Search with Song Number

441. அனித்தமான


ராகம்: பூபாளம்தாளம்: சதுச்ர ஏகம் திஸ்ர நடை
அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி
யடைத்து வாயு வோடாதவகைசாதித்
தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச
அசட்டு யோகி யாகாமல் மலமாயை
செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார
சிரத்தை யாகி யான்வேறெனுடல்வேறு
செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத
சிவச்சொ ரூபமாயோகியெனஆள்வாய்
தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால
சுதற்கு நேச மாறாத மருகோனே
சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால
தொடுத்த நீப வேல்வீரவயலூரா
மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி
மகப்ர வாக பானீயமலைமோதும்
மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாரு
மதித்த சாமி யேதேவர் பெருமாளே.

Learn The Song

Music Hosting - Embed Audio Files -

Paraphrase

அனித்தமான ஊன் நாளுமிருப்பதாகவே (aniththamAna Un nALum iruppadhAgavE) : Under the delusion that this mortal body is going to last forever, அழியக் கூடிய இந்த உடல் என்றும் நிலைத்து இருக்கச் செய்ய, ஊன்(oon) : flesh, body;

நாசி அடைத்து வாயு ஓடாத வகை சாதித்(து) (nAsi adaiththu vAyu OdAdha vagai sAdhiththu) : people hold their noses and practise controlling their breath, மூக்கை அடைத்து மூச்சு ஓடாத வகையை அப்யசித்து,

அவத்திலே குவால் மூலி புசித்து (avaththilE kuvAl mUli pusiththu) : eating piles of leaves and herbs in vain. வீணாக நிரம்ப மூலிகைகளை உண்டு, குவால்(kuvAl) : a heap, a pile, a group, a hillock;

வாடும் ஆயாச அசட்டு யோகி ஆகாமல் (vAdum AyAsa asattu yOgi AgAmal) : Instead of becoming a pseudo-yogi like these people who wear themselves out ultimately, வாடுகின்ற, அலுப்பும் மூடத்தனமும் உள்ள யோகியாக ஆகாமல்,

மல மாயை செனித்த காரிய உபாதி ஒழித்து (malamAyai jenniththa kAri yOpAdhi ozhiththu) : I want to destroy all the effects and sufferings arising from my three slags (namely arrogance, desire and karma) and delusion; மும்மலங்களினாலும் மாயையினாலும் தோன்றுகின்ற காரியங்களையும் வேதனைகளையும் ஒழித்து,

ஞான ஆசார சிரத்தை ஆகி (gnAna AchAra siradhdhai Agi) : I want to be full of knowledge, discipline and flair; அறிவும், ஆசாரமும், முயற்சியும் உடையவனாக ஆகி,

யான் வேறு எனுடல் வேறு செகத்தி யாவும் வேறாக (yAn vERu en udal vERu jegaththi yAvum vERAga) : I want to realise that I am an entity separate from my body and distinct from the rest of the universe; யான் வேறு, எனது உடல் வேறு, இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள யாவுமே வேறு என்ற பற்றற்ற நிலையினால் அடையக் கூடியதும்,

நிகழ்ச்சியா மநோதீத (nigazhchiyA manOtheetha) : I want to attain that state which is beyond the comprehension of my mind, and which causes the incidents to happen. நிகழ்ச்சிகளைக் காட்டும் இந்த மனதுக்கு எட்டாததாய் விளங்குவதும் ஆன

சிவச்சொரூப மாயோகி என ஆள்வாய் (siva sorUpa mAyOgi ena ALvAy) : Kindly bless me to become the great Yogi of SivA's manifestation! சிவ ஸ்வரூப மஹா யோகி என யான் ஆகுமாறு என்னை ஆண்டருள்வாயாக.

தொனித்த நாத வேய் ஊது (dhoniththa nAdha vEy Udhu) : He blows sweet music into His flute; ஒலி தரும் இசையுடன் கூடிய புல்லாங்குழலை ஊதுபவனும், வேய்(vEy) : flute, புல்லாங்குழல்;

சகஸ்ர நாம கோபால சுதற்கு (sahasra nAma gOpAla suthaRku) : He is the son of Nandagopan; and He has a thousand names. ஆயிரம் நாமங்கள் கொண்டவனும், நந்தகோபனின் மகனுமான திருமாலின்

நேச மாறாத மருகோனே (nEsa mARAdha marugOnE) : You are the dearest nephew of that Gopalan (Vishnu)! அன்பு மாறுபடாத மருமகனே,

சுவர்க்க லோக மீகாம (suvarga lOka meekAma) : You are the captain who protected the great ship called DEvA's land! தேவர் உலகம் என்ற கப்பலைக் காப்பாற்றிய மாலுமியே, மீகாமன்(meekAman) : pilot, மாலுமி

சமஸ்த லோக பூபால (samastha lOka bUpala) : You are the protector of the entire world! சகல லோகங்களையும் பாலித்து அருளும் அரசனே,

தொடுத்த நீப வேல் வீர வயலூரா ( thoduththa neeba vEl veera vayalUrA) : You wear the garland made of fresh kadappa flowers! You hold the Spear valorously, and belong to VayalUr! அப்பொழுதுதான் தொடுக்கப் பெற்ற கடப்ப மலர்மாலையனே, வேல் வீரனே, வயலூரானே,

மனித்தர் ஆதி சோணாடு தழைக்க மேவு காவேரி (maniththar Adhi sONAdu thazhaikka mEvu kAvEri) : River KAveri flows in the ChOzha kingdom benefitting mankind and every living being; மனிதர்கள் முதல் சகல ஜீவராசிகளும் உள்ள சோழநாடு தழைத்திட வரும் காவேரியின்

மகப்ரவாக பானீயம் அலை மோதும் (maga pravAga pAneeyam alai mOdhum) : and that river's forceful flow brings water and waves to the banks of பெரும் வெள்ள நீர் அலைகள் மோதும்,

மணத்த சோலை சூழ் காவை (maNaththa sOlai sUzh kAvai) : ThiruvAnaikkA, surrounded by fragrant flower gardens! நறுமணம் கமழும் சோலைகள் சூழும் திருவானைக்காவை மேவியவனே,

அனைத்து லோக மாள்வாரு மதித்த சாமியே () : anaiththulOkam ALvAru madhiththa sAmi yE: All the rulers of the world praise and worship You, Oh Lord! சகல லோகங்களை ஆள்பவர்களும் மதித்திடும் தெய்வமே,

தேவர் பெருமாளே.( dhEvar perumALE.) : You are the Lord of DEvAs, Oh Great One! எல்லாத் தேவர்களுக்கும் பெருமாளே.

No comments:

Post a comment

Popular Posts