475. இருவினையின்


ராகம்: ஆரபிஅங்கதாளம் (9)
2½ + 1½ + 2 + 3
இருவினையின் மதிம யங்கித்திரியாதே
எழுநரகி லுழலு நெஞ்சுற்றலையாதே
பரமகுரு அருள்நி னைந்திட்டுணர்வாலே
பரவுதரி சனையை யென்றெற்கருள்வாயே
தெரிதமிழை யுதவு சங்கப் புலவோனே
சிவனருளு முருக செம்பொற் கழலோனே
கருணைநெறி புரியு மன்பர்க் கெளியோனே
கனகசபை மருவு கந்தப் பெருமாளே.

Learn The Song


Know Ragam Arabhi (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S R2 M1 P D2 S    Avarohanam: S N3 D2 P M1 G3 R2 S

Paraphrase

இரு வினையின் மதி மயங்கி திரியாதே (iru vinaiyin madhi mayangi thiriyAdhE) : In order that my mind, dizzied by being mired in the karmas (good and bad), does not wander around ; நல்வினை, தீவினை என்ற இரண்டு வினைகளினால் என்னறிவு மயக்கமடைந்து அலைந்து திரியாமல்,

எழு நரகில் உழலும் நெஞ்சு உற்று அலையாதே (ezhu naragil uzhalu nenjutr alaiyAdhE) : and my heart doesn't sink and meander through the seven hells ஏழு நரகங்களிலும் கலங்கக்கூடிய நெஞ்சத்தைப் படைத்து நான் அலையாமல்,

பரமகுரு அருள் நினைந்திட்டு (parama guru aruL ninaindhittu) : I need to seek the Grace of the Great Preceptor சிறந்த குருவாகிய உன் அருளை நினைவில் வைத்து,

உணர்வாலே பரவு தரிசனையை என்று எற்கு அருள்வாயே (uNarvAlE paravu dharisanaiyai endreRk aruLvAyE) : and perceive intuitively the laudable vision of Yours: When are You going to grant me that vision? எற்கு = எனக்கு; ஞானத் தெளிவு பெற்று, போற்றுதற்குரிய உன் தரிசனக் காட்சியை என்றைக்கு எனக்கு அருளப்போகிறாய்?

தெரி தமிழை உதவு சங்கப் புலவோனே (theri thamizhai udhavu sangap pulavOnE) : You came as the Sangam Poet who did extensive research in Tamil and made the language easy and comprehensible.யாவரும் தெரிந்து மகிழும்படி தமிழை ஆராய்ந்து உதவிய சங்கப் புலவனாக வந்தவனே,
Murugan took birth as Ugrapandiyan, King of Madhurai, and did extensive research in Tamil grammar and literature along with Sangham Poets.

சிவனருளு முருக (sivanaruLu muruga) : You are SivA's blessed son, Oh MurugA, சிவபெருமான் பெற்றருளிய முருகனே,

செம்பொற் கழலோனே (sempoR kazhalOne) : You wear the victorious anklet made of red gold. செம்பொன்னாலான வீரக் கழலை அணிந்தவனே,

கருணை நெறி புரியும் அன்பர்க்கு எளியோனே (karuNai neRi puriyum anbark eLiyOnE ) : For those devotees who are compassionate You are easy to reach. அருள் நெறியை அனுஷ்டிக்கும் உன் அன்பர்க்கு எளிமையானவனே,

கனக சபை மருவு கந்தப் பெருமாளே.(kanakasabai maruvu kandhap perumALE.) : You prevail at the Golden Shrine (Chidhambaram), KandhA, Great One! கனகசபையில வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே