Posts

வந்து வந்து வித்தூறி : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song vanthu vanthu ( வந்து வந்து வித்தூறி ) in English, click the underlined hyperlink. முன்னுரை "வந்து வந்து வித்தூறி" என்று தொடங்கும் தில்லைத் திருத்தலப் பாடல். வந்து வந்து பிறக்கிறான் மனிதன். வாழத் தெரியாமல் நொந்து நொந்து வாழ்கிறான். பின் வெந்து வெந்து மடிகிறான். அந்த ஜனன மரண சுழற்சியிலிருந்து தன்னை விடுவிக்கத் தயாளன் முருகன் வர வேண்டும் என அருணகிரியார் ஏங்கிப் பாடும் பாடல். மனித குலமே சம்சார சாகரத்தில் தத்தளித்துக் கொண்டிருப்பதாலே, அருணகிரியார் வேண்டுவது மனித குலம் உய்யத் தான். ஞானிகள், இவ்வாறு, இறைவனுக்கும், மனிதனுக்கும் பாலமாய் அமைந்து நம்மைப் பக்குவப் படுத்தப் பாடு படுகிறார்கள். முருகன் எப்படி தரிசனம் தர வேண்டும் என்பதை வண்ணக் காட்சியாய் நம் முன்னே விரிக்கும் பாடல். கந்தனை வந்தனை செய்து கொண்டு, பாட்டின் பொருள் பார்ப்போமா?

அமுதுததி விடம் : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song amutha uthathi ( அமுத உததி ) in English, click the underlined hyperlink. முன்னுரை அமுதுததி விடம் உமிழு ' என்று தொடங்கும் திருச்செந்தூர் பாடல். தர்மச் செயல்களை தள்ளிப் போட்டுக் கொண்டே போவது எதுவரை? அந்த தர்மதேவனே அழைத்துச் செல்ல வரும் வரையிலா? சிந்திக்கச் சொல்கிறார் அருணகிரியார். வாழ்வு முழுவதும் சுயநலக் கோட்டைகள் கட்டி சுகவாழ்வு வாழ்ந்து விட்டால் இறுதிக் கணங்கள் நெருங்க நெருங்கத் தினைஅளவு கூடத் தான தர்மமோ, மற்ற புண்ணியச் செயல்களோ செய்ய வில்லையே என்ற பதைப்பு வரலாம். அப்பொழுது எதையும் சொல்லவோ செய்யவோ முடியாதபடி காலம் கடந்து விடலாம். அதனால் இன்றே, இப்பொழுதே, நன்றே செய்யத் தொடங்கி விட வேண்டும் என்று குறிப்பால் உணர்த்துகிறார். இறுதிக் கணங்களை ஒளி, ஒலிக் காட்சி போல் விஸ்தாரமாய்ச் சொல்வது நம்மை நடுங்க வைப்பதற்காக இல்லை. அந்தக் கணங்களை நினைத்து, இந்தக் கணமே திருந்தத் தான். இதற்கு மாறாக ஒரு இன்பக் காட்சியாக, சிவனின் ஆனந்த தாண்டவத்தைக் காட்டுவது நம் நெஞ்சில் நம்பிக்கை சேர்க்கத் தான். சிவனை நினைத்தாலே கால...

துன்பங் கொண்டு : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song thunbam kondu( துன்பங் கொண்டு ) in English, click the underlined hyperlink. முன்னுரை "துன்பங் கொண்டு " என்று தொடங்கும் திருச்செந்தில் திருத்தலப் பாடல். மாயத் திரையின் பின்னணியில் நடக்கும் நாடகங்களை எல்லாம் "மயக்கம்" என்ற சொற் பிரயோகத்தால் தெளிவு படுத்தி விடுகிறார் அருணகிரிநாதர். வேரோடிய பெண்ணாசை போன்ற ஆசைகளை மனம் எளிதில் விடுவதில்லை தான். ஆனால், இது ஒரு மயக்க நிலை தெளிந்து விடும் பொழுது நெஞ்சத்தில் ஒரு அமைதி பூக்கும். மயக்கம் தெளிவிக்கத் தான் நீலக் கடலோரம் நின்று கஞ்சமலர்ப் பாதம் காட்டுகிறான் கருணையின் வடிவமான கந்தன்.

ஒருவரை ஒருவர் தேறி : J R. விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song oruvarai oruvar ( ஒருவரை ஒருவர் ) in English, click the underlined hyperlink. முன்னுரை "ஒருவரை ஒருவர் தேறி" என்று தொடங்கும் பழனி மலைத் திருப்பாடல். தனிமனிதத் துன்பங்கள் ஒருபுறம் இருக்க, நாகரீகம் அற்று நடக்கும் மனித சமூகம் அல்லவா நல்லவர்களைத் துன்புறுத்துகிறது என்று அங்கலாய்க்கிறர் அருணகிரியார். சமூக இடிபாடுகளைச் சுட்டிக் காட்டுகிறார். மதம் என்ற பெயரில் மதம் கொள்வோரைச் சாடுகிறார். பாவச் சுழலிலிருந்தும், இறுதியில் பிறவிச் சுழலிலிருந்தும் விடுபடுவதற்கு ஞான ஜோதியாம் முருகனை வேண்டுகிறார்.

குரம்பை மலஜலம்: JR விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song kurambai malasalam ( குரம்பை மலஜலம் ) in English, click the underlined hyperlink. முன்னுரை "குரம்பை மலஜலம் வழுவழு நிணமொடு" என்று தொடங்கும் பழனி திருத்தலப் பாடல். அருணகிரியாரின் சரவண தரிசனம் பற்றிச் சொல்லும் அற்புதமான பாடல். அமுத முகமும், குமுத விழியும் கொண்டு, கருணா மூர்த்தியவன் அருணகிரியாருக்குக் காட்சி தருகின்றான். அந்த உன்னத தரிசனத்திற்கு முன், ஆன்மாவை மறந்த உடல் என்ற வெறும் குடிசை பற்றிச் சொல்கிறார்.குருதி, நிணம், கழிவுகள் நிரம்பிய ஒரு குடியிருப்பு அது; அங்கே புகுந்து அட்டகாசம் புரியும் ஐந்து கசடர்களாம் பொறிகள், என துன்பத்தின் நிலைக்களனைப் பற்றிச் சொல்லி எச்சரிக்கை விடுகிறார். எத்தனையோ திருப்புகழ் பாடல்களில் முதல் பகுதி எச்சரிக்கையாகவும், பின்பகுதி நம்பிக்கை ஒளிவீசி வரும் கந்தன் கருணையாகவும் இருக்கக் காண்கிறோம். எச்சரிக்கை நிலைகுலையச் செய்கிறது; நம்பிக்கை தூக்கி நிறுத்துகிறது.

இரவியும் மதியும் : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song iravium mathiyum ( இரவியும் மதியும் ) in English, click the underlined hyperlink. முன்னுரை "இரவியும் மதியும்" என்று தொடங்கும் திருவருணைத் திருத்தலப் பாடல். ஜாஜ்வல்யமாய் எழுகின்ற சூரியனும், அமுதம் பொழியும் சந்திரனும் விழி முன்னே பிரத்யட்சம் அல்லவா! இயற்கை எழில் எல்லாம் நிதர்சனம் அல்லவா!இவற்றோடு இயைந்த வாழ்க்கையும் நிரந்தரம் அல்லவா! அப்படியானால் அந்த வாழ்க்கை என்பதன் அர்த்தமாய் விளங்கும் குலமும் குடும்பமும் பொய்யெனத் தள்ளிவிட முடியுமோ, என மனம் இன்பங்களை எண்ணி, எண்ணிப் பார்த்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க, இன்னொரு புறம் கணத்துக்குக் கணம் நம் கைவிட்டு நழுவும் காலம் சொல்லும் கதை வேறாக இருக்கிறது. இந்தக் காலத்தின் முடிவு, காலனின் வருகை என தீர்ந்து தெளிந்து விட்டால், மிச்சம் இருப்பது அச்சம் அல்லவா ! அதற்குள் எமைக் காக்க நீ வந்து விட்டால், அந்த ஞானம் தருவது எல்லையற்ற ஆனந்தம் அல்லவா ஆறுமுகா, என அருணகிரியார் உருகும் பாடல். மயில்வாகனின் மகிமைகள் சொல்லாமல் திருப்புகழ் பாடல் நிறைவு பெறுவதில்லை. இந்தப் பாடலும் விதிவிலக்கில...

அபகார நிந்தை : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song abakaara ninthai ( அபகார நிந்தை ) in English, click the underlined hyperlink. அபகார நிந்தைப் பட்டுழலாதே சுவரில் எறிந்த பந்து போல் செய்த பாவம் தண்டனையாக, பழியாகத் திரும்பி வந்து தாக்கும் என்பதை இயற்கை நியதியாக வகுத்து வைத்தவனே! மனதாலும், வாக்காலும், செயலாலும் மற்றவரை வருத்தும் அபகாரம் நான் செய்துவிடாமல், பாவத்தின் நிழல் என்னைத் தீண்டி விடாமல், பழிச் சொல் ஏதும் அண்டி விடாமல் காத்து நிற்பாய் கந்தா. அறியாத வஞ்சரைக் குறியாதே விளக்கம் : பாவம் செய்யத் தூண்டுகின்ற கீழான மனிதருடன் நான் சேர்ந்து விடாமல், தற்காத்துக் கொள்ளும் பக்குவம் தருவாய். அவர்கள் அறியாதவர்கள் என்பதை உள்வாங்கிக் கொண்டு, அவர்கள் பாதையிலிருந்து விலகும் பண்பை நான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.