Posts

Showing posts from June, 2016

322. கும்பகோணம்

ராகம் : யமுனாகல்யாணி அங்கதாளம் 1½ + 2 + 2½ + 2 (8) கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம் உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு கொன்றை வேணியர் மாயூர மம்பெறு சிவகாசி கொந்து லாவிய ராமே சுரந்தனி வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர் கும்பு கூடிய வேளூர் பரங்கிரி தனில்வாழ்வே செம்பு கேசுர மாடானை யின்புறு செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி தென்றன் மாகிரி நாடாள வந்தவ செகநாதஞ் செஞ்சொ லேரக மாவா வினன்குடி குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல் செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் வருதேவே

320. மாலினால் எடுத்த

ராகம் : மனோலயம் ஆதி 2 களைை (24) திஸ்ரநடை மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி மாறி யாடெ டுத்தசி ந்தை யநியாய மாயை யாலெ டுத்து மங்கி னேனை யாஎ னக்கி ரங்கி வாரை யாயி னிப்பி றந்து இறவாமல் வேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎ ரித்து உன்றன் வீடு தாப ரித்த அன்பர் கணமூடே மேவி யானு னைப்பொல் சிந்தை யாக வேக ளித்து கந்த வேளெ யாமெ னப்ப ரிந்து அருள்வாயே

321. கழைமுத்து மாலை

ராகம் : மத்யமாவதி தாளம் : ஆதி கழைமுத்து மாலை புயல்முத்து மாலை கரிமுத்து மாலை மலைமேவுங் கடிமுத்து மாலை வளைமுத்து மாலை கடல்முத்து மாலை யரவீனும் அழல்முத்து மாலை யிவைமுற்று மார்பி னடைவொத்து லாவ அடியேன்முன் அடர்பச்சை மாவி லருளிற்பெ ணோடு மடிமைக்கு ழாமொ டருள்வாயே

319. எத்தனை கோடி

ராகம் : திலங் தாளம் : திஸ்ர ரூபகம் 2 + 1½ + 1½ (5) எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி யெத்தனை கோடி போன தளவேதோ இப்படி மோக போக மிப்படி யாகி யாகி யிப்படி யாவ தேது இனிமேலோ சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை சிக்கினி லாயு மாயு மடியேனைச் சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது சித்திர ஞான பாத மருள்வாயே

318. உரத்துறை

ராகம்: வாசஸ்பதி சதுஸ்ர ஜம்பை (7) உரத்துறை போதத் தனியான உனைச்சிறி தோதத் தெரியாது மரத்துறை போலுற் றடியேனும் மலத்திருள் மூடிக் கெடலாமோ பரத்துறை சீலத் தவர்வாழ்வே பணித்தடி வாழ்வுற் றருள்வோனே வரத்துறை நீதர்க் கொருசேயே வயித்திய நாதப் பெருமாளே.

317. குரைகடல்

ராகம்: பீம்ப்ளாஸ் தாளம்: அங்கதாளம் 2 + 2 + 2 + 1½ + 2 + 2 + 2 + 2 (15½ குரைகட லுலகினி லுயிர்கொடு போந்து கூத்தாடு கின்ற குடில்பேணிக் குகையிட மருவிய கருவிழி மாந்தர் கோட்டாலை யின்றி யவிரோதம் வரஇரு வினையற உணர்வொடு தூங்கு வார்க்கே விளங்கு மநுபூதி வடிவினை யுனதழ கியதிரு வார்ந்த வாக்கால்மொ ழிந்த ருளவேணும்

316. சூழும் வினை

ராகம் : மோகனம் தாளம் : சங்கீர்ண ரூபகம் (11) சூழும்வி னைக்கட் டுன்பநெ டும்பிணி கழிகாமஞ் சோரமி தற்குச் சிந்தைநி னைந்துறு துணையாதே ஏழையெ னித்துக் கங்களு டன்தின முழல்வேனோ ஏதம கற்றிச் செம்பத சிந்தனை தருவாயே

315. வதன சரோருக

ராகம் : பிருந்தாவன சாரங்கா அங்கதாளம் (23½) 4 + 4 + 2 + 1½ + 1½ + 7 + 3½ வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று வாராய்பதி காதங் காதரை யொன்றுமூரும் வயலு மொரேவிடை யெனவொரு காவிடை வல்லப மற்றழிந்து மாலாய்மட லேறுங் காமுக எம்பிரானே இதவிய காணிவை ததையென வேடுவ னெய்திடு மெச்சில் தின்று லீலாசல மாடுந் தூயவன் மைந்தநாளும் இளையவ மூதுரை மலைகிழ வோனென வெள்ள மெனக் கலந்து நூறாயிர பேதஞ் சாதமொ ழிந்தவா தான்

314. சிகரிகளிடிய

ராகம் : மாயாமாளவகௌளை அங்க தாளம் (15) 2 + 1½ + 2 + 1½ + 2 + 1½ + 1½ + 3 சிகரிக ளிடிய நடநவில் கலவி செவ்வி மலர்க்க டம்பு சிறுவாள்வேல் திருமுக சமுக சததள முளரி திவ்ய கரத்தி ணங்கு பொருசேவல் அகிலடி பறிய எறிதிரை யருவி ஐவன வெற்பில் வஞ்சி கணவாஎன் றகிலமு முணர மொழிதரு மொழியி னல்லது பொற்பதங்கள் பெறலாமோ

313. இல்லையென நாணி

ராகம் : குமுதக்ரியா தாளம் : ஆதி இல்லையென நாணி யுள்ளதின் மறாம லெள்ளினள வேனும் பகிராரை எவ்வமென நாடி யுய்வகையி லேனை யெவ்வகையு நாமங் கவியாகச் சொல்லவறி யேனை யெல்லைதெரி யாத தொல்லைமுத லேதென் றுணரேனைத் தொய்யுமுடல் பேணு பொய்யனைவி டாது துய்யகழ லாளுந் திறமேதோ

312. அடலரி மகவு

ராகம் : சாமா அங்கதாளம் 2 + 1½ + 2 + 1½ + 2 + 1½ + 1½ +3 அடலரி மகவு விதிவழி யொழுகு மைவ ருமொய்க்கு ரம்பை யுடனாளும் அலைகட லுலகி லலம்வரு கலக வைவர் தமக்கு டைந்து தடுமாறி இடர்படு மடிமை யுளமுரை யுடலொ டெல்லை விடப்ர பஞ்ச மயல்தீர எனதற நினது கழல்பெற மவுன வெல்லை குறிப்ப தொன்று புகல்வாயே

311. பசையற்ற உடல்

ராகம் : ரேவதி ஆதி கண்ட நடை பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி பறியக்கை சொறியப்பல் வெளியாகிப் படலைக்கு விழிகெட்ட குருடுற்று மிகநெக்க பழமுற்று நரைகொக்கி னிறமாகி விசைபெற்று வருபித்தம் வளியைக்க ணிலைகெட்டு மெலிவுற்று விரல்பற்று தடியோடே வெளிநிற்கும் விதமுற்ற இடர்பெற்ற ஜனனத்தை விடுவித்து னருள்வைப்ப தொருநாளே

310. திருமொழி

ராகம் : ஹரிகாம்போதி தாளம் : ஆதி 2 களை திருமொழி யுரைபெற அரனுன துழிபணி செயமுன மருளிய குளவோனே திறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழு தெறிபட மறுகிட விடுவோனே ஒருவரு முனதருள் பரிவில ரவர்களி னுறுபட ருறுமெனை யருள்வாயோ உலகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில் ஒருநொடி தனில்வரு மயில்வீரா

309. மருவும் அஞ்சு பூதம்

ராகம் : மோகனம் திச்ர த்ருவம் திஸ்ர நடை (16½) மருவு மஞ்சு பூத முரிமை வந்தி டாது மலமி தென்று போட அறியாது மயல்கொ ளிந்த வாழ்வு அமையு மெந்த நாளும் வகையில் வந்தி ராத அடியேனும் உருகி யன்பி னோடு உனைநி னைந்து நாளும் உலக மென்று பேச அறியாத உருவ மொன்றி லாத பருவம் வந்து சேர உபய துங்க பாத மருள்வாயே

308. நிகரில் பஞ்ச பூதமும்

ராகம் : மனோலயம் அங்கதாளம் (1½ + 1½ + 2) நிகரில் பஞ்ச பூதமு நினையு நெஞ்சு மாவியு நெகிழ வந்து நேர்படு மவிரோதம் நிகழ்த ரும்ப்ர பாகர நிரவ யம்ப ராபர நிருப அங்கு மாரவெ ளெனவேதம் சகர சங்க சாகர மெனமு ழங்கு வாதிகள் சமய பஞ்ச பாதக ரறியாத தனிமை கண்ட தானகிண் கிணிய தண்டை சூழ்வன சரண புண்ட ரீகம தருள்வாயே

307. குடல் நிணம் என்பு

ராகம் : ஹம்சானந்தி தாளம் : சதுஸ்ர ரூபகம் (6) குடல்நிண மென்புபு லால்கமழ் குருதிந ரம்பிவை தோலிடை குளுகுளெ னும்படி மூடிய மலமாசு குதிகொளு மொன்பது வாசலை யுடையகு ரம்பையை நீரெழு குமிழியி னுங்கடி தாகியெ யழிமாய அடலையு டம்பைய வாவியெ அநவர தஞ்சில சாரமி லவுடத மும்பல யோகமு முயலாநின் றலமரு சிந்தையி னாகுல மலமல மென்றினி யானுநி னழகிய தண்டைவி டாமல ரடைவேனோ

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே