450. இரவு பகல்
ராகம் : சாமா | கண்டசாபு (2½) |
இரவுபகற் பலகாலும் | |
இயலிசைமுத் | தமிழ்கூறித் |
திரமதனைத் தெளிவாகத் | |
திருவருளைத் | தருவாயே |
பரகருணைப் பெருவாழ்வே | |
பரசிவதத் | துவஞானா |
அரனருள்சற் புதல்வோனே | |
அருணகிரிப் | பெருமாளே. |
Learn The Song
Raga Sama (Janyam of 28th mela Hari Kambhoji)
Arohanam: S R2 M1 P D2 S Avarohanam: S D2 P M1 G3 R2 SParaphrase
இரவு பகல் பல காலும் இயலிசை முத்தமிழ் கூறி (iravu pagal pala kAlum iyalisai muth thamizh kURi) : Day in and day out, at all times, I want to praise Your glory in the three facets of Tamil, namely, literature, music and drama; இரவும், பகலும், பலமுறையும், இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழினாலும் உன்னைப் புகழ்ந்து பாடி,
திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே (thiramadhanai theLivAga thiru aruLai tharuvAyE:) : kindly bestow Your blessings on me so that the steady and fundamental truth is clearer to me. நிலையான பொருள் எதுவோ அது எனக்குத் தெளிவாக விளங்க உனது திருவருளைத் தந்தருள்வாயாக. (ஸ்)திரம் = நிலையானது;
பர கருணைப் பெரு வாழ்வே (para karuNai peru vAzhvE) : You are the greatest treasure, full of supreme compassion and grace! மேலான கருணையுடன் விளங்கும் பெருவாழ்வே,
பர சிவ தத்துவ ஞான(parasiva thaththuva nyAna) : You are the embodiment of the True Knowledge of paramount SivA! உயர்ந்த சிவமயமான உண்மையாம் ஞானப் பொருளே,
அரன் அருள் சற் புதல்வோனே அருணகிரிப் பெருமாளே.(aran aruL saR pudhalvOnE aruNagirip perumALE.) : You are the noble son of Lord SivA! You chose Your abode at ThiruvaNNAmalai, Oh Great One! சிவபிரான் அருளிய நற்குணப் பிள்ளையே, திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
Comments
Post a Comment