Posts

Showing posts from May, 2014

91. வாதம் பித்தம்

ராகம் : ஹம்சாநந்தி தாளம் : ஆதி (2 களை) வாதம் பித்தமி டாவயி றீளைகள் சீதம் பற்சனி சூலைம கோதர மாசங் கட்பெரு மூலவி யாதிகள் குளிர்காசம் மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி யோடுந் தத்துவ காரர்தொ ணூறறு வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள் வெகுமோகர் சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொ டேதுஞ் சற்றுண ராமலெ மாயைசெய் சோரம் பொய்க்குடி லேசுக மாமென இதின்மேவித் தூசின் பொற்சர மோடுகு லாயுல கேழும் பிற்பட வோடிடு மூடனை தூவஞ் சுத்தடி யாரடி சேரநி னருள்தாராய்

90. வரதா மணி

ராகம் : ராமப்பிரியா அங்க தாளம் (2+2+2½) வரதா மணிநீ யெனவோரில் வருகா தெதுதா னதில்வாரா திரதா திகளால் நவலோக மிடவே கரியா மிதிலேது சரதா மறையோ தயன்மாலும் சகலா கமநூ லறியாத பரதே வதையாள் தருசேயே பழனா புரிவாழ் பெருமாளே.

89. வசனமிக வேற்றி

ராகம் : ரஞ்சனி தாளம் : அங்க தாளம் (1½ + 1 + 1½ + 3) வசனமிக வேற்றி மறவாதே மனதுதுய ராற்றி லுழலாதே இசைபயில்ஷ டாக்ஷ ரமதாலே இகபரசெள பாக்ய மருள்வாயே பசுபதிசி வாக்ய முணர்வோனே பழநிமலை வீற்ற ருளும்வேலா அசுரர்கிளை வாட்டி மிகவாழ அமரர் சிறை மீட்ட பெருமாளே

88. மூல மந்திரம்

ராகம் : சுப பந்துவராளி மிஸ்ரசாபு (3½) 1½ + 2 மூல மந்திர மோத லிங்கிலை யீவ திங்கிலை நேய மிங்கிலை மோன மிங்கிலை ஞான மிங்கிலை மடவார்கள் மோக முண்டதி தாக முண்டப சார முண்டப ராத முண்டிடு மூக என்றொரு பேரு முண்டருள் பயிலாத கோல முங்குண வீன துன்பர்கள் வார்மை யும்பல வாகி வெந்தெழு கோர கும்பியி லேவி ழுந்திட நினைவாகிக் கூடு கொண்டுழல் வேனை யன்பொடு ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு கூர்மை தந்தினி யாள வந்தருள் புரிவாயே

87. மூலங்கிளர்

ராகம் : பெஹாக் திச்ர த்ரிபுடை மூலங்கிள ரோருரு வாய்நடு நாலங்குல மேனடு வேரிடை மூள்பிங்கலை நாடியொ டாடிய முதல்வேர்கள் மூணும்பிர காசம தாயொரு சூலம்பெற வோடிய வாயுவை மூலந்திகழ் தூண்வழி யேவள விடவோடிப் பாலங்கிள ராறுசி காரமொ டாருஞ்சுட ராடுப ராபர பாதம்பெற ஞானச தாசிவ மதின்மேவிப் பாடுந்தொனி நாதமு நூபுர மாடுங்கழ லோசையி லேபரி வாகும்படி யேயடி யேனையும் அருள்வாயே சூலங்கலை மான்மழு வோர்துடி தேவன்தலை யோடும ராவிரி தோடுங்குழை சேர்பர னார்தரு முருகோனே சூரன்கர மார்சிலை வாளணி தோளுந்தலை தூள்பட வேஅவர் சூளுங்கெட வேல்விடு சேவக மயில்வீரா காலின்கழ லோசையு நூபுர வார்வெண்டைய வோசையு மேயுக காலங்களி னோசைய தாநட மிடுவோனே கானங்கலை மான்மக ளார்தமை நாணங்கெட வேயணை வேள்பிர காசம்பழ னாபுரி மேவிய பெருமாளே. moolam kiLar Or uruvaay nadu naal angulamE nadu vEridai mooL pingalai naadiyodaadiya mudhal vErgaL mooNum pirakaasamadhaay oru soolam peRa Odiya vaayuvai moolan thigazh thooN vazhiyE aLavida Odi paalang kiLar aaRu sikaaramod aarunj sudaraadu paraapara paadhampeRa nyaana sadhaasivam a...

86. மனக்கவலை

ராகம் : கேதாரகௌளை தாளம் : அங்கதாளம் 5½ (2½ + 1½ + 1½) மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து வகைக்குமநு நூல்வி தங்கள் தவறாதே வகைப்படிம னோர தங்கள் தொகைப்படியி னாலி லங்கி மயக்கமற வேத முங்கொள் பொருள்நாடி வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்து மிகுத்தபொரு ளாக மங்கள் முறையாலே வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து மிகுக்குமுனை யேவ ணங்க வரவேணும்

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே