157. வருபவர்கள் ஓலை

ராகம் : பீம்பளாஸ் தாளம்: அங்கதாளம் 2½ + 1½ + 1½ (5½)
வருபவர்க ளோலை கொண்டு நமனுடைய தூத ரென்று
மடிபிடிய தாக நின்றுதொடர்போது
மயலதுபொ லாத வம்பன் விரகுடைய னாகு மென்று
வசைகளுட னேதொ டர்ந்துஅடைவார்கள்
கருவியத னாலெ றிந்து சதைகள்தனை யேய ரிந்து
கரியபுன லேசொ ரிந்துவிடவேதான்
கழுமுனையி லேயி ரென்று விடுமெனும வேளை கண்டு
கடுகிவர வேணு மெந்தன்முனமேதான்
பரகிரியு லாவு செந்தி மலையினுட னேயி டும்பன்
பழநிதனி லேயி ருந்தகுமரேசா
பதிகள் பல வாயி ரங்கள் மலைகள்வெகு கோடி நின்ற
பதமடியர் காண வந்தகதிர்காமா
அரவுபிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை
யணிவர் சடை யாளர் தந்தமுருகோனே
அரகரசி வாய சம்பு குருபரகு மார நம்பு
மடியர்தமை யாள வந்தபெருமாளே

Learn The Song


Paraphrase

வருபவர்கள் ஓலை கொண்டு(varubavarga Lolai koNdu): Bringing summons on papyrus leaves,

நமனுடைய தூதர் என்று மடி பிடியது ஆக நின்று தொடர் போது(namanudaiya dhUtha rendru madipidiya dhAga nindru thodarpOdhu): saying that they are messengers of the Death-God Yama, they grab my waist firmly and follow me;

மயல் அது பொல்லாத வம்பன் விரகுடையன் ஆகும் என்று(mayal adhu /po lAdha vamban viragudaiya nAgu mendru): they call me lewd and wicked gossip and the most cunning fellow;

வசைகளுடனே தொடர்ந்து அடைவார்கள்(vasaigaLuda nEtho darndhu adaivArgaL): and heap curses on me as they chase me.

கருவி அதனாலே எறிந்து சதைகள் தனையே அரிந்து (karuvi adhanAl eRindhu sadhaigaL thanaiyE arindhu): They torture me with their weapons and slash my flesh into pieces;

It is believed that the messengers of Yama would chop the body and feed their own flesh to people who have sinned by killing other lives and would pour molten iron into their mouth if they resist to eat their own flesh.

கரிய புனலே சொரிந்து விடவே தான்(kariyapuna lEso rindhu vidavEthAn): They pour black-hot molten iron into my mouth,

After repeating the above treatment several items, Yama sends them to the gallows;

கழு முனையிலெ இரு என்று விடும் என்னும் (kazhumunaiyi lEyi rendru vidumenum): They condemn me to suffer at the tip of the gallows.

அவ்வேளை கண்டு கடுகி வர வேணும் எந்தன் முனமே தான்(avELai kaNdu kadugivara vENu mendhan munamEthAn): At that very moment, You must come rushing to my aid.

பர கிரி உலாவு செந்தி மலையின் உடனே (paragiri ulAvu sendhi malaiyinudanE): You are in ThirupparangkundRam and at the Sandal Mount near ThiruchchendhUr where You always majestically stroll about, (The terrain on which the tiruchendur temple stands is partially a sandal mountain and sea shore.) பர கிரி (para giri): Tirupparankundram;

இடும்பன் பழனி தனிலே இருந்த குமரேசா(idumban pazhanithani lEyi rundha kumarEsA): and also at Pazhani Hill which was brought by Idumban, Oh Lord KumaresA!

பதிகள் பல ஆயிரங்கள் மலைகள் வெகு கொடி நின்ற( padhigaL pala AyirangaL malaigaL vegu kOdi nindra): You dwell at thousands of abodes and prevail over millions of mountains!

பதம் அடியர் காண வந்த கதிர்காமா(padhamadiyar kANa vandha kadhirkAmA): Your lotus feet are sought by Your devotees at KadhirgAmam!

அரவு பிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை அணிவர் (aravupiRai pULai thumbai viluvamodu thUrvai kondrai aNivar ): He wears the serpent, crescent moon, pULai (Indian laburnum) and thumbai (leucas) flowers, vilvam (bael) leaves, aRugam (cynodon) grass and kondRai (Indian laburnum) flowers upon

சடையாளர் தந்த முருகோனே(sadaiyALar thandha murugOnE): His tresses; He is Lord SivA who kindly delivered You, Oh MurugA!

அரகர சிவாய சம்பு குருபர குமார (araharasi vAya sambu gurupara kumAra): Oh KumarA, You are the Master of SivA who removes sins, who has the famous three letters SivAya for Himself and who gives solace to all!

நம்பும் அடியர் தம்மை ஆள வந்த பெருமாளே.(nambum adiyarthamai yALa vandha perumALE): You govern the lives of those devotees who trust You completely, Oh Great One!

Comments