சில திருப்புகழ் பாட்டுக்கள் : J R விளக்கவுரை
By Janaki Ramanan, Pune Click anywhere on the panel to expand it and click once again to collapse. Clicking the red underlined words in the panel will take you to the English translation of the song. 11. அந்தகன் வரும் அருணகிரிநாதரைச் சுற்றிச் சுழன்று சுழித்து ஓடும் பக்தி வெள்ளம் தான் இந்தப் பாடல். அந்தக் கந்தவெள்ளம் எந்த அழுக்கையெல்லாம் அடித்துச் சென்று விடும் தெரியுமா எனக் கேட்டு, நெஞ்சத்தில் நம்பிக்கை தழைக்க வைக்கும் பாடல். மரண பயம் பயந்து ஓடிவிட, காம இச்சை கலங்கிக் கதறி விலகிவிட, படைப்பின் அடித்தளமாக அமைந்த சத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களும் விடைபெற்றுக் கொண்டு விட, ஞானம் மட்டும் மிஞ்ச, ஞான பண்டிதன் விஞ்சி நிற்க, பக்தன் நான் விம்மி நிற்க, அந்த இன்பநிலை தருவாய் செந்தில் வேந்தே என வேண்டுகிறார் அருணகிரியார். அந்தகன் வருந்தினம் பிறகிட சந்ததமும் வந்து கண்டரிவையர்க் கன்புருகு சங்கதத் தவிர முக்.....குணமாள விளக்கம் : கணத்துக்குக் கணம் "வந்துவிடுவானோ, வந்து விடுவானோ" என்று எந்தக் கூற்றுவனுக்குப் பயந்துசப்தநாடிகளும் ஒடுங்க அமர்ந்திருக்கி...