150. உடுக்கத் துகில்

ராகம் : காம்போதி தாளம்: மிஸ்ரசாபு (1½ + 2)
உடுக்கத் துகில்வேணு நீள்பசி
யவிக்கக் கனபானம் வேணுநல்
ஒளிக்குப் புனலாடை வேணுமெய்யுறுநோயை
ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்
இருக்கச் சிறுநாரி வேணுமொர்
படுக்கத் தனிவீடு வேணுமிவ்வகையாவுங்
கிடைத்துக் க்ருஹவாசி யாகிய
மயக்கக் கடலாடி நீடிய
கிளைக்குப் பரிபால னாயுயிரவமேபோம்
க்ருபைச்சித் தமுஞான போதமு
மழைத்துத் தரவேணு மூழ்பவ
கிரிக்குட் சுழல்வேனை யாளுவதொருநாளே
குடக்குச் சிலதூதர் தேடுக
வடக்குச் சில தூதர் நாடுக
குணக்குச் சில தூதர் தேடுக வெனமேவிக்
குறிப்பிற் குறிகாணு மாருதி
யினித்தெற் கொருதூது போவது
குறிப்பிற் குறிபோன போதிலும்வரலாமோ
அடிக்குத் திரகார ராகிய
அரக்கர்க் கிளையாத தீரனு
மலைக்கப் புறமேவி மாதுறுவனமேசென்
றருட்பொற் றிருவாழி மோதிர
மளித்துற் றவர்மேல் மனோகர
மளித்துக் கதிர்காம மேவியபெருமாளே

Learn The Song


Paraphrase

உடுக்க துகில் வேணும்(udukka thugil vENum): I need clothes to wear;

நீள் பசி அவிக்க கன பானம் வேணும்(neeL pasiavikka ganapAnam vENum): I need huge stores of drinks to quell my deep hunger;

நல் ஒளிக்கு புனல் ஆடை வேணும்(naloLikkup punalAdai vENum): For a bright appearance, I need water to bathe and colourful clothes to wear; புனல்( punal): water;

மெய்யுறு நோயை ஒழிக்க பரிகாரம் வேணும்(mey uRu nOyai ozhikkap parikAram vENum): To heal my bodily diseases, I need medicines and remedies; பரிகாரம்(parigaram): remedy;

உள் இருக்க சிறு நாரி வேணும் (uL irukka chiRu nAri vENum): I need a young wife to take care of my home; நாரி (nAri): woman;

படுக்க ஓர் தனி வீடு வேணும்(padukkath thani or veedu vENum): I need a private house for my sleeping pleasure;

இவ் வகை யாவும் கிடைத்து க்ருஹ வாசியாகி அ மயக்க கடல் ஆடி(ivvagai yAvum kidaiththuk gruhavAsi yAgiya mayakkak kadalAdi): and if I get all these I need, I become a "Family Man"! Then I drown in the deep sea of illusion!

நீடிய கிளைக்கு பரிபாலனாய் உயிர் அவமே போம் (neediya kiLaikkup paripAlanAy uyir avamEpOm): I become the guardian of an extended family, and lo, there goes my life into utter waste!

க்ருபை சித்தமும் ஞான போதமும் அழைத்து தர வேணும்(krupai chiththamu nyAna bOdhamum azhaiththuth tharavENum): You must call me unto Yourself specially to provide me with a compassionate heart and Knowledge of SivA.

ஊழ் பவ கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ஒரு நாளே(Uzhbava girikkuL suzhal vEnai ALuvadh orunALE ): I am caught reeling in the whirlwind of fate in this mountain-valley of birth; and will You please take me over one of these days?

Hereafter SwAmigaL describes HanumAn's role in RAmAyaNA, with particular reference to KadhirgAmam:

குடக்கு சில தூதர் தேடுக வடக்கு சில தூதர் நாடுக குணக்கு சில தூதர் தேடுக என மேவி (kudakku chila dhUthar thEduga vadakku chila dhUthar nAduga kuNakku chiladhUthar thEduga enamEvi): "Some messengers should proceed Westward to look for SitA, some should proceed Northward to search, and some should go Eastward" these were the instructions (given by Sugreeva) to the messengers. குடக்கு(kudakku):west; (); குணக்கு(kuNukku): east;

குறிப்பில் குறி காணும் மாருதி இனி தெற்கு ஒரு தூது போவது (kuRippiR kuRikANu mAruthi iniththeR koru dhUthu pOvadhu): HanumAn, sharp-witted and ready to understand the hint, was chosen to go south;

குறிப்பில் குறி போன போதிலும் வரலாமோ(kuRippiR kuRi pOna pOdhilum varalAmO): and if the intended objective is not fulfilled despite the hint, should he return futilely? (Sugriva had briefed him not to return without any positive information about SitA Devi).

அடி குத்திரகாரர் ஆகிய அரக்கர்க்கு இளையாத தீரனும்(adikkuth thirakAra rAgiya arakkark kiLaiyAdha dheeranum): The great warrior (HanumAn), who is never intimidated by the treacherous RAkshasAs,

மலைக்கு அப்புறம் மேவி மாது உறு வனமே சென்று (alaikkap puRamEvi mAdhuRu vanamE sendru): jumped across the wavy sea to the other side and reached AsOkavanam, where SitA DEvi was imprisoned, மாது (mAthu): lady, (refers to Sita);

அருள் பொன் திரு ஆழி மோதிரம் அளித்து (aruL poR thiruvAzhi mOdhiram aLiththu): and handed to her the (SriRAmA's) divine golden ring.

உற்றவர் மேல் மனோகரம் அளித்து (utravarmEl manOharam aLiththu): and returned back and was blessed by You at

கதிர் காமம் மேவிய பெருமாளே. (kadhir kAmamEviya perumALE.): KadhirgAmam, Your favourite abode, Oh Great One!

Comments