447. அழுதும் ஆவாவென
Learn The Song
Raga Chandrakauns (Janyam of 21st mela Keeravani)
Arohanam: S G2 M1 D1 N3 S Avarohanam: S N3 D1 M1 G2 SParaphrase
How can one attain true knowledge? Unless He wills it and shows the way, even a true seeker whose mind is soaked in divine love and who, in an ecstatic state, loses self control, sobs and lets out tears of ecstasy and reaches the state of silence, he is still unable to perceive the presence of the highest and true Reality. Saint Arunagirinathar frets that he does not want to take countless births in search of salvation and entreats the Lord to lead the way.
அழுதும் ஆவா எனத் தொழுதும் ஊடூடு நெக்கு (azhuthum AvA enath thozhuthum UdUdu nekku) : I wept and I was stupefied; I offered worship amidst intense sobbing; from time to time, I melted and choked from devotion; அழுதும் ‘ஆகா’ என பரவசத்தில் வியந்து தொழுதும்; அவ்வப்போது நெகிழ்ந்து தன்வசமிழந்து அன்பு (பக்தி) என்னும் கடலிலே மூழ்கித் திளைத்தும்;
அவசமாய் ஆதரக் கடல் ஊடுற்று (avasamAy Atharak kadal UdutRu) : I lost control and drowned in the sea of love which was my supportive foundation; தன் வசமற்றும், அன்புக் கடலில் திளைத்தும், ஆதரம் = அன்பு;
அமைவில் கோலாகலச் சமய மா பாதகர்க்கு அறி ஒணா மோன முத்திரை நாடி (amaivil kOlAkala samaya mA pAthagarkku aRi oNA mOna muththirai nAdi) : I went in pursuit of the symbol of silence which could never be discerned by restless and vain religious fanatics; அமைதியற்ற ஆடம்பரமான சமய வாதப் பாதகர்களுக்கு அறிவதற்கு முடியாத மெளன என்னும் அறிகுறியைத் தேடியலைந்த போதிலும்; உலகியல் தொடர்பு குன்றி, உணர்வைச் சிவத்தில் நிறுத்தி வாக்கு, மனம் என்னும் இரண்டும் வாளா இருத்தலே `மௌன நிலை`.
பிழை படா ஞான மெய்ப் பொருள் பெறாதே (pizhai padA njAna meyp poruL peRAthE) : still, I could not attain the flawless True Knowledge; தவறுதல் இல்லாத ஞான மெய்ப் பொருளை நான் அடையாமல்,
வினைப் பெரிய ஆதேச புற்பதம் ஆய பிறவி வாராகரம் சுழியிலே (vinaip periya AthEsa puRpatham Aya piRavi vArAkaram suzhiyilE) : like a large bubble capable of assuming various sizes, depending on the extent of past deeds, birth is like a whirlwind in the sea; என்னுடைய வினைகளுக்கு ஏற்றாற்போல சமமானதும் பெரிதானதும் நீர்க்குமிழியை ஒத்ததும்; மாயை நிறைந்ததுமான பல பிறவிகளைத் தாங்கி, பவ சாகர நீர்ச் சுழியிலே நான் விழத்தான் வேண்டுமோ? வினைகளின் நிர்பந்தத்தினால் உயிர்கள் நீர்குமிழிகள் போல் பல மாறுபட்ட உருவங்களை வெவ்வேறு பிறவிகளில் தாங்கி வருகிறது. ஆதேச(ம்) (आदेश) என்றால் அதிகாரபூர்வமான உத்தரவு. ஆதேயம் எனும் பதத்தின் திரிபானது ஆதேசம் என்று கருதினால் : ஆதேச(ம்)— தாங்கப்படுவது (That which is supported—இங்கே தாங்கப்படும் பிறவிகள்); வாராகரம் (vArAgaram) : sea; புற்பதம் (purputham) : bubble;
போய் விழப் பெறுவதோ நான் இனிப் புகல்வாயே (pOy vizhap peRuvathO nAn inip pugalvAyE) : am I now destined to fall into that? Kindly tell me. நான் இனி மேல் போய் விழக் கடவேனோ? சொல்லி அருளுக.
அழுதும்; மனமுருகித் துதித்தும்; நெகிழ்ந்தும்; பக்தி என்னும் கடலிலே மூழ்கித் திளைத்தும்; அமைதியற்றவர்களும் ஆடம்பரமானவர்களுமான சமயவாதிகளால் அறிந்துகொள்ள முடியாத ‘மௌனம்’ என்றும் குறியைத் தேடியும்; சற்றும் தவறாத ஞான மெய்ப்பொருளை அடையாமல்; வினைக்கு ஏற்றாற்போல பலவகையான பிறவிகளைத் தாங்கி; நீர்க்குமிழியைப் போன்ற இந்தப் பிறவிக் கடல் என்னும் சுழியிலே நான் விழுவதுதான் முறையோ? நீதான் விடைகூற வேண்டும். (அடியேன் பிறவிக் கடலில் வீழாமல் காத்தருள வேண்டும்.
பழைய பாகீரதிப் படுகை மேல் வாழ்வு எனப் படியும் (pazhaiya bAkeerathip padugai mEl vAzhvu enap padiyum) : Materialising as prosperous sons on the banks of the old Ganga river in the SaravaNa Pond, பழைய கங்கை என்னும் நீர் நிலையின் சரவணப் படுகையின்மேல் செல்வக் குமரர்களாய்த் தோன்றி,
ஆறு ஆயினத் தன சாரம் பருகுமாறு ஆனனச் சிறுவ (ARu Ayinath thana sAram parugumARu Anana chiRuva) : You imbibed the nectar-like milk from the bosoms of six KArthigai girls with Your six holy faces, Oh Little One! கார்த்திகைப் பெண்களாகிய ஆறு தாய்மார்களின் முலைப்பாலை உண்ட ஆறு திரு முகங்களை உடைய குழந்தையே,
சோணாசலப் பரம மாயூர வித்தக வேளே (sONAsala parama mAyUra viththaka vELE) : You are the Supreme Deity of ThiruvaNNAmalai, Oh Lord, mounting the Peacock; You are the Embodiment of Knowledge! திருவண்ணாமலைப் பரமனே, மயில் வாகனனே, ஞான மூர்த்தியே,
பொழுது சூழ் போது வெற்பு இடிபடா பார் முதல் பொடி படா ஓட (pozhuthu sUzh pOthu veRpu idipadA pAr muthal podi padA Oda) : At dusk, mount Krouncha was crushed to pieces, and all the planets, including Earth, were smashed to smithereens; பொழுது சாயும் மாலை வேளையில் கிரெளஞ்சமலை பொடிபட, பூமி முதலியவை பொடிபட்டுத் தெறிக்க,
முத்து எறி மீனப் புணரி கோ கோ என சுருதி கோ கோ என (muththu eRi meenap puNari kO kO ena suruthi kO kO ena) : the seas, throwing pearls on the shores and protecting the fish, wailed and howled uncontrollably, and the vedic scriptures began to moan loudly; முத்துக்களை வீசுவதும், மீன்களைக் கொண்டதுமான கடல் கோ கோ என்று கதற, வேதங்கள் கோ கோ என்று கதற புணரி (puNari) : sea;
பொருத வேலாயுதப் பெருமாளே. (porutha vElAyuthap perumALE.) : when You fought the war with Your Spear, Oh Great One! போர் செய்த வேலாயுதத்தை ஏந்தும் பெருமாளே.
Comments
Post a Comment