சேவல் விருத்தம் 1. உலகிலநுதின 

உலகிலநு தினமும்வரும் அடியவர்கள் இடரகல
உரியபர கதிதெ ரியவே

ulagilanu thinamumvarum adiyavarkaL idarakala
uriyapara kathithe riyavE

உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்
இருள்கள்மிடி கெட அருளியே

uragamaNi enavuzhalum iruvinaiyum muRaipadavum
iruLkaLmidi keda aruLiyE

கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு
கடினமுற வரில் அவைகளைக்

kalakamidum alakaikuRaL migupaNikaL valimaiyodu
kadinamuRa varil avaikaLaik

கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்துசிற
கைக்கொட்டி நின்றா டுமாம்

kaNNaip pidungiyudal thannaip piLanthusiRa
kaikkotti ninRaa dumaam

மலைகள்நெறு நெறுநெறென அலைகள்சுவ றிடஅசுரர்
மடியஅயில் கடவு முருகன்

malaigaLneRu neRuneRena alaikaLsuva Ridaasurar
madiyaayil kadavu murugan

மகுடவட கிரியலைய மலையுமுலை வநிதைகுற
வரிசையின மகளவ ளுடன்

makutavada giriyalaiya malaiyumulai vanithaikuRa
varisaiyina magaLava Ludan

சிலைகுலிசன் மகள்மருவு புயன்இலகு சரவணச்
சிறுவன்அயன் வெருவ விரகிற்

silaikulisan makaLmaruvu puyanilagu saravaNas
siRuvanayan veruva virakiR

சிரமிசையில் வெகுசினமொ டடியுதவும் அறுமுகவன்
சேவற் றிருத்துவசமே.

siramisaiyil vegusinamo dadiyuthavum aRumukavan
sEvaR RiruththuvasamE

Paraphrase

When Murugan's devotees are battered by the twin forces of karma, the rooster fights against these forces; removes the obstacles in the path of salvation that they encounter in this world, destroys the three malas, and stands as a ferocious guard against all kinds of ghosts and phantoms.

உலகில் அடியவர் அனுதினமும் வரும் இடர் அகல (ulagil adiyavargaL anuthinamum varum idar agala) : In this world, in order that the obstacles, which cause hindrances in the path of the devotees, are cleared;

உரிய பரகதி தெரியவே (uriya paragathi theriyavE) : and they are able to achieve their objective of attaining salvation or mukti,

உரகம் மணி என உழலும் இருவினையும் முறை படவும் (uragamaNi enavuzhalum iruvinaiyum muRaipadavum iruLkaLmidi keda aruLiyE) : the rooster destroys the twin karmas of good and bad deeds which the devotees, like the cobras bearing the precious stones on their hoods, carry, உரகம் (uragam): serpent; The poet wants the fruits of good deeds also to be destroyed, as they carry the seeds for future births.

இருள்கள் மிடி கெட அருளியே (iruLkaLmidi keda aruLiyE) : and also the darkness of ignorance as well as the poverty of knowledge (gnana) and wealth. இருள் (iruL) – darkness, ignorance ; மிடி ( midi) : poverty;

கலகமிடும் அலகை குறள் மிகு பணிகள் வலிமையோடு கடினமுற வரில் (kalakamidum alagai kuRaL migu paNigaL valimaiyodu kadinamuRa varil ) : When phantoms, devils, and venomous serpents attack strongly,

அவைகளை கண்ணைப் பிடுங்கி உடல் தன்னைப் பிளந்து சிறகைக் கொட்டி நின்று ஆடும் (avaikaLai kaNNaip pidungi udal thannaip piLanthu siRagaik kotti ninRu aadumaam ) : the Rooster gorges out their eyes, hacks their bodies, then thrashes its wings gleefully and dances;

Who is this Rooster? It sits on the banner of Murugan, who blesses us with His consorts. His spear or 'vel' is described in the following lines.

மலைகள் நெறு நெறு நெறு என அலைகள் சுவறிட அசுரர் மடிய அயில் கடவு முருகன் (malaigaL neRu neRu neRu ena alaikaL suvaRida asurar madiya ayil kadavu murugan) : Murugan wields the ‘vel’ and with it, crushes the mountains and dries up the sea;

மகுட வட கிரி அலைய மலையும் முலை வனிதை குறவர் இசை இனமகள் அவளுடன் சிலை குலிசன் மகள் மருவு புயன் (makuta vada giri alaiya malaiyum mulai vanithai kuRavar isai inamakgaL avaLudan) : His strong shoulders crush against the bosoms of the girl who belongs to the hunter lineage, in a fight that pales before Murugan’s fight with the mountain summits of Meru. Murugan’s strong shoulders also take on Deivayanai, the daughter of Indra who wields bow and Vajrayudha. சிலை (silai) : bow; குலிசம் (kulisam) : vajrayudha; இசை குறவர் இனமகள் (isai kuRavar ina magaL): renowned daughter belonging to the hunter tribe;

இலகு சரவணச் சிறுவன் (ilagu saravaNa siRuvan) : He appeared in the Saravana lake;

அயன் வெருவ விரகில் சிரமிசையில் வெகு சினமொடு அடி உதவும் அறுமுகன் சேவல் திருத்துவசமே (ayan veruva viragil siramisaiyil vegu sinamodu adi uthavum aRumugavan sEval tiruththuvasamE) : He hit Brahma’s head angrily with His knuckles. It is the Rooster on His banner (that performs such incomparable feats as described in the first half of the poem.)

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே