தசையும் உதிரமும்: JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune

To read the meaning of the song thasaiyum uthiramum in English, click the underlined hyperlink.

முன்னுரை

வடிவும் இளமையும் வளமையும் கொண்ட குமரா சரணம். "தசையும் உதிரமும் " என்று தொடங்கி, இசையாய், கலிதையாய், அம்பிகையையும் அருமை மைந்தனையும் அருணகிரியார் பாடும் பாடல் அருணை நகரில் அன்று ஆட்கொண்டான் மைந்தன். ஆறுதல் சொன்னாள் அன்னை. மீண்டும் பிறந்து வந்தது போன்ற அந்த அரிய தருணங்களை நினைத்து நினைத்துப் போற்றிப் பாடும் பொதுப் பாடல்.

அசல குலUதி தருமொரு திருமகள்
அமலை விமலை எழுவரும் வழிபட அருளி
அருணையில் உறைதரும் இறையவள் அபிராமி

பனிமலையில் பர்வத ராஜனுக்குத் திருமகளாய் அவதரித்த மலைமகளே! களங்கமறற நிலவே! நவ நவமாய் வடிவெடுத்து வருபவளே அழகிய அபிராமி, மகாசக்தியான மகேஸ்வரி, கருணை மிக்கக் கெளமாரி, விஷ்ணு அம்சமான நாராயணி, வலிமை மிக்க வாராகி, தேவர்களின் தலைவியான இந்திராணி, தீயோரைத் தீமைகளை த்வம்சம் செய்யும் மகாகாளி என்ற பரிசுத்தமான சப்த மாதர்கள் உன் அம்சமாகவே தோன்றி உன்னை வழிபட்டு நிற்க, படை நடத்தித் தடை தகர்க்கும் இறையவளே, அருணையில் அன்றே எளியோனுக்கு வழிகாட்டிய பேரெழிலாம் பேரருளே .

அநகை அநுபயை அநுதயை அபிநவை அதல முதலெழு
தலமிவை முறை முறை அடைய அருளிய பழையவள்

பாவமற்ற புனிதமே, மானுடர் பாவங்களைப் பொடிப் பொடியாக்குவது உனக்குக் கை வந்த கலையே, அடியாருக்கு ஞான அனுபவம் தருகின்ற சுடர் ஒளியும, அந்த அனுபவமும் நீ தானே அம்மா. உருகும் அன்பரிடம் கருணைக் கடலாய்ப் பொங்கி வருபவளே, புதுமைக்கும் புதுமையான புத்துணர்வே! பழமைக்கும் பழமையான ஆதி முதல்வியாய், அதலம் விதலம் முதலான ஏழு உலகங்களையும், முறையாய்ப் படைத்துப் புரக்கும் புராணியே சரணம். அத்தகைய அகில லோக ஜனனிக்கு அருமை மைந்தனாய் அவதரித்த அறுமுகவா சரணம்

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே