உடுக்கத் துகில் — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune

For a translation of this song in English, click the link udukka thugil

உடுக்கஉடலை மூடவும், குளிர் வெம்மையில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும்
துகில் வேணும்ஆடைகள் வேண்டும்
நீள் பசி தொடர்ந்து துன்புறுத்தும் பசி நோயை
அவிக்கைக்குநீக்குவதற்கு
அ(ன்)ன அன்னமும்
பானம் வேணும் நீர், திரவ பதார்த்தங்களும் வேண்டும்
நல் ஒளிக்கு நன்கு ப்ரகாசிப்பதற்கு/அழகாகத் தோன்றுவதற்கு
புன (பின்) நல்லாடை வேணும் மீண்டும்(பின்னும்) நல்ல (பட்டு முதலிய) ஆடைகள்/ (ஏற்கெனவே ஆடை தேவை என்பது சொல்லியாயிற்று எனவே, அத்தியாவசிய தேவைக்கு மட்டுமல்ல, கொஞ்சம் பகட்டுக்கு “பின்னும்” பட்டு ஆடை வேண்டும் என்பதே புனலாடை, (வடமொழியில் புன: பின்னும்) வேண்டும்
மெய் உறு நோயை உடம்புக்கு ஏற்படும் பல பிணிகளை
ஒழிக்க இல்லாமல் செய்ய
பரிகாரம் வேணும்மாற்று/ மருந்துகள் வேண்டும்
உள் இருக்கஅகத்தில் /வீட்டில் குடும்பத்தைப்பராமரிக்க
சிறு நாரி வேணும் ஒரு இளம் பெண் தேவை
ஒர் படுக்க தனி வீடு வேணும்அப்படி இல்லறத்தனாக வாழ தனிமை தேவை. எனவே ஒரு எனக்கென்று தனியான, தொந்தரவு இல்லாத இல்லமும் தேவை
இவ்வகை யாவும் கிடைத்து என்றெல்லாம் வேண்டியும், தேடியும் கிடைக்கப்பெற்று
க்ருஹவாசி ஆகி ஒரு இல்லறத்தான் ஆகி
அம்மயக்ககடல் ஆடி அந்த, மாயையாகிய அலைகள் ஓயாத கடலில் திளைத்துக்குளித்து
நீடிய கிளைக்கு அதனால் வளர்ந்து கொண்டே போகும் சுற்றத்தினருக்கு
பரிபாலனாய்பாதுகாவலானக இருப்பதிலேயே
உயிர் அவமே போம்இந்த ஜீவன் வீணாகிப்போகும்
(எனவே என்னை மாயையில் இருந்து மீட்டு)
க்ருபைச்சித்தமும் உன்னுடைய கருணை வடிவான சித்ததையும்
ஞான போதமும் (அதன் பயனாக) ஞான உபதேசமும்
அழைத்து தர வேணும் நீயாகவே என்னைத் தன்பால் ஈர்த்து எனக்கு அருள வேண்டும்
ஊழ் பவஎன்னுடைய வினைப்பயன் என்னும்
கிரிக்குள் காடுகள் அடர்ந்த மலையினுள்
சுழல்வேனைவெளியேற வழிதெரியாது சுற்றிச் சுழல்கின்ற என்னை
ஆள்வது ஒரு நாளே அப்படி நீயாக மனம் இரங்கி ஆட்கொள்ளும் ஒரு நாளும் வருமோ
(எப்படி என்றால் வெளி ஏற வழி தெரியாமல் இராவணனிடம் சிறைப்பட்டிருந்த சீதையை மீட்க, சுக்ரீவனின் மந்திரியாகஇருந்த, குறிப்பறியும் சாமர்த்தியமும் வீர தீரமும் உடைய அனுமனைத் தன் பெயர் பொறித்த உயர்ந்த கணையாழியை அடையாளமாகக்கொடுத்து அனுப்பி, அவன் இலங்கையைப் பொசுக்கி, மீண்டும் தன்னிடம் வந்து அவள் சேதி சொல்ல ராமன் தானே சென்று மீட்டுக்கொண்டது போல. தக்க ஒரு குருநாதரை அனுப்பி என் வினைகளைப்பொசுக்கி, நீயும் என்னை மீட்டெடுத்துக்கொள்ள வேண்டும் ஸ்வாமி.)
குடக்குச் மேற்கு திக்கில் சென்று
சிலதூதர் தேடுக சில வானர தூதர்கள் தேடட்டும்
வடக்குச் சிலதூதர் நாடுக வடக்குப்புறம் சென்று சில வாரன வீரர்கள் தேடட்டும்.
குணக்குச் கிழக்கே சென்று
சிலதூதர் தேடுக ஒரு வானரப்படை தேடுங்கள்
வென மேவிஎன்று ஏவ, அவர்களும் அப்படியே செல்லவும்
குறிப்பில்இவனால்தான் காரியம் ஆகும் என்னும் குறிப்புத் தோன்றும்படி
குறிகாணும்மாருதி உள்ளக்குறிப்பைச்சொல்லாமல் உணரும் வாயு குமாரனே
இனித்தெற்கு வானரங்கள் காண, ராவணன் ஒரு பெண்ணை (சீதையை) வலுவில் கொண்டு சென்ற திசையான தெற்கில்
ஒரு தூது போவது ஒப்பற்றவனான நீ போவாய்
குறிப்பிற் குறி குறிக்கோளான சீதை பற்றிய தகவல்
போன போதிலும் வரலாமோ கிடைக்காமல் நீ திரும்பி வரலாகுமா (ஆகாது- எப்படியும் நீ செய்வாய் எனவும்)
அடிக் குத்திரராகிய அடியோடு, அறவே வஞ்சகர்களான
அரக்கர்க்கு அந்த ராவணாதி அசுரர்களுக்கு
இளையாத சற்றும் சளைக்காத (அஞ்சாத)
தீரனும் வீரத்தில் மிக்க அனுமனும் சென்று
அலைக்கு அலைகடலை
அப்புறம் மேவி தாண்டிச்சென்று
மாது உறு சீதையாகிற பெண் இருக்கும்
வனமே சென்று அந்த அசோக வனத்தை அடைந்து
அருள் பொன் இராமனால் கொடுக்கப்பட்ட
திருவாழி மோதிரம் அந்த உயர்ந்த கணையாழியை
அளித்து உற்ற அவர் மேல் சீதையிடம் கொடுத்து விட்டு வந்த மாருதியின் மீது
மனோகரம் அளித்து உன் வாஞ்சையை/அனுக்ரஹத்தை கொடுத்து
கதிர்காமம் கதிர்காமத்தலத்தில்
மேவிய பெருமாளே வீற்றிருக்கின்ற பெருமானே

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே