அந்தோ மனமே — J.R. கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune

For a comple translation/explanation of the song 'anthO manamE' in English, please click the underlined hyperlink.

சீரான சிராப்பள்ளியில் கோயில் கொண்டிருக்கும் குமரா சரணம். "அந்தோ மனமே" என்று தொடங்கும் திருச்சிராப்பள்ளிப் பாடலில் "சிராப்பள்ளி் என்பார் மனமேதினி நோக்கிய பெருமாளே," என்கிறார் அருணகிரியார். அதாவது, திருச்சிராப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, என்று திரும்பத் திரும்பச் சொல்வோரின் உள்ளத்தையே தன் கோயிலாகக் கொண்டு விடுகிறானாம் முருகன்! எத்துணை தலப் பெருமை! "திருச்சிராப்பள்ளி என்னலும் தீவினை நரிச்சிராது நடக்கும் நடக்குமே" என்கிறார் அப்பர் பெருமானும். அதாவது, சிராப்பள்ளி என்று சொன்னதும் தீவினை ஓடி விடுமாம். அத்தகைய சீரும் பேரும் பெற்ற திருத்தலப் பாடலில், அலை பாயும் மனதை நிலைப்படுத்த வழிகள் சொல்கிறார் அருணகிரிநாதர்.

அந்தோ மனமே நமதாக்கையை நம்பாதே
இத அகித சூத்திரம் அம்போருகன் ஆடிய பூட்டிது

மனமே! நான் உன்மேல் பரிதாபப் படுகிறேன். அழியப் போகும் இந்த உடலை முதலீடாக வைத்து நீ ஆட்டம் போடுகிறாய். இது இன்ப துன்பங்களை அனுபவிக்க, பிரம்மதேவன் படைத்து உலவ விட்டிருக்கும் ஒரு இயந்திரம்.

இனிமேல் நாம் அஞ்சாது அமையா கிரி யாக்கையைப்
பஞ்சாடிய வேலவனார்க்கியல் அங்கா குலம் வா

ஓரளவுக்கு ஞானம் பெற்ற பின்னரும் இந்தப் பொய் வீட்டை விட்டு மெய் வீட்டை நினைக்க மாட்டாயா? அன்று கரெளஞ்ச மலையையே துகள் துகளாக்கிப் பறக்க விட்ட வேலவன் திருவடியை நினைப்பாய்.

இனி தாக்கையை ஒழியாமல் வந்தோம்
இதுவே கதி யாட்சியும் இந்தா மயில் வாகனர் சீட்டிது
வந்தாளுவம் நாம் என வீக்கிய சிவநீறும்
வந்தே வெகுவா நமை ஆட் கொளும்

எத்தனை பிறவி எடுத்து எடுத்து இளைத்து விட்டோம்! இனிமேலாவது அறுமுகவனை நினைப்போம். அவன் திருவடி நினைத்தால் போதும்; "நாம் வந்து ஆளுவோம்," என உறுதி அளிக்கின்றான். அது நம் விடுதலைப் பத்திரம் அல்லவா. அவன் திருநீறும் நமக்குக் கவசம். நிச்சயம் வருவான், ஆட் கொள்வான் - என உறுதியளிக்கிறார் உன்னத பக்தரான அருணகிரியார். ஆனால் அங்கே வெகுவா என்ற சொல்லைச் சேர்த்துச் சொல்கிறார். அதவாது, அநேகமாக வந்து விடுவான் என்கிறார். நம் தகுதிக்குச் சவாலாக அதைச் சொல்கிறார். நாம் தகுந்தவர்களாக இருந்தால் நிச்சயம் வருவான் என்பதை உணரத்துகிறார். பாடலின் பின் பகுதியில் அவன் புகழ் பாடுகிறார்.

மைந்தா, குமரா எனும் ஆர்ப்பு உய மறவாதே
திந்தோ திமி தீதத மாத் துடி
தந்தா தன னா தன தாத்தன செம் பூரிகை
பேரிகை ஆர்த்தெழ மறை ஓத
செங்கா டெனவே வரு மூர்க்கரை சங்கார சிகாமணி வேற்கொடு
செண்டாடி மகா மயில் மேற் கொளு முருகோனே

அதாவது, மனமே, நீயும் நானும் அகிலமும் உய்ய அவனை மறவாமல், அவன் புகழ் பாடுவோம். வலிமையுள்ளவா இளங்குமரா! திந்தோ திமி எனத் துடி ஒலிக்க, தந்தா தன தாத்தன பேரிகை முழங்க, காடு போல் பெருகி வந்த அசுரர் படையை சம்ஹாரம் செய்த கூர்வேல் கொண்டவா, மாமயிலோனே! என நாவினிக்கக் கொண்டாடுகிறார்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே