365. சாங்கரி பாடியிட


ராகம் : வாசஸ்பதிதாளம்: சங்கீர்ணசாபு
2 + 1½ + 1 (4½)
சாங்கரி பாடியிட வோங்கிய ஞானசுக
தாண்டவ மாடியவர்வடிவான
சாந்தம தீதமுணர் கூந்தம சாதியவர்
தாங்களு ஞானமுறவடியேனுந்
தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு
தோன்றிய சோதியொடுசிவயோகந்
தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு
சோம்பினில் வாழும்வகைஅருளாதோ
வாங்குகை யானையென வீன்குலை வாழைவளர்
வான்பொழில் சூழும்வயலயலேறி
மாங்கனி தேனொழுக வேங்கையில் மேலரிகள்
மாந்திய வாரணியமலைமீதிற்
பூங்கொடி போலுமிடை யேங்கிட வாரமணி
பூண்பன பாரியனதனபாரப்
பூங்குற மாதினுட வாடியிருள்
பூம்பொழில் மேவிவளர் பெருமாளே.

Learn The Song



Raga Vachaspati (64th mela)

Arohanam: S R2 G3 M2 P D2 N2 S    Avarohanam: S N2 D2 P M2 G3 R2 S


Paraphrase

சும்மா இருக்கும் மௌன ஞான நிலையில் இருந்து இறைவனது திருவடிகளுடன் கூடும் சிவயோக பேற்றை அருள வேண்டுகிறார் அருணகிரிநாதர்.

சாங்கரி பாடியிட ஓங்கிய ஞான சுக தாண்டவம் ஆடியவர் வடிவான (sAngkari pAdiyida vOngkiya nyAna suka thANdava mAdiyavar vadivAna) : Those devotees who appear identical in form to Lord Shiva who performs the cosmic dances in blissful Knowledge and ecstasy to the beats of Parvati's music; சங்கரியாகிய பார்வதி தேவி பாடித் தாளம் இட, மேம்பட்ட ஞான ஆனந்தத் தாண்டவம் ஆடிய சிவபிரானின் வடிவை அடைந்தவர்களும்; பாடி இட (pAdi ida) : பாடி தாளம் போட; வடிவான (vadivAna) : வடிவை அடைந்துள்ளவர்கள், சாரூப பதவியில் உள்ளவர்கள்
ஞான சுக தாண்டவம் - மதுரை வெள்ளியம்பலத்தில் ஆடின தாண்டவம் "ஞானசுந்தரத் தாண்டவம்" எனப்படும்.

சாந்தம் அதீதம் உணர் கூந்தம சாதியவர் தாங்களு ஞானமுற (sAntham atheetham uNar kUnthama jAdhiyavar thAngaLu nyAnamuRa ) : These people belong to the inner circle of SivA and have transcended the ultimate state of Tranquility, Wisdom and Knowledge; சாந்த குணத்தின் உச்சி நிலையில் இருந்து, உணர்ச்சி மிகுந்த சிவநேச இனத்தவர்களான பெரியோர்களும், (அந்தச் சிவ நடனத்தைப் பார்த்ததால்) ஞான நிலையை அடைய;
சாந்தம் அதீதம் சாந்த குணத்தின் உச்ச நிலையில் இருந்து; உணர் கூ(ர்)ந்தம சாதியவர் தாங்களும்/உணர் கூர்ந்த தம சாதியவர் தாங்களும் = ஞானம் மிகுந்த அந்த சிவபிரானது இனத்தவர்களான பெரியோர்கள்; கூர்ந்த தமர் = (ஞான உணர்ச்சி) மிக்குள்ள சிவன் தமர்களான அடியார்கள்.

அடியேனும் தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு (adiyEnum ) : I too would like to have my eyes half-closed in a trance with my breath held in suspension அடியேனும் அறி துயில் கொண்ட ஞானக் கண்ணுடனும், வெளியில் விடாதபடி உள்ளேயே சுழுமுனையில் தாங்கிப் பிடித்த பிராண வாயுவுடனும் ; தூங்கிய பார்வையோடு (thUngiya pArvaiyodu ) : அறிதுயில் கொண்ட ஞான கண்ணுடன்; தாங்கிய வாயுவொடு (thAngiya vAyuvodu) : புறத்தே ஓடாத வண்ணம் சுழுமுனையில் நிறுத்தப்பட்ட பிராண வாயுவுடன்;

தோன்றிய சோதியொடு சிவயோகந் தூண்டிய சீவனொடு (thOndriya jOthiyodu sivayOgam thUNdiya jeevanodu) : while the radiant effulgence induces my soul to merge with SivA; அந்நிலையில் காணப்படும் ஜோதி தரிசனத்துடனும் சிவயோக நிலையில் பரசிவத்துடன் கூடி நிலைத்த ஆன்மாவுடன்;

வேண்டிய காலமொடு சோம்பினில் வாழும்வகை அருளாதோ (vENdiya kAlamodu sOmbinil vAzhum vagai aruLAdhO) : and to remain in that state of sublime silence as long as I wish; will You not kindly bless me accordingly? விரும்பிய கால அளவுக்கு சும்மா இருக்கும் மெளன ஞான நிலையில் வாழும் பாக்கியத்தை உனது திருவருள் எனக்கு அருளாதோ? சோம்பு (sOmbu) : செயலற்று இருத்தல்;

பிராணாயாமத்தின் மூலம் இரேசகம், பூரகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி கும்பகத்தில் பிராணனை நிலைக்கச் செய்யும் பொழுது குண்டலினி சுருள்பிரிந்து சுழிமுனையின் வழி திறக்கப்படுகிறது. அப்பொழுது பிராணன் குண்டலினியுடன் சுழிமுனையில் இணைகிறது. இடகலை, பிங்கலை நாடிகளிலிருந்து விலகி பிராணன் சுழிமுனையில் நுழைந்து அதன் வழியாகச் சகஸ்ராரத்தைச் சென்றடைந்து அது பரமசிவத்தோடு — ஞான நடனமிடும் இறைவன் திருவடிகளுடன் இணைகிறது.

வாங்குகை யானையென ஈன் குலை வாழை வளர் (vAngukai yAnaiyena veenkulai vAzhai vaLar) : The clusters of plantains are huge as the elephant's hanging trunk; யானையின் தொங்கும் துதிக்கையைப் போல வாழைக் குலைகளைத் தள்ளுகின்ற வாழை மரங்கள் வளர்கின்ற), வாங்குகை (vAngukai) : தொங்குகின்ற துதிக்கை;

வான் பொழில் சூழும் வயல் அயலேறி (vAnpozhil sUzhum vayal ayalERi) : these groves of plantain trees are amidst paddy fields; climbing from the sides of these paddy field, பெரிய சோலைகள் சூழ்ந்த வயல்களின் பக்கங்களில் ஏறி)

மாங்கனி தேனொழுக வேங்கையில் மேல் அரிகள் (mAnkani thEnozhuga vEngaiyil mElarigaL ) : the monkeys jump about from kino trees (pterocarpus bilobus) causing honey-like juice to ooze from the ripe mangoes, மாம்பழங்கள் தேன் ஒழுகும்படி வேங்கை மரத்தின் மேலிருந்து பாயும் குரங்குகள்); அரி (ari) : குரங்கு;

மாந்திய ஆரணிய மலைமீதில் (mAndhiya AraNiya malaimeedhil) : these mangoes are devoured by the monkeys in the forests of Mount VaLLimalai. தேனையும் பழத்தையும் அருந்திய காடுகளைக் கொண்ட வள்ளிமலையில்), மாந்திய (mAndhiya) : உண்ட; ஆரணிய(ம்) (aranya) : forest;

பூங்கொடி போலும் இடை ஏங்கிட (pUnkodi pOlum idai Engida) : Here lived VaLLi, with creeper-like waist that could not bear the weight of கொடிபோன்ற மெல்லிய இடை சோர்ந்து தளரும்படியாக,

ஆரமணி பூண்பன பாரியன தனபாரப் பூங்குற மாதினுடன் ஆங்குறவாடி ( AramaNi pUNbana pAriyana thanabArap pUnkuRa mAdhinudan AnguRavAdi ) : her ornaments and her large bosoms; with that beautiful damsel of the KuRavAs, You had a merry relationship; அணிந்துள்ள முத்தாபரணங்களின் கனமும், மார்பின் பாரமும் உடைய அழகிய குறப்பெண் வள்ளியுடன் அங்கே நேசம் பூண்டு கலந்து விளையாடி; ஆரம் அணி (Aram aNi) : முத்தாபரணத்தை;
alternatively, வார் (vAr) : ரவிக்கை); அம் அணி (am aNi) : அழகிய ஆபரணங்கள்)

இருள் பூம்பொழில் மேவிவளர் பெருமாளே.(iruL pUmpozhil mEvi vaLar perumALE. ) : in the dark and lovely groves where You reside happily, Oh Great One!

Songs That Refer to Four Forms of Worship in Saivism

Please refer to the following songs for an additional explanation on the four forms of worship to attain Siva Siddhi:

  1. Suruthi vegumuga (சுருதி வெகுமுக)

  2. SariyaiyaaLarkum (சரியையாளர்க்கும்)

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே