நாத விந்து
Learn The Song
Raga Senjurutti(Janyam of 28th mela Hari Kambhoji) By Charulata Mani
Arohanam: D2 S R2 G3 M1 P D2 N2 Avarohanam: N2 D2 P M1 G3 R2 S N2 D2 P D2 SParaphrase
நாத விந்து கலாதீ நமோநம (nAdha vindhu kalAdhee namOnama) : You are the basis of the principles of Nadha (Lingam) and the Receptacle (Peetam) (or Shivasakthi), and KalA. I bow to Thee; I bow to Thee;
The subtle body of the Parabrahman is the mystic sound Pranava, which is sound and light (natham and Bindu). லிங்கம், பீடம் (சிவ சக்தி) ஆகிய தத்துவங்களுக்கு மூலப்பொருளே, போற்றி, போற்றி;
கலை என்பது நம்முள் இருக்கும் மனவெளியில் உதிக்கும் நுணுக்க உணர்வு, எண்ணங்களைக் கொண்டது. கலை என்னும் வித்தியாதத்துவத்திலிருந்து முக்குணம் கூடிய பிரகிருதி மாயை தோன்றி அதன் மாறுபாடுகளால் உயிர்களுக்கு தனு கரண புவன போகங்கள் படைக்கப்படும்.
நாதம் சிவ ஸ்வரூபம், பிந்து சக்தி ஸ்வரூபம், சப்தத்துக்கு மூலம் நாதம், ரூபங்களுக்கு மூலம் பிந்து – அதாவது ஒலி, ஒளி என்பதில் ஒலிக்கு மூலம் நாதம், ஒளிக்கு மூலம் பிந்து. சப்தம் என்பது அதிர்வு. சலனமற்றதும் நிர்குணமானதுமான பிரம்மம் மாயாசக்தியுடன் கூடி இந்த பிரபஞ்சமாக உரு எடுக்கிறது. நாம் காணும் அத்தனையும் பரப்பிரம்ம வஸ்துவில் தோன்றின சலனங்கள் (Vibration) தான்.
பிரணவம் தொகையாய் (சமஷ்டியாய், சமஷ்டி என்றால் அனைத்தும் ஒன்றான நிலை) நிற்குமிடத்து, `ஓம்` என நிற்கும். இதனைப் பகுத்து நோக்கும் பொழுது, `அகாரம், உகாரம், மகாரம், விந்து, நாதம்` என ஐந்தாகி நிற்றல் பெரும் பான்மை. இவை வியஷ்டி (வியஷ்டி என்றால் அனைத்துமான ஒன்று தன்னை தனியொன்றாகக் காட்டும் நிலை) பிரணவமாம். இவ் ஐந்தும், `ஐந்து கலை` எனப்படும். கலை - கூறு. `ஓவ்வொரு கூறும் ஓவ்வொரு பிரணவமே` என்னும் கருத்தால், இவற்றை, `பஞ்சப்பிரணவம்` என்பர்.
நாத விந்து கலாதி என்பது இறைவன் பஞ்ச மூர்த்தியாய்ப் பஞ்ச கிருத்தியத் தலைவராய்த் திகழ்வதைக் குறிக்கின்றது. (சிருட்டி படைத்தல்), ஸ்திதி (நிலை பெறுத்தல்), சங்காரம் (அழித்தல்), திரோபவம் (மறைத்தல்), அனுக்கிரகம் (அருளல்) என்ற கடவுளின் ஐந்தொழில்).
Nadam does not mean the sound perceived by the ear, but the subtle unmanifested sound. The dynamic power of creation through the conjoining of Siva and Sakthi results in the manifestation of the form Bindu, or literally, ‘a point.’ It is compactness of energy ready to produce. Thus, both Nadam and Bindu are only aspects of Sakti, and Sakti is an aspect of Siva, the source of all energy. Thus Siva, Sakti, Nadam and Bindu can be seen as four inseparable entities in the chain of causation conjointly performing the act of creation.
வேத மந்த்ர சொரூபா நமோநம (vEdha manthra sorUpA namO nama) : You appear as the manifestation of VEdAs (Scriptures) and ManthrAs (all chantings), வேதங்கள், மந்திரங்கள், இவற்றின் உருவமாக விளங்குபவனே, போற்றி, போற்றி
ஞான பண்டித ஸாமீ நமோநம (njyAna paNditha sAmi namO nama) : You are the most learned and knowledgeable, I bow to You; I bow to You; பேரறிவுக்குத் தலைவனான தெய்வமே, போற்றி, போற்றி,
வெகு கோடி நாம சம்பு குமாரா நமோநம (vegu kOdi nAma sambu kumArA namO nama ) : You are the son of Sambhu, with millions of names, I bow to You; I bow to You! பல கோடிக் கணக்கான திருப்பெயர்களைக் கொண்ட சிவனின் புதல்வனே, போற்றி, போற்றி
போக அந்தரி பாலா நமோநம (bOga anthari bAlA namO nama ) : You are the son of UmA, provider of happiness to all beings, I bow to You! I bow to You! அனைத்து உயிர்களுக்கெல்லாம்) இன்பங்களை அளிக்கும் பார்வதியின் குமாரனே, போற்றி, போற்றி
நாக பந்த மயூரா நமோநம (nAga bandha mayUrA namOnama namO nama ) : You mount the peacock which tames and binds the snake to its feet, தன் காலினால் பாம்பை அடக்கிக் கட்டியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே, போற்றி, போற்றி,
பரசூரர் சேத தண்ட விநோதா நமோநம (parasUrar sEdha dhaNda vinOdhA) : You made a sport of punishing all the hostile demons (asuras); எதிரிகளான சூரர்களை தண்டித்து அழிக்கும் திருவிளையாடல் புரிந்தவனே, போற்றி, போற்றி,
கீத கிண்கிணி பாதா நமோநம (geetha kiNkiNi pAdhA) : Your holy feet wear the lilting anklets; இசை ஒலி எழுப்பும் சதங்கைகளை உடைய திருப்பாதங்களைக் கொண்டவனே, போற்றி, போற்றி
தீர சம்ப்ரம வீரா நமோநம (dheera sambrama veerA namOnama .) : : You are the valorous and great warrior, I bow to You, I bow to You! மிகவும் பராக்ரமசாலியான போர்வீரனே, போற்றி, போற்றி,
கிரிராஜ (giri rAja) : You are the king of all mountains; மலைகளுக்கெல்லாம் அரசனே,
தீப மங்கள ஜோதீ நமோநம (dheepa mangaLa jOthee namOnama .) : You are the sacred light emanating from all lamps, I bow to Thee, I bow to Thee!
தூய அம்பல லீலா நமோநம (thUya ambala leelA) : You play in the pure cosmic sky, பரிசுத்தமான பரவெளியில் லீலைகள் புரிபவனே, போற்றி, போற்றி,
தேவ குஞ்சரி பாகா நமோநம (dhEva kunjari bAgA namOnama ) : You are the consort of DEvayAnai; தேவயானையை மணாட்டியாகப் பக்கத்தில் கொண்டவனே, போற்றி, போற்றி,
அருள் தாராய் (aruL thArAy.) : I seek Your blessings. உனது திருவருளைக் கொடுத்து அருள்வாயாக.
ஈதலும் பல கோலால பூஜையும் (eedhalum pala kOlAla pUjaiyum) : Charity, many special modes of worship, தானம், பல சிறப்பான பூஜைகள் செய்தல்,
ஓதலும் குண ஆசார நீதியும் (Odhalun guNa AchAra neethiyum) : learning, virtues, character, justice, நல்ல நூல்களைப் படித்தல், சற்குணம், ஒழுக்கம், நியாயம்,
ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத (eeramum guru seer pAdha sEvaiyum maRavAdha) : compassion and service to the teacher's (Guru's) feet — these virtues are always remembered, கருணை, குருவின் திருப்பாதங்களைச் சேவித்தல் ஆகியவற்றை மறவாமல் கடைப்பிடிக்கும் (சோழமண்டலத்தில்),
ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை (Ezhthalam pugazh kAvEriyAl viLai sOzha maNdala meedhE ) : by everyone at Sozhamandalam, which is praised by people in the seven worlds, and which is made fertile by the great river KAveri; ஏழு உலகங்களில் உள்ளோரும் மெச்சுகின்ற காவேரி நதியால் செழித்து வளமுறும்
சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடாளும் நாயக (rAja gembira nAdALu nAyaka) : in that kingdom is a region called Rajagembiram, and You are its Lord! சோழ மண்டலத்தில், மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் ராஜகெம்பீரம் என்னும் நாட்டை ஆளுகின்ற அரசனே,
வயலூரா (vayalUrA) : வயலூருக்குத் தலைவா,
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை சேர்தல் கொண்டவரோடே முனாளினில் (Adharam payil ArUrar thOzhamai sErdhal koNd avarOdE munALinil ) : Once the friendship of ArUrar (Sundarar) was sought(by Cheraman Peruman) who wanted to travel with his friend; தன்மீது அன்புவைத்த திருவாரூராரின் (சுந்தரமூர்த்திப் பெருமானது) நட்பை நாடியவராய், அவருடன் முன்பொரு நாள், ஆதரம் பயில் = அன்பு பொருந்திய;
ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையில் ஏகி (Adal vempari meedhERi mA kayi laiyil Egi ) : mounted on a dancing horse all the way to the heavenly abode (Maha Kailas); ஆடலில் சிறந்த, விரும்பத்தக்க குதிரை மீது ஏறி கயிலை மாமலைக்குப் போய் (அங்கே)
ஆதி அந்த உலா ஆசு பாடிய (Adhi antha ulA Asu pAdiya) : (There, the Chera King) sang the beautiful (antha=beautiful) Adhi UlA extempore; ஆதி உலா எனப்படும் அழகிய (கயிலாய ஞானக்) கலிவெண்பாவை பாடலாகப் பாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில் (sErar kongu vaikAvUr nanAdadhil) : That Cheraman Peruman ruled Kongu NAdu, in which is the part, VaikavUr. சேரர் பெருமானாம் சேரமான் பெருமான் நாயனாருக்கு உரித்தான கொங்கு மண்டலத்து வைகாவூர் என்னும் சிறந்த நாட்டுப் பகுதியில் இருக்கும்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே. (Avinan kudi vAzhvAna dhEvargaL perumALE) : In VaikavUr is ThiruvAvinankudi (Pazhani's foothill), You are the Life of that place, and You are the Great one for all the DEvAs! திருஆவினன்குடி (பழநிமலையின் அடிவாரம்) என்னும் தலத்தில் வாழ்வு கொண்டிருக்கும், தேவர்களின் பெருமாளே.
சுருக்க உரை
திரு விளக்குகள் காட்டும் மங்களகரமான ஜோதியே! உன்னை வணங்குகின்றேன்; பரிசுத்தமான பரவெளியில் விளையாடுபவனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன், தேவயானையைப் பக்கத்திற் கொண்டவனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; (உனது) திருவருளைத் தந்தருளுக. (இரப்போர்க்கு ஈதல் (கொடுத்தல்), பலவித பூசைகள், (நூல்களை)ஒதல், (நல்ல) குணம், ஆசாரம், நீதி, கருணை, அழகிய பாதசேவை ஆகிய இவைகளை மறவாத (சோழ மண்டலத்தில்) உள்ளதும், ஏழு பூமியில் உள்ளோரும் புகழ்கின்ற காவேரி நதியால் செழிப்புற்று வளம் பெருகும் சோழமண்ட்லத்தில் உள்ளதுமான மனதுக்கு இன்பகரமான ராச கெம்பீரம் என்னும் நாட்டுப் பகுதியை ஆண்டருளும் நாயகனே! வயலூர் (அண்ணலே)! தம்மிடத்து மிகவும் அன்பு பொருந்திய சுந்தரமூர்த்தி சுவாமிகளது நட்பைப் பெற்று, அப்பெருந்தகையார் திருக்கயிலாயத்திற்குப் புறப்பட்டபோது அவருடனேயே, முன்னாளில் ஆடுவதும் போருக்குரிய உக்கிரமுடையதுமாகிய குதிரையின் மீது ஏறி, பெருமை பொருந்திய திருக்கைலாய மலைக்குச் சென்று, திருக்கைலாய ஆதி உலா என்னும் பிரபந்தத்தை அங்கு ஆசுகவியாகப் பாடியருளிய சேரமான் பெருமான் நாயனார் அரசு செய்யும் பேற்றைப் பெற்ற கொங்குதேயத்தில், நல்ல காவூர் நாட்டிலுள்ள திருவாவினன்குடி என்னும் திவ்விய க்ஷேத்திரத்தில் எழுந்தருளியுள்ளவரே! (அருள் தாராய்.)Natham and Vinthu Explained Further
From Bhagavadgitausa.com
Nada and Bindu are two saktis (power). Naada (Nada rep. as semicircle) is sound and Bindu is dot, or point. Strictly speaking, Bindu is a Circle with Void inside--O. The confining Circle is Sakti, while the Void is Siva. Think of Bindu as Singularity with no dimension, from which everything proceeds. Nada and Bindu are the progenitors of Tattvas, the building blocks of the universe. Supreme Consciousness divides itself into subject and object in time and space.--Woodroffe. Sakti divides again into Nada, Bindu, and Bija. Bindu is Siva and Bija is Sakti. Nada is the relationship between the two. Nada is action and Bindu is static; Nada is white and Bindu is red. Skanda Purana says that Siva-Sadasiva is of the nature of Nada (divine sound) sitting in AkArapIthikA (Pedestal of the letter A) and Five-letter Mantra Namasivaya. Parasiva and ParAsakti, ontologically superior to Nada and Bindu, are Soundless and motionless (NiSabda) and NiSpanda). Sabda = sound. Spanda = contraction and expansion, vibration, motion. Nada transforms into Bindu which is Isvara Tattva, the origin of the worlds. Bindu's abode is Satyaloka, which abides in the pericarp of the thousand-petalled Lotus, Sahasrara Chakra in the highest cerebral Center, according to Woodroffe. The Bindu should be worshipped (like a grain of gram, which are the two cotyledons and represent) the inseparable Siva and Sakti.
From Traditional Yoga and Meditation of the Himalayan Masters
Bindu means Point or Dot, is sometimes likened to a Pearl, and is often related to the principle of a Seed. This is not just a poetic choice of words or philosophy. There literally is a stage of Yoga Meditation in which all experiences collapse, so to speak, into a point from which all experiences arose in the first place. The Bindu is near the end of the subtlest aspect of mind itself, after which one travels beyond or transcends the mind and its contents. It is near the end of time, space, and causation, and is the doorway to the Absolute.
Comments
Post a Comment