374. தத்தனமும் அடிமை


ராகம் : சுத்த சாவேரிதாளம்: ஆதி
தத்த னமுமடிமை சுற்ற மொடுபுதல்வர்
தக்க மனையினமுமனைவாழ்வுந்
தப்பு நிலைமையணு கைக்கு வரவிரகு
தைக்கு மயல்நினைவுகுறுகாமுன்
பத்தி யுடனுருகி நித்த முனதடிகள்
பற்று மருள்நினைவுதருவாயே
பத்து முடியுருளு வித்த பகழியினர்
பச்சை நிறமுகிலின் மருகோனே
அத்தி முகவனழ குற்ற பெழைவயிற
னப்ப மவரைபொரிஅவல்தேனும்
அப்பி யமுதுசெயு மொய்ப்ப னுதவஅட
விக்குள் மறமகளையணைவோனே
முத்தி தருமுதல்வர் முக்க ணிறைவரொடு
முற்று மறைமொழியைமொழிவோனே
முட்ட வசுரர்கிளை கெட்டு முறியமுதல்
வெட்டி யமர்பொருதபெருமாளே.

Learn The Song


Know The Ragam Suddha Saveri (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S R2 M1 P D2 S    Avarohanam: S D2 P M1 R2 S


Paraphrase

தத் தனமும் அடிமை சுற்றமொடு புதல்வர் (thaththanamum adimai sutramodu pudhalvar) : That wealth, the servants, the relatives, the sons, தத் தனமும் = அந்த பொருளும்;

தக்க மனை இனமும் மனை வாழ்வும் (thakka manai inamum manai vAzhvum) : ideal wife, her relatives, the family life

தப்பு நிலைமை அணுகைக்கு வர (thappu nilaimai aNugaikku vara) : as the time to lose (all the above things) approaches; இழக்கும் படியான நிலைமை குறுகி வர,

விரகு உதைக்கும் மயல் நினைவு குறுகா முன் ( viragu udhaikku mayal ninaivu kuRugA mun) : before disorientation takes over affecting my intellect, அறிவைச் சிதைக்கும் புத்தி மாறாட்டம் (என்னை) அணுகி வருவதற்கு முன், விரகு = விவேகம், திறமை;

பத்தி உடன் உருகி நித்தம் உனது அடிகள் பற்றும் அருள் நினைவு தருவாயே (baththi udan urugi niththam unadhadigaL patrum aruL ninaivu tharuvAyE) : Graciously grant me the resolute thought to hold on to Your hallowed feet everyday and melt in complete devotion;

பத்து முடி உருளுவித்த பகழியினர் (paththu mudi uruLuviththa pagazhiyinar) : He had the powerful arrow that knocked down the ten heads of RavaNa; பகழி(pagazhi) : arrow;

பச்சை நிற முகிலின் மருகோனே ( pachchai niRamugilin marugOnE) : His complexion is like an emerald-green cloud; You are the nephew of that Lord Vishnu! முகில்(mugil) : cloud;

அத்தி முகவன் அழகு உற்ற பெழை வயிறன் (aththi mugavan azhagutra pezhai vayiRan) : He has an elephant's face and His belly is like an elegant box; யானை முகம் உடைய விநாயகன், அழகுள்ள பெட்டி போன்ற வயிற்றை உடையவன்,

அப்பம் அவரை பொரி அவல் தேனும் அப்பி அமுது செயும் மொய்ப்பன் உதவ (appam avarai pori aval thEnum appi amudhu seyumoyppan udhava) : Helped by the strong elephant-god Ganesha who shoves in appam (sweet rice cake), avarai, and aval mixed with honey and fills His belly, மொய்ப்பன்/மொய்ம்பன் = வலிமை உள்ளவன், வீரன்;

அடவிக்குள் மற மகளை அணைவோனே ( adavikkuL maRamagaLai aNaivOnE) : You wooed VaLLi, the damsel of the hunters, in the forest and embraced her.

முத்தி தரு முதல்வர் முக்கண் இறைவரோடு (muththi tharu mudhalvar mukkaN iRaivarodu) : To the Premier Lord Shiva who grants eternal bliss and has three eyes (the sun, the moon and fire); வீட்டுப் பேறு அளிக்கும் முதல்வரும், முக்கண்களை (சூரியன், சந்திரன், அக்கினி) உடைய இறைவருமாகிய சிவபெருமானுக்கு

முற்று(ம்) மறை மொழியை மொழிவோனே (mutru maRaimozhiyai mozhivOnE) : You explained fully the meaning of the VEda ManthrA!

முட்ட அசுரர் கிளை கெட்டு முறிய (mutta asurarkiLai kettu muRiya) : The entire clan of the demons was defeated and destroyed

முதல் வெட்டி அமர் பொருத பெருமாளே. (mudhal vetti amarporudha perumALE.) : when You slayed them in the war, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே