Posts

The Story of Pulavar Poyyamozhi

A poet in South India by name Poyyamozhi Pulavar or Siva Kavi had intense devotion for Lord Siva, and refused to sing the glory of Lord Shanmukha, stating he would sing on cock (Siva), not on chicken (Murugan). ' சேவலை பாடும் வாயால் கோழிக்குஞ்சை நான் பாடுவேனோ ' The Lord wanted to protect him and so took the form of a hunter and chased the poet. When the latter pleaded for relief, the hunter asked him to sing on him. The poet asked for his name. The hunter said it was 'egg' ( muttai ).

வள்ளி சன்மார்க்கம்

முருகன் வள்ளியின்பால் நடத்தியது வெறும் காதல் அல்ல. இது இறைவன் பக்குவ ஆன்மாக்களுக்கு தானே வந்து அருளும் நிலை. வள்ளி சன்மார்க்கம் என்றால் வள்ளி கடைப்பிடித்த நன்னெறி. அவள் முருகன்பால் மேற் கொண்ட தீவிர அன்பு நெறி. இது, அடியார்களை முருகப்பெருமான் வலிந்து ஆட்கொள்ளும் பேரருள் திறத்தைப் புலப்படுத்துகிறது. வள்ளி பக்குவப்பட்ட ஆன்மாவின் வடிவம். யான், எனது என்ற செருக் கற்று இறைவன் திருவடிகளில் சரணடைந்தது வள்ளியின் தன்மையாகும். இதனையே 'வள்ளி சன்மார்க்கம்’ என்றும், வள்ளி அனுஷ்டித்த நன்னெறி என்றும் போற்றுகிறார் அருணகிரிநாதர். போகியாய் இருந்து உயிர்க்கு போகத்தைப் புரிதல் இறைவனின் தன்மை. வேலவனின் இச்சா சக்தியாக திகழ்வது வள்ளி. ஆதலின், உலகில் இல்வாழ்க்கை நடத்தற்பொருட்டு முருகன் தன்னுடைய ஒரு திருமுகத்தால் வள்ளியம்மையுடன் பேசி மகிழ்ந்து அமர்ந்திருக்கின்றான்; இது உலக உயிர்கள் நன்மை அடைவதன் பொருட்டாகும்.

ஸ்ரீஐயப்பன் நாமாவளி - நினைவிலும் ஐயப்பா

Guruji Shri A.S.Raghavan is well known for singing melodious namavali s on gods other than Murugan too. He has set them to musical tunes that build a scintillating crescendo, being based on raagas that at once melt the heart. Here's one of the Ayyappa namavalis that he would sing in special bhajans. ராகம் : சுப பந்துவராளி தாளம் ஆதி நினைவிலும் ஐயப்பா! கனவிலும் ஐயப்பா! நீல வண்ண கட்டழகா நீ வருவாய் ஐயப்பா சபரிமலை தெய்வமே! என் சாஸ்தாவே ஐயப்பா அஞ்சேல் எனக் காத்திடுவாய் ஐயப்பாவே ஐயப்பா நித்ய வஸ்துவாய் எங்கும் நிறைந்தவனே ஐயப்பா - உன் தத்வ ரூப காட்சி காண தனித்து வந்தேன் ஐயப்பா

கல்வியின் பயனும் பிடி தோய் மலையும்

Taken from K.V.Jagannathan's book on Anuboothi இறைவன் அருளை லட்சியமாக கொள்ளாத கல்வி யாவும் போலி கல்வியே. கல்வி இறைவனோடு சார்தற்குரிய நெறிகளை தெளிவிக்க வேண்டும். இல்லையாயின் அது கல்வி ஆகாது. மனத்தை ஒருமைப்படுத்தி நல்ல நெறியில் செலுத்தி நடுநிலையில் நிற்கும்படி செய்வதே கலையும் கல்வியும். கலை பயிற்சியால் மனம் செருக்கும் கலக்கமும் அடையுமானால் அந்த கல்வி தீங்கானதே. கலையே பதறிக், கதறித் தலையூடு அலையே படுமாறு, அதுவாய் விடவோ? கொலையே புரி வேடர் குலப் பிடிதோய் மலையே, மலை கூறிடு வாகையனே. "கலையானது பதற்றம் கொண்டு பயனற்ற ஆரவாரம் செய்து தலை கிறுகிறுத்து அலையும் படி உள்ள ஒன்றாகி விடலாமா? சமயவாதிகளுடன் வாதம் செய்து பிணக்குதல்செய்து சாஸ்திர நூல்களை மனக் கலக்கத்துடன் சத்தம் போட்டு பேசி அப்படிப்பட்ட வாத பிரதிவாதத்தில் நான் சிக்கலாமா? கொலையே விரும்பி செய்யும் வேடர் குலத்தில் பெண் யானையை போல வளர்ந்த வள்ளிநாயகி அணைந்த மலை போன்ற பெருமாளே! கிரௌஞ்ச மலையைப் பல கூறாகப் பிளந்த வெற்றி மாலை சூடிய முருகா!!"

குருவாய் வருவாய் அருள்வாய்

உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. உருவாய் ( uruvaay ) : ஆறுமுகமும் பன்னிருதோளும் கொண்ட தடஸ்த நிலையிலும் ('மேனியாகி கருணை கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திருமுருகன் வந்து அங்கு உதித்தனன் உலகம் உய்ய') ,

தத்துவங்கள் என்றால் என்ன : பகுதி 3

Image
Read Part 1 and Part 2 பிரகிருதி மாயா தத்துவங்கள் பிரபஞ்சத்திற்கு முதற்காரணம் வெளிப்படா பேரியற்கையான வித்தியா தத்துவத்திலிருந்து வெளிப்பட்ட தோற்றமான பிரகிருதி ஆகும். பிரகிருதி மாயை தமிழில் மூலப்பகுதி எனப்படும். நம்முடைய உலகம் தோன்றுவது பிரகிருதி மாயையிலிருந்துதான். பிரகிருதியானது புருஷன் (ஆன்மா) எனப்படும் பிரக்ஞையின் சேர்க்கையால் சலனமடைந்து, அதன் ஆற்றல் உலகமாக உருவெடுக்கிறது. இதுதான் சிருஷ்டி, அதாவது படைப்பு. பிரகிருதி சாத்துவிகம், இராசதம், தாமதம் என்ற முக்குண வடிவானது. சத்வம் என்பது நடுநிலை வகிப்பது. ரஜஸ் என்பது விரிவடைவது, செயல்படுவது. தமஸ் என்பது அதற்கு எதிரிடையாக சுருங்குவது மற்றும் முடங்குவது. பிரகிருதியின் காரியமாகத் தோன்றும் தனு கரண புவன போகங்களும் முக்குணமயமானது. இவற்றில் பொருந்துகிற பிரகிருதி உயிர்களது உள்ளத்தை முக்குணவயப்படுத்தி இருபத்து நான்கு தத்துவங்களாக விரிந்து ஆன்மாக்களோடு பொருந்தி இன்ப துன்ப மயக்கவுணர்வுகளான உலக நுகர்ச்சியைத் தருகிறது. பிரகிருதி என்பது புருஷனின் அனுபவத்துக்கான ஒரு களமாக இருக்கிறது. அதே நேரத்தில் அனுபவத்துக்காக பிரகிருதியுடன் இணைய...

தத்துவங்கள் என்றால் என்ன : பகுதி 2

பிரபஞ்சத்தை ஆக்கும் மூலப்பொருளகளை வகைப்படுத்தி மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தத்துவங்கள் என்றால் என்ன : பகுதி 1 ல் சிவ தத்துவத்தை அறிந்து கொண்டோம். முப்பத்தாறு தத்துவங்களின் இரண்டாவது பகுதியாகிய வித்தியாதத்துவத்தை இங்கு காண்போம். வித்தியா தத்துவம் வித்தியா தத்துவங்கள் சுத்த மாயை அல்லது விந்து என வழங்கப்படும் மகாமாயையுள் ஆணவ மலத்தோடு கலந்து அடங்கி நிற்பது. சுத்த மாயையுடன் ஆணவ மலம் கலப்பதால் சுத்த-அசுத்த (மிச்சிர) தத்துவங்களாக, பிரபஞ்சத்தின் அடிப்படை காரிய பொருளாக வித்தியா தத்துவங்கள் விளங்குகின்றன. பிரபஞ்சத்திலும் அதில் வாழும் மற்ற உயிரினங்கள் உள்ளும் ஆத்மா செயற்பாட்டுக்கான கருவிகளாக பொருந்தி இருக்க உதவுகின்றன. வினையிற்கட்டுண்ட ஆன்மாக்களுக்கு கன்மத்தை நுகர்வதற்கு களம் அமைப்பதோடு, அதை நுகர்வதற்கான காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்னும் ஐந்து தத்துவங்கள் ஆன்மாவை எப்பொழுதும் நீங்காது பஞ்ச கஞ்சுகங்களாக சட்டைபோல் ஒன்றாய் ஒட்டி, போகங்களை அனுபவிக்கும் செயற்பாட்டுக் கருவிகளாக வித்தியா தத்துவங்கள் விளங்குகின்றன. ஆணவ மலத்துடன் கூடிய அசுத்த மாயை வினை விளைக்கின்ற காலம் எனும் ந...