Posts

441. அனித்தமான

ராகம் : பூபாளம் சதுச்ர ஏகம் திஸ்ர நடை அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி யடைத்து வாயு வோடாத வகைசாதித் தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச அசட்டு யோகி யாகாமல் மலமாயை செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார சிரத்தை யாகி யான் வேறெ னுடல்வேறு செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத சிவச்சொ ரூபமாயோகி யெனஆள்வாய்

440. வம்பறாச் சில

ராகம் : ஆபோகி தாளம் : ஆதி 2 களை வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சம யத்துக் கத்துத் திரையாளர் வன்க லாத்திரள் தன்னை யகன்றும னத்திற் பற்றற் றருளாலே தம்ப ராக்கற நின்னை யுணர்ந்துரு கிப்பொற் பத்மக் கழல்சேர்வார் தங்கு ழாத்தினி லென்னையு மன்பொடு வைக்கச் சற்றுக் கருதாதோ

439. முட்டுப் பட்டு

ராகம் : பெஹாக் அங்கதாளம் (6) 1½ + 1½ + 3 முட்டுப் பட்டுக் கதிதோறும் முற்றச் சுற்றிப் பலநாளும் தட்டுப் பட்டுச் சுழல்வேனைச் சற்றுப் பற்றக் கருதாதோ வட்டப் புட்பத் தலமீதே வைக்கத் தக்கத் திருபாதா கட்டத் தற்றத் தருள்வோனே கச்சிச் சொக்கப் பெருமாளே.

438. மக்கட்குக் கூற

ராகம் : லதாங்கி திஸ்ரத்ரிபுடை (7) மக்கட்குக் கூறரி தானது கற்றெட்டத் தான்முடி யாதது மற்றொப்புக் கியாதுமொ வாதது மனதாலே மட்டிட்டுத் தேடவொ ணாதது தத்வத்திற் கோவைப டாதது மத்தப்பொற் போதுப கீரதி மதிசூடும் முக்கட்பொற் பாளரு சாவிய அர்த்தக்குப் போதக மானது முத்திக்குக் காரண மானது பெறலாகா முட்டர்க்கெட் டாதது நான்மறை யெட்டிற்றெட் டாதென வேவரு முற்பட்டப் பாலையி லாவது புரிவாயே

437. பொக்குப்பை

ராகம் : பஹுதாரி தாளம் : திச்ர ரூபகம் (5) பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப் பொய்த்தெத்துத் தத்துக் குடில்பேணிப் பொச்சைப்பிச் சற்பக் கொச்சைச்சொற் கற்றுப் பொற்சித்ரக் கச்சுக் கிரியார்தோய் துக்கத்துக் கத்திற் சிக்குப்பட் டிட்டுத் துக்கித்துக் கெய்த்துச் சுழலாதே சுத்தச்சித் தத்துப் பத்திப்பத் தர்க்கொத் துச்சற்றர்ச் சிக்கப் பெறுவேனோ

436. புனமடந்தை

ராகம் : சங்கராபரணம் தாளம் : ஆதி - 2 களை (16) புனமடந் தைக்குத் தக்கபு யத்தன் குமரனென் றெத்திப் பத்தர்து திக்கும் பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும் பிறிதேதும் புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம் சகலமும் பற்றிப் பற்றற நிற்கும் பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந் தனைநாளும் சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண் டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந் தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன் செயல்பாடித் திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந் திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ் சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் றருள்வாயே

435. புரைபடும்

ராகம் : ஹிந்தோளம் தாளம் : ஆதி புரைபடுஞ் செற்றக் குற்றம னத்தன் தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன் புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந் துரிசாளன் பொறையிலன் கொத்துத் தத்வவி கற்பஞ் சகலமும் பற்றிப் பற்றற நிற்கும் பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன் கொடியேனின் கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங் கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன் கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங் கதிர்வேலுங் கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும் பதிகளும் பொற்புக் கச்சியு முற்றுங் கனவிலுஞ் சித்தத் திற்கரு திக்கொண் டடைவேனோ