இருவினை ஊண் — J.R. விளக்கவுரை
By Smt. Janaki Ramanan, Pune You may read the explanation of the song iruvinai UN by clicking the underlined hyperlink. நினைத்தவுடன் முக்தி தரும் அருணையின் முத்துக் குமரா சரணம். "இருவினை ஊண்" என்று தொடங்கும் திருவருணைப் பாடல் முன்னுரை சிவலோகமோ என பிரமிக்க வைக்கும் அருணையில் அமரர் குழாமும், முனி புங்கவர்களும், ரிஷிகளும் வந்து குவிந்து, கை குவித்து, அரனாரையும், முருகவேனளயும் தொழுது நிற்கும் சிறப்புச் சொல்கிறார் அருணகிரிநாதர். சாட்சாத் முருகனே "அருணகிரி நாதா" எனப் பெயர் சூட்டி, அவரை அன்புடன் அழைத்த தலம் அல்லவா! துன்பக் கடலில் அலைப்புண்டு தத்தளிக்கும் மரக்கலம் போன்ற இந்த நிலையற்ற உடல் மேல் மாந்தர்க்கு ஏன் இந்த மயக்கம் எனப் பரிதவிக்கிறார். மயக்கங்கள் நீங்கி முருகன் மலர்ப் பாதம் கிடைக்குமோ என ஏங்குகிறார். அருணையில் அவன் ஆட்கொணட பின்னரும் ஏன் இந்தக் கலக்கம்? வினைகளை வேரறுக்க இடையறாமல் வேலவனைத் தொழ வேண்டும் என்பதைத் தான் வலியுறுத்துகிறார். சைவ வைணவ பேதம் காட்டாமல் ஆடல் அரசனையும், அண்டம் உண்டவனையும் பாடும் பாடல...