1. கைத்தல நிறைகனி

With inputs from Mrs. Shyamala Ramamurthy, Pune.

ராகம்: நாட்டைதாளம்: ஆதி
கைத்தல நிறைகனி அப்பமொடவல்பொரி
கப்பிய கரிமுகன்அடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினைகடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புயமதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடுபணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதியமுதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்தஅதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடைஇபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள்பெருமாளே


kaiththala niRaikani appamodu avalpori
kappiya karimugan adi pENi
katridum adiyavar buddhiyil uRaibava
kaRpagam enavinai kadidhEgum
maththamum madhiyamum vaiththidum aranmagan
maRporu thiraL buya madhayaanai
maththaLa vayiRanai uththami pudhalvanai mattavizh malar kodu paNivEnE

muththamizh adaivinai muRpadu girithanil
muRpada ezhudhiya mudhalvOnE
muppuram eriseydha acchivan uRairatham
acchadhu podiseydha athidheeraa
aththuyar adhukodu subbira maNipadum
appunam adhanidai ibamaagi
akkuRa magaLudan acchiRu muruganai
akkaNam maNamaruL perumaaLE.

Learn the song



Ragam nattai (Janyam of 36th mela Chala Nattai)

Arohanam: S R3 G3 M1 P D3 N3 S    Avarohanam: S N3 P M1 G3 M1 R3 S



Paraphrase

Saint Arunagiri sang this Thiruppugazh in the precincts of Poyya Ganapathi sannithi at Vayalur. Ganesha is the remover of obstacles, and if anyone worships His feet before commencing any work, all the obstacles that stand in the way of its execution will vanish. Ganesha is the God of Intellect and Wisdom, the Destroyer of Selfishness and Pride. When we overcome avidya or ignorance, which mistakenly makes us identify ourselves with our gross body and mind, the awareness and perception get purified, our sense of separateness from the universe dissolves, and we are enabled to perceive the Cosmic Self.

மூலாதாரத்தில் மஞ்சள் நிற நான்கிதழ்த் தாமரையில் கணபதி வீற்றிருக்கிறார். பிருத்வி தத்துவத்தின் ‘லம்’ என்னும் பூமி தத்துவத்தை தன் உதரத்தில் கொண்டதால் லம்போதரன் என்று போற்றப்படுகிறார்.

சைவ சித்தாந்தப்படி பதியைப் போல பசுக்களாகிய உயிரும் அநாதி. பிறவிகளில் ஸ்ரேச்டமான மனித பிறவி எல்லா பிறவிகளைப்போல் மண்ணில் துவங்கி, ஆறாம் அறிவான சித்தம் படைக்கப் பெற்றதினால் வாழ்வின் உண்மையான லட்சியமான சிவயோகம் சித்திப்பதற்கு தன் ஆன்மீக பயணத்தை தொடர வேண்டும். அதற்கு சிவகுமாரனான விநாயகரின் அருள் வேண்டும். பிறப்பு எடுக்குமுன் அதி சூட்சுமமாக இருக்கும் அந்த உயிர்/ஜீவன் படிப்படியாகக் கீழிறங்கி தூலமயமான தேகத்தை (பிருத்வி - மண்) அடைந்து அதையே தானென்று உணர்ந்து அல்லல்படுகிறது. பிறவியின் பயன் தன்னை அறிவதே. இறையருளால் தன்னுள் பிரவேசித்துத் தன்னைத் தானே உள்ளபடி அறியும் பொருட்டு, பக்குவமடைந்த ஆத்ம சாதகர்களுக்கு மூலாதாரத்தையும், அதன் சக்தியையும் அறியச் செய்து ஜீவப்ரம்ம ஐக்கியத்திற்கு வழிவிட கணபதி அருள்கிறார். அஞ்ஞானத் தடைகளை நீக்கி சுழுமுனை வாசலை திறந்து ஞானசாதகர்களுக்கு வழி ஏற்படுத்துவதால் கணபதியை விக்னேஸ்வரராக வழிபடுகிறோம். விநாயகரின் கரங்களில் உள்ள பாசம் படைத்தலையும் அங்குசம் அழித்தலையும் ஒடிந்த தந்தம் காத்தலையும் துதிக்கை மறைத்தலையும் மோதகம் அருள்வதையும் உணர்த்தி நிற்கின்றன.

கைத்தல நிறைகனி அப்பமொடு அவல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணிக் கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ (kaiththala niRaikani appamodu avalpori kappiya karimugan adi pENi katridum adiyavar butthiyil uRaibava ) : "Oh elephant-faced god, your hands are filled with fruits, appam, aval, and pori; You reside in the intellects of devotees who study after worshipping you; ; கைத்தல நிறைகனி (kaiththala niRaikani) : Hands filled with fruits. The fruit refers to the pomegranate fruit that Ganesha gets from His father Shiva. The fruit represents knowledge or Jnana.

கரிமுகன் சிவனார் உமையுடன் கயிலாயத்தில் ஏழுகோடி மந்திரங்கள் எழுதிய மந்திர சித்திர மண்டபத்துள் எழுந்தருளினார். அம் மந்திரங்கட்கு இடையில் சமஷ்டி, வியஷ்டி என்ற இரு பிரணவ மந்திரங்கள் விளங்கி இருந்தன. அதில் சமஷ்டி பிரணவ வடிவமாக பெண் யானயைை உமை நோக்கினாள். சிவனார் வியஷ்டி வடிவமான ஆண் யானையை நோக்கினார். இரு பிரணவங்களும் யானை வடிவம் கொண்டு மருவின. அப்பிரணவத்தில் இருந்து யானை வடிவுடன் விநாயகப் பெருமான் தோன்றி அருளினார். உடனே கோடி சூரிய பிரகாசத்துடன் யானை முகத்துடன் பிள்ளையார் அவதரித்தார். இவர் கற்பக விநாயகர். இவரை துதித்தால் தீவினை நீங்கி நன்மை விளையும்.

கற்பகம் என வினை கடிதேகும் (kaRpagam enavinai kadidhEgum) : "You are the wish-fulfilling karpagam tree (one of the five divine trees)" — if the devotees and scholars remember You thus, they can overcome the three types of karma – sanchita (accumulated karma over several births), prarabdha (the karma which is ripe at the moment and is the cause of present troubles) and kriyamana (the karmas accruing from actions in present life).

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் (maththamum madhiyamum vaiththidum aranmagan) : You are Lord Shiva's son who has datura flower (ஊமத்தம் பூ) and the crescent moon on His tresses.

மதி வைத்த அரன்: தக்ஷ பிரஜாபதி தன் 27 பெண்களையும் அழகன் சந்திரனுக்கு மணம் முடித்து வைத்தார். அனைவரிடமும் ஒரே மாதிரியாக அன்பு செலுத்த வேண்டும் என்றார். ஆனால் சந்திரனுக்கு கார்த்திகை ரோகிணியிடம் அதிக ‌பிரேமை. தக்ஷன் வெகுண்டு நீ ஒவ்வொரு கலையாக குறைவாய் என சபித்தார். வருந்திய சந்திரன் சிவனிடம் சரணடைய அவரோ கடைசி கலையை தலையில் அணிந்து கொண்டு நீ பௌர்ணமி வரை வளர்ந்து பின் அமாவாசை வரை குறைவாய், இது தொடரும் என வரமளித்தார். சிவனை சரணடைந்தால் அவர் தலையில் தூக்கி வைத்துக் கொள்வார்.

மல் பொரு திரள் புய மத யானை (mal poru thiraL buya mada yanai) : You have strong shoulders of a wrestler and the ferocity of an aggressive elephant, பகைவர்களைச் சாடவல்லதும் மற்போருக்கு ஏற்றதுமான திரண்ட பெருந்தோள்களை உடைய மதயானை போன்றவன்; மத யானை: விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார். விக்நேச்வரரின் கன்னத்தில் மத ஜலம் வழிவதை பற்றி காஞ்சி பெரியவர் “கபோல தான வாரணம்” என்று கணேச பஞ்சரத்தினத்தில் சொல்லியிருப்பதை இவ்வாறு விளக்குகிறார். ‘கபோலம்’ என்றால் கன்னம். ‘தானம்’ என்றால் மத ஜலம். பிள்ளையார் பெருக விடும் பரம மதுரமாக இருக்கும் அம்ருதம் தான் மத ஜலம். அது ஆனந்த க்ருபா தாரை!

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை (maththaLa vayiRanai uththami pudhalvanai) : You have a tummy that is rotund like the drum ('mrudangam'). You are the son of the chaste Parvati. அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கியது என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது. விநாயகனே ஓங்காரத்துட் பொருள். ஓங்காரத்துள் பிரபஞ்சம் எல்லாம் அடங்கும் என்பதைக் காட்டவது விநாயகப் பெருமானின் வயிறு.

மட்டவிழ் மலர்கொடு பணிவேனே (mattavizh malar kodu paNivEnE) : I worship You with honey-dripping flowers.

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே (muththamizh adaivinai muRpadu girithanil muRpada ezhudhiya mudhalvOnE) : You, the Chief God, wrote the entire Tamil language, with three branches, (literature, music and drama) on the foremost hill (of Meru)! முத்தமிழ் அடைவினை : the grammar of the three genres of Tamil literature ( முத்தமிழ் – Iyal, Isai, Nadagam); முற்படு கிரி refers to Meru mountain.

Ganesha wrote the grammar of the 'Three Tamils' on the Meru Mountain as dictated by Sage Agastya. It may also refer to Ganesha writing the Mahabharata epic on the mountain, as dictated by Sage Vyasa. Refer gugaiyil navanathar

தமிழிலக்கணங்களை அகத்தியர் கூற விநாயகர் எழுதினார் என்பது கர்ண பரம்பரை. முத்தமிழடைவு என்பதை மஹாபாரதம் என்றும் பொருள் கொள்ளலாம்.
'ஒருபதும் இருபதும்' என்ற பாட்டிலும்
பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி
எழுதிய கணபதி யிளையோனே

இதே குறிப்பு வருகிறது.

முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சது பொடிசெய்த அதி தீரா (muppuram eriseydha acchivan uRairatham acchadhu podiseydha athidheeraa ) : You are the great warrior who smashed to pieces the axle of the chariot of Lord Shiva who burnt down the Thiripuram;

According to legends, when Lord Shiva headed ahead in his chariot to destroy the Tripurams (the 3 cities of Ego, Maya, and Karma), without praying to Ganesha. The valiant elephant god then broke the axle on His chariot; the stranded Shiva then remembered his lapse and made suitable amends.

அத்துயரது கொடு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகி (aththuyar adhukodu subbira maNipadum appunam adhanidai ibamaagi) : You appeared as an elephant in the millet field to help Lord Subramanya who is tormented by His love for the hunter lass Valli, வள்ளியின் மேல் ஏற்பட்ட காதல் துயரத்தைப் போக்குவதற்காக, விநாயகர் யானை வடிவெடுத்து தினைப்புனத்தில் இருக்கும் வள்ளியைத் துரத்த, (வள்ளி ஓடி வந்து, வேடனும் விருத்தனுமாக நின்ற வேலனைத் தழுவ, அங்கு பிறந்த காதல் முருகன் வள்ளி திருமணத்திற்கு வழி வகுத்தது). இபம் (ibam) : elephant;

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணமருள் பெருமாளே (akkuRa magaLudan acchiRu muruganai akkaNam maNamaruL perumaaLE) : and thus helped Muruga to wed Valli.Lord Muruga appeared from the six sparks from Shiva; so He is synonymous with Shiva. Similarly, Vinayaka has similar power as Shakthi/Parvati as he was produced by her power. Not surprisingly, Muruga needed Ganesha's assistance!

Compare this with the songs

  • thaththanamum adimai
    அப்பி யமுதுசெயு மொய்ப்ப னுதவஅட
    விக்குள் மறமகளையணைவோனே
  • umbar tharu
    தம்பி தனக்காக வனத்தணைவோனே
  • naaLu miguththa
    வேளை தனக்குசிதமாக
    வேழ மழைத்த பெருமாளே
  • vaatha piththamodu
    ஆசை பெற்றகுற மாதை நித்தவன
    மேவி சுத்தமண மாடி

Philosophical Significance of Ganesha :

The Hindu Cultural Society in Cambridge provides this succinct interpretation of Ganesha: "The whole cosmos is known to be the belly of Ganesha. Parvati is the primordial energy. The seven realms above, seven realms below and seven oceans, are inside the cosmic belly of Ganesha, held together by the cosmic energy (kundalini) symbolized as a huge snake which Ganesha ties around Him. The mouse is nothing but our ego. Ganesha, using the mouse as a vehicle, exemplifies the need to control our ego. One who has controlled the ego has Ganesha consciousness or God-consciousness."

Five Divine/celestial Trees

(From Wikipedia)The five trees (pancha vrikshas) in Indra's private garden or Nandana  are (मन्दार: पारिजातक: संतान: कल्पवृक्ष: हरिचन्दनम्) :

Mandara (Erythrina stricta) with scarlet flowers in horizontal clusters at the ends of branches; its shade relieves physical ailments and mental stress;

Parijata (Nyctanthes arbor-tristis) that arose out of the ocean of milk and was taken away by Indra to his paradise from where it was brought to Dvaraka by Lord Krishna at the instance of his wife Satyabhama. After the passing away of the Lord and the submerging of Dvaraka in the ocean, it was taken back to heaven;

Samtanaka, a tree of obscure identity, having leaves which promote fertility in men;

Harichandana or sandalwood (Santalum album) well known for its fragrance and cooling effect, it keeps evil spirits at bay; and

Kalpa vrksa or kalpa taru, the wish-fulfilling tree of eternity which emerged during the churning of the ocean of milk.

Brief Meaning

Vinayaka resides in the intellect of those who worship Him before venturing into any study/work, and he removes the obstacles in the path of learning and spiritual progress. The elephant face is symbolic of wisdom. (போதக மா முகன் — bOthaga maa muga ) He broke the axle of the wheel of Shiva's chariot when Shiva forgot to pay obeisance to Him, whereas he expedited Murugan's marriage with Valli because Murugan called for Vinayaka's help at a critical juncture.

Other songs on Vinayaka

  • punamadanthai புனமடந்தை
    கனபெருந் தொப்பைக் கெட்பொரி யப்பம்
    கனிகிழங் கிக்குச் சர்க்கரை முக்கண்
    கடலைகண் டப்பிப் பிட்டொடு மொக்கும்திருவாயன்
    கவளதுங் கக்கைக் கற்பக முக்கண்
    திகழுநங் கொற்றத் தொற்றைம ருப்பன்
    கரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன்
  • kadalai payarOdu கடலை பயறோடு
    கடலை பயறொடு துவரையெ ளவல்பொரி
    சுகியன் வடைகனல் கதலியி னமுதொடு
    கனியு முதுபல கனிவகை நலமிவை யினிதாகக்
    கடல்கொள் புவிமுதல் துளிர்வொடு வளமுற
    அமுது துதிகையில் மனமது களிபெற
    கருணை யுடனளி திருவருள் மகிழ்வுற நெடிதான
    குடகு வயிறினி லடைவிடு மதகரி
    பிறகு வருமொரு முருக
  • orupathum irupathum ஒருபதும் இருபதும்
    பரிவுட னழகிய பழமொடு கடலைகள்
    பயறொடு சிலவகை பணியாரம்
    பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி
    எழுதிய கணபதி யிளையோன
  • thaththanamum adimai தத்தனமும் அடிமை
    அத்தி முகவனழ குற்ற பெழைவயிற
    னப்ப மவரைபொரி அவல்தேனும்
    அப்பி யமுதுசெயு மொய்ப்பன்
  • Comments

    Post a Comment

    Popular posts from this blog

    வேல்மாறல் பாராயணம்

    55. விறல் மாரன்

    59. அவனிதனிலே