163. தறையின் மானுட


ராகம் : ஆரபிஅங்கதாளம் (8)
1½ + 2 + 2 + 2
தறையின் மானுட ராசையி னால்மட
லெழுது மாலருள் மாதர்கள் தோதக
சரசர் மாமல ரோதியி னாலிருகொங்கையாலுந்
தளர்மி னேரிடை யாலுடை யால்நடை
யழகி னால்மொழி யால்விழி யால்மருள்
சவலை நாயடி யேன்மிக வாடிமயங்கலாமோ
பறவை யானமெய்ஞ் ஞானிகள் மோனிக
ளணுகொ ணாவகை நீடுமி ராசிய
பவன பூரக வேகிக மாகிய விந்துநாதம்
பகரொ ணாதது சேரவொ ணாதது
நினையொ ணாதது வானத யாபர
பதிய தானச மாதிம னோலயம்வந்துதாராய்
சிறைவி டாதநி சாசரர் சேனைகள்
மடிய நீலக லாபம தேறிய
திறல்வி நோதச மேளத யாபரஅம்புராசித்
திரைகள் போலலை மோதிய சீதள
குடக காவிரி நீளலை சூடிய
திரிசி ராமலை மேலுறை வீரகுறிஞ்சிவாழும்
மறவர் நாயக ஆதிவி நாயக
ரிளைய நாயக காவிரி நாயக
வடிவி னாயக ஆனைத னாயகஎங்கள்மானின்
மகிழு நாயக தேவர்கள் நாயக
கவுரி நாயக னார்குரு நாயக
வடிவ தாமலை யாவையு மேவியதம்பிரானே.

Learn The Song



Know Ragam Arabhi (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S R2 M1 P D2 S    Avarohanam: S N3 D2 P M1 G3 R2 S

Paraphrase

தறையின் மானுடர் ஆசையினால் மடல் எழுதும் மால் அருள் மாதர்கள் (thaRaiyin mAnudar AsaiyinAl madal ezhudhu mAl aruL) : On this earth, people write 'madals' (doodling on palm leaves - for explanation see மடல் எழுது/மடல் ஏறு), being intoxicated by lust for the harlots, இந்தப் பூமியில் மக்கள் காம ஆசையால் மடல் எழுதக்கூடிய அளவுக்கு (அவர்களுக்கு) மயக்கத்தைத் தருகின்ற விலைமாதர்கள், தறை - எதுகை நோக்கி தரை என்பது வல்லின ‘ற‘ கரம் பெற்றது.

தோதக சரசர் (mAdhargaL thOdhaga sarasar) : who make cunning and immodest gestures and மயக்கத்தைத் தருகின்ற விலை மாதர்களான, வஞ்சகமான காமச் செயலுடையாரது, தோதக (thothaga) : lewd, immodest; சரசம் (sarasam) : amorous gestures, teasing love-play;

மாமலர் ஓதியினால் இரு கொங்கையாலும் (thOdhaga sarasar mAmalar OdhiyinAl iru kongaiyAlum:) : and with their flower-decked hair and twin breasts, ஓதி (Othi) : hair;

தளர் மின்நேர் இடையால் உடையால் நடை அழகினால் மொழியால் விழியால் மருள் (thaLarmi nEr idaiyAl udaiyAl nadai azhaginAl mozhiyAl vizhiyAl maruL) : their slender waists that look like the flashes of lightning; their delicate clothings; their lilting gaits, their sweet talk and beautiful eyes; should I be stupefied by all these, தளர்ந்ததுவும், மின்னல் போன்றதுமான இடையாலும், உடுத்துள்ள ஆடையாலும், நடை அழகினாலும், பேசும் இனிய பேச்சினாலும், கண்களாலும்,

சவலை நாய் அடியேன் மிக வாடி மயங்கலாமோ(savalai nAy adiyEn miga vAdi mayangalAmO: and should I, a lowly dog, remain dazed like a little baby and be distressed? எனது உள்ளம் உருகி, இளைத்துத் தேய்ந்து பாலில்லாக் குழந்தை போல் இளைத்து மெலிந்து வாடுவது தகுமோ? சவலை (savalai) : a baby which is denied mother's milk; தாயின் முலைப்பால் கிடைக்காத குழந்தை;

பறவையான மெய் ஞானிகள் மோனிகள் (paRavaiAna mey gnAnigaL mOnigaL) : Those nomadic sages who roam from place to place like birds and are True Seekers of knowledge and who have adopted Silence: பறவைபோல் ஓரிடத்திலும் தங்காது பற்றற்றுத்திரியும் உண்மை ஞானிகளும், மௌனிகளும்
பறவை மெய் ஞானிகள் என்பது பரமஹம்சர் என்பதன் மொழிபெயர்ப்பு. இத்தகைய ஞானிகள் இகலோகத்தில் இருந்தும் மெய்ஞ் ஞானத்தை அடைந்தவர்கள். எப்படி ஹம்சம் (அன்னப் பறவை) தண்ணீரும் பாலும் கலந்திருந்தாலும் பாலை மட்டும் எடுத்துக் கொள்ளுமோ அது போல ஞானிகள் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளும் பக்குவம் பெற்றவர்களாவர். முட்டைக் குள்ளிருந்து பறவைக் குஞ்சு முற்றியவுடன் அம்முட்டையை உடைத்துக்கொண்டு வெளிப்பட்டபின் திரும்ப எவ்வாறு அம்முட்டையை விரும்பி அதனிடம் வருவதில்லையோ, அதுபோல் பற்றற்ற உண்மை ஞானிகள் துறவறம் பூண்ட பின் தான் வாழ்ந்த ஊர் வீடு மனைவி மக்கள் என்பனவற்றை மனதாலும் பற்றாமல் நிற்பார்கள்.

அணுக ஒணா வகை நீடும் இராசிய(ம்) (aNugoNA vagai needumi rAsiya) : even they are incapable of approaching this mysterious and detached Truth; இராசிய(ம்)(irAsiyam) : secret/mystery;

பவன பூரக(ம்) ஏகிகமாகிய விந்து நாதம் (pavana pUragam EgigamAgiya vindhu nAdham ) : and this Truth which people seek to achieve by holding the inhaled air (pUragam) through breath-control methods (PrANAyAmam) and which manifests in the sound of Siva-Sakthi union; பவனம் (pavanam) : air; பூரகம் (pooragam) : inhalation. There are four parts to each yogic breath; (1) puraka or inhalation, (2) rechaka or exhalation, and (3) kumbaka or pausing/holding of breath. There are two forms of kumbaka, breath retention after inhalation and pausing of breathing after exhalation. விந்து நாதம் (vinthu naatham) : union of male and female energies; here, sound representing the Shiva and Shakthi;

பகர ஒணாதது சேர ஒணாதது நினை ஒணாததுவான (pagar oNAdhadhu sEra oNAdhadhu ninai oNAdhadhu vAna) : this mysterious Truth is undescribable, unattainable, unimaginable;

தயாபர பதியது ஆன சமாதி மனோலயம் வந்து தாராய் (dhayApara pathiya dhAna samAdhi manOlayam vandhuthArAy) : kindly come and deliver the blissful state of Samadhi to me, which is a chief state full of compassion and capable of holding my mind in tranquility; கருணைப் பரம் பொருளாய். மூலப் பொருளான மனதை ஒடுக்கும் சமாதி நிலைப் பேற்றை நீ வந்து (எனக்குத்) தந்து அருள வேண்டும். பதியது ஆன = பரம் பொருளான;

மனோலயம் என்றால் என்ன? மனோலயம் என்றால் மன ஒடுங்கம் என்று பொருள். நமது மனம் ஏதாவது ஒரு அனுபவத்தில் பொருந்தி, மனம் வேறு எண்ணங்களால் விரியாமல் இருப்பதை மனோலயம் எனக் கூறுகிறோம். கடலின் மேற்பரப்பில் சதா அலைகள் ஆர்ப்பரிப்பதை போல் மனதில் சதா எண்ணங்கள் தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கும். தியானம் என்ற கருவியை பயன்படுத்தி மனதை கடலின் அடி ஆழத்தில் அலைகள் அற்ற நிசப்தம் இருப்பது போன்ற ஆழ்ந்த நிலைக்கு நாம் எடுத்துச் செல்ல முடியும்.

சிறை விடாத நிசாசரர் சேனைகள் மடிய நீல கலாபம் அது ஏறிய திறல் விநோத சமேள தயாபர (siRai vidAdha nisAcharar sEnaigaL madiya neela kalAbama dhERiya thiRal vinOdha samELa dhayApara) : You mounted the blue peacock and fought with the demons who were holding the celestials in prison and killed their entire armies, Oh Wonderful, Powerful and Compassionate One! திறல் (thiral) : potential, capability; நிசாசரர் (nisacharar) : people who roam in the night, the asuras;

அம்புராசி திரைகள் போல் அலை மோதிய சீதள குடக (amburAsi thiraigal pOl alai mOdhiya seethaLa kudaga kAviri) : This cool river Kaveri coming from the Coorg (Kudagu) region has large waves thumping like the sea waves; kudagu also means west. kudagu Kaviri means refers to the river coming to Trichy from the west. அம்புராசி (amburAsi) : sea; திரை (thirai) : waves;

நீள் அலை சூடிய திரிசிரா மலை மேல் உறை வீர (neeL alai sUdiya thirisi rAmalai mEluRai veera ) : You are the valorous One residing in ThirisirAmalai lashed by those waves!

குறிஞ்சி வாழும் மறவர் நாயக (kuRinjivAzhum maRavar nAyaka ) : You are the leader of all hunters living in mountainous regions (kuRinji);

ஆதி விநாயகர் இளைய நாயக காவிரி நாயக ( Adhi vinAyagar iLaiya nAyaka kAviri nAyaka ) : You are the younger brother of the primordial Lord GaNapathi; and You are the Lord of River KAvEri!

வடிவின் நாயக ஆனை தன் நாயக (vadi vinAyaga Anaitha nAyaka ) : You are the Leader par excellence in good looks; You are the Consort of DEvayAnai;

எங்கள் மானின் மகிழு(ம்) நாயக தேவர்கள் நாயக (engaL mAnin magizhu nAyaka dhEvargaL nAyaka) : You are also the Consort of, and reveller in, our dear VaLLi, the deer-like damsel; You are the Master of all the celestials!

கவுரி நாயகனார் குரு நாயக (gavuri nAyakanAr guru nAyaka) : You are the Master of Lord SivA, the Consort of Mother Gowri;

வடிவதாம் மலை யாவு(ம்) மேவிய தம்பிரானே.(vadiva dhAmalai yAvaiyu mEviya thambirAnE.) : You relish in setting up Your abode in all beautiful mountains, Oh Great One!

Vindhu and Nadham Explained

'Nadha' is the principle of sound. It is also known as 'nama' or name. From this 'nadha' or name, came out 'bindu' or 'rupa' which is the form. These name and form are 'nAma' and 'rUpa' or 'Nadha' and 'bindu', what is known as 'OmkAra praNava', and these are the seed and seat of all matter and force. 'Nadha' is represented by a line or a pillar and the 'bindu' by a disc or elliptic base. It is this 'Nadha' or vibration that is known as 'linga', and 'bindu' is what is known as its 'peetam'. This 'lingam' along with 'peetam' is the principle of name and form, that is beyond any comprehension, and the form that could be comprehended little better came out of the 'bindu' in the order of evolution. This is what is known as 'Siva-Sakthi aikkiyam' which is 'rupaarupam' ('rupa - arupam'), that is with shape or without shape. (reference - Siva Agamam and Saiva Sidhdhantam).

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே