வலிவாத பித்தமொடு : J R விளக்கவுரை
By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song valivaatha pitthamodu ( வலிவாத பித்தமொடு ) in English, click the underlined hyperlink. முன்னுரை "வலிவாத பித்தமொடு " என்று தொடங்கும் திருவண்ணாமலைத் திருத்தலப் பாடல். ஆன்மாவின் ஒளியாய் அறுமுகவன் அகத்தில் வீற்றிருக்கிறான். அஞ்ஞான இருள் அடர்ந்து இருக்கும் வரை ஜீவன் அவனைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. பஞ்சபூதங்களால் ஆன உடல், பஞ்ச இந்த்ரியங்களின் 'உதவியுடன், ஆசைகளை, வேண்டாத வினைகளை, நோய்களை தன்னுளே இழுத்துக் கொண்டு அவதிப் படுகிறது. ஒன்றல்ல, இரண்டல்ல, எண்ணிலா நோய்கள். மருத்துவ உலகத்தையே மலைக்க வைக்கும் நோய்கள். புதிது, புதிதாய் நுழைந்து விடும் நோய்கள். இவற்றிலிருந்து எப்போது விடுதலை என, மனித குலத்தின் சார்பில், வினா எழுப்பி, விடையாக வருபவன், விடையேறும் விமலனின் புதல்வன், முருகன் என்று தீர்ந்து தெளிகிறார் அருணகிரியார். அந்த இன்ப வாரிதிக்கு நம்மை அழைக்கும் பாடல். நம் துன்பத்தை எல்லாம் தீர்ப்பதல்லவா திருப்புகழ்!