangles; He is my Lord SivA; கைகள் சிவக்க, வளையல்களை அடுக்கி விலை கூறின எந்தை சிவபெருமானுடைய

சித்தமும் குளிர அநாதி வண் பொருளை நவில்வோனே (chiththamum kuLir anAdhi vaN poruLai navilvOnE) : to the cool content of His heart, You preached to Him the powerful principle of PraNava ManthrA, which is without a beginning, Oh Master! மனமும் குளிரும்படி ஆதியற்றதும், வளமையானதுமான மூலப் பிரணவப் பொருளை உபதேசித்தவனே,

செட்டி என்று வனம் மேவி (chetti endru vana mEvi) : You also assumed the appearance of a bangle-vendor and reached the forest in VaLLimalai; வளையல் செட்டியின் வேடத்துடன் நீயும் வள்ளிமலைச் சாரலில் தினை வனத்துக்குச் சென்று,

இன்பரசச் சத்தியின் செயல் இ(ன்)னாளை அன்பு உருக (inbarasa saththiyin seyalinALai anbu uruga) : You fell deeply in love with VaLLi, representing the Divine Energy of desire; அங்கே இச்சா சக்தி மயமான வள்ளி நாயகியை அன்பு கனிந்து

தெட்டி வந்து புலியூரில் மன்றுள் வளர் பெருமாளே.(thetti vandhu puliyUrin mandruL vaLar perumALE.) : and then You abducted her, Oh Lord, and came to be seated in the golden shrine of Chidhambaram, Oh Great One! அபகரித்து வந்து, சிதம்பரத்தில் பொன் அம்பலத்தில் விளங்கும் பெருமாளே.

எட்டும் இரண்டும்

எட்டும் இரண்டும் அறியாத என்னை
எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி
எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின்
எட்டும் இரண்டும் இலிங்கமதாகும் (திருமந்திரம்)

எட்டு என்னும் எண் தமிழில் 'அ' என்றும் "சூரியன்" என்றும், 'இரண்டு' என்னும் எண், 'உ' அல்லது "சந்திரன்" என்றும் குறிக்கும். ஆகையால், அகர உகரங்களை, 'எட்டும் இரண்டும்' என்றார். அகரம் சிவனைக் குறிக்கும்; உகரம் சத்தியைக் குறிக்கும். சிவம் சத்திகளை அறியாத என்னை என்றார். எட்டும் இரண்டும் இனிதான பேரின்பத்தைக் கொடுக்கும். எட்டும் இரண்டும் அறிந்தவன் ஞானமாகிய செல்வம் பெற்றவன். பணக்காரன். எட்டும் இரண்டும் அறியாதவன் ஞானமாகிய செல்வம் இல்லாத ஏழைகள். இந்த எட்டும் இரண்டும் பத்து. 8 + 2 =10 , அ + உ = ய, சூரியனும் சந்திரனும் நம் சாதனையால் ஒன்று பட்டு உள்முகமாக சென்று பத்தாகிய. "ய" ஆகிய அக்னியோடு புருவ மத்தியில் சேர்ந்தாலே திருவடியை, ஜோதியை, நாம் தரிசிக்க முடியும்.

அதாவது சூரியகலை, சந்திரகலை இரண்டும் கூடிய சுழுமுனையாகிய அக்கினி கலையில் தவம் செய்து பேரொளி தரிசனத்தைக் காண்க என்பது விளக்கம்.

எட்டு என்னும் சொல் அஷ்டமூர்த்தியைக் குறிக்கிறது. நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய எட்டு ஜடவஸ்துக்களும் ஈசனுடைய சொரூபங்களாகும். பிருகிருதி - புருஷன் அல்லது சிவம் - சக்தி ஆகிய இரண்டு தத்துவங்களின் கூட்டுறவு அர்த்தநாரீசுவரன் எனப்படுகிறது. உடல் சிவ சொரூபம், உயிர் சக்தி சொரூபம். சக்திக்கும் சிவத்துக்கும் புறம்பாகப் பிரபஞ்சமில்லை. இவை இரண்டும் பிரிந்தால் வாழ்வு நடைபெறாது.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே