465. பரியகைப் பாசம்
Learn The Song
Raga Saramati (Janyam of 20th mela Natabhairavi)
Arohanam: S R2 G2 M1 P D1 N2 S Avarohanam: S N2 D1 M1 G2 SParaphrase
பரிய கைப் பாசம் விட்டு எறியும் அக்காலனுள் (pariyakaip pAsam vitteRiyum ak kAlanuL): Yama, the God of Death, wields a thick rope from his hand (to snatch my life); பருத்ததான கைக் கயிறாகிய பாசக் கயிறை விட்டு வீசும் அந்த யமனிடத்தே
பயன் உயிர்ப் போய் அகப்பட மோக (payan uyirp pOy agappada mOga): and I willingly fell prey to that Yama and lodged my useful life with him. இந்தப் பயனுள்ள உயிர் போய் அகப்பட்டுக் கொள்ள ஆசை வைத்து,
படியில் உற்றாரெனப் பலர்கள் பற்றா (padiyil utRAr enap palargaL patRA): The so-called relatives of mine on this earth caught hold of my body firmly; பூமியில் சுற்றத்தார் எனப்படும் பலரும் என் உடலைப் பற்றிக் கொண்டு
அடல் படர் எரிக் கூடு விட்டு (adal padar erik kUdu vittu): and laid it on a funeral pyre burning intensely. பலமாகப் படர்ந்து எரியும் நெருப்பில் இந்த உடலைக் கிடத்திவிட்டு,
அலை நீரிற் பிரியும் இப் பாதகப் பிறவியுற்றே (alai neeriR piriyum ip pAthagap piRavi utRE): Later they all departed after taking a dip in the billowy water. I took such a sinful birth! தாங்கள் அலை வீசும் நீரில் குளித்துவிட்டுப் பிரிந்து போகும், பாவத்துக்கு இடம் தருகின்ற இந்தப் பிறவியை அடைந்தே,
மிகப் பிணிகளுக்கே இளைத்து உழல் நாயேன் (migap piNikaLukkE iLaiththu uzhal nAyEn): I, the lowly dog, was debilitated with many diseases and roamed about aimlessly.மிகுந்த நோய்களால் இளைத்துத் திரிகின்ற நாயினும் கீழான எனது
பிழை பொறுத்தாயெனப் பழுதறுத்து ஆளென (pizhai poRuththAy enap pazhuthu aRuththu AL ena): Saying "Please forgive my sins and protect by severing me from all defects!" குற்றங்களைப் பொறுத்தவனே என்றும், என் பிழைகளைக் களைந்து ஆண்டருள்வாய் என்றும்,
பிரியமுற்று ஓதிடப் பெறுவேனோ (piriyamutRu Othidap peRuvEnO): will I have the fortune of chanting Your glory with love? அன்பு கொண்டு நான் உன்னை ஓதிப் புகழும் பாக்கியத்தைப் பெறுவேனோ?
கரிய மெய்க் கோலமுற்ற அரியின் (kariya meyk kOlamutRa ariyin): "Vishnu, who has the complexion of dark cloud, கரிய உடலின் நிறம் கொண்ட திருமாலின்
நல் தாமரைக்கு அமைவ பற்றாசை அக் கழலோர் முன் (nal thAmaraikku amaiva patRAsai ak kazhalOr mun): offered His lotus eye* which was desired by Lord SivA wearing the anklets; நல்ல தாமரையை ஒத்த கண்ணையே மலராகக் கொள்வதற்கு ஆசை கொண்ட அந்தத் திருவடியை உடையவராம் சிவபிரானின் முன்பு
கலை வகுத்து ஓதி (kalai vaguththu Othi): to that SivA, You preached the essence of all arts, namely, the PraNava ManthrA; கலைகளின் சாரமாம் பிரணவப் பொருளை எடுத்து உபதேசித்தவன்,
வெற்பது தொளைத்தோன் (veRpathu thoLaiththOn): You pierced (with Your spear) Mount Krouncha; கிரெளஞ்ச மலையைத் தொளை செய்தவன்,
இயற் கடவுள் செச் சேவல் கைக் கொடியோன் என்று (iyaR kadavuL chech chEval kaik kodiyOn enRu): and You are the real Almighty holding the staff with the reddish Rooster!" - with these words, தகுதி வாய்ந்த கடவுள், சிவந்த சேவற் கொடியைக் கையிலே கொண்டவன் என்றெல்லாம்
அரிய நற் பாடலைத் தெரியும் உற்றோற் கிளைக்கு (ariya naR pAdalaith theriyum utROR kiLaikku): Your devotees sing Your glory in rare poems; for them and for the sake of their entire families, அருமையான நல்ல பாடல்களைத் தெரிந்து கூறும் அடியார்களின் கூட்டத்துக்காக
அருணையிற் கோபுரத்து உறைவோனே (aruNaiyiR kOburaththu uRaivOnE): You shower Your blessings seated at the temple towers of ThiruvaNNAmalai! திருவண்ணாமலையில் கோபுரத்தில் வீற்றிருப்பவனே,
அடவியில் தோகை பொற் தடமுலைக்கு ஆசையுற்று அயரும் (adaviyil thogai poR thada mulaikku Asai utRu ayarum): You lovingly embrace the bosoms of VaLLi, the peacock-like damsel of the jungle, to the point of fatigue! காட்டில் வசித்த மயில் போன்ற வள்ளியின் பெரு மார்பைத் தழுவ ஆசை கொண்டு,
அச் சேவகப் பெருமாளே. (ach sEvakap perumALE.): You are the most valorous, Oh Great One! தளர்ச்சி அடைந்த அந்தப் பராக்ரமப் பெருமாளே.
Comments
Post a Comment