370. சூதின் உணவாசை


ராகம்: வாசஸ்பதிகண்டசாபு 1½ + 1 (2½)
சூதினுண வாசைதனி லேசுழலு மீனதென
தூசுவழ கானவடிவதனாலே
சூதமுட னேருமென மாதர்நசை தேடுபொரு
ளாசைதமி லேசுழலவருகாலன்
ஆதிவிதி யோடுபிற ழாதவகை தேடியென
தாவிதனை யேகுறுகிவருபோது
ஆதிமுரு காதிமுரு காதிமுரு காஎனவு
மாதிமுரு காநினைவுதருவாயே
ஓதமுகி லாடுகிரி யேறுபட வாழசுரர்
ஓலமிட வேயயில்கொடமராடீ
ஓநமசி வாயகுரு பாதமதி லேபணியும்
யோகமயி லாஅமலை மகிழ்பாலா
நாதரகு ராமஅரி மாயன்மரு காபுவன
நாடுமடி யார்கள்மனதுறைவோனே
ஞானசுர வானைகண வாமுருக னேயமரர்
நாடுபெற வாழவருள்பெருமாளே.

Learn The Song



Paraphrase

சூதின் உணவு ஆசை தனிலே சுழலு மீனதென ( sUdhinuNa vAsai thanilE suzhalu meenadhena) : Like the fish that hankers after the food cunningly put in the bait, வஞ்சனையாக வைக்கப்பட்ட தூண்டிலில் உள்ள உணவை உண்ணும் ஆசையிலே சுழன்று வரும் மீன்போல,

தூசு அழகான வடிவதனாலே சூதம் உடனேரும் என (dhUsu azhagAna vadi adhanAlE sUdham udanErum ena) : I look at the glittering attire (of women), and compare their complexion to that of tender mango leaf. ஆடையின் அழகுடன் கூடிய உருவத்தைக் கண்டு மாந்தளிரின் நிறத்துக்கு உடல் நிறம் சமமாகும் என்று நினைத்து, தூசு (thoosu) : garment; சூதம் (sootham) : tender mango leaves, மாந்தளிர்; உடல் நேரும் (udal nErum) : மாந்தளிரின் நிறத்தை உடல் நிறம் ஒக்கும்;

மாதர் நசை தேடு பொருள் ஆசை தமிலே சுழல (mAdhar nasai thEdu poruL Asai thanilE suzhala) : Lusting for women, my mind revolves around ways and means of garnering wealth (to shower on them). நசை (nasai) : desire, lust;

வரு காலன் ஆதி விதியோடு பிறழாத வகை (varu kAlan Adhi vidhiyOdu piRazhAdha vagai) : Yaman, God of Death, who never deviates from the path of fate predetermined by BrahmA,

தேடி எனது ஆவிதனையே குறுகி வரு போது (thEdi enadhAvi thanaiyE kuRugi varu pOdhu) : comes searching for me to take away my life; at that time,

ஆதி முருக ஆதிமுருக ஆதிமுருகா எனவும் ஆதி முருகா நினைவு தருவாயே (Adhi muruga Adhimuru gA adhimurugA enavum Adhi murugA ninaivu tharuvAyE) : Oh Primordial (Adhi) MurugA, kindly remind me to utter Your name as "Adhi MurugA, Adhi MurugA and Adhi MurugA!"

ஓத முகில் ஆடுகிரி ஏறுபட (Odha mugilAdu giri ERupada) : The (tall) Krauncha mountain, whose peaks moistened by the clouds hovering over them, was pulverized, ஈரம் உள்ள மேகம் படியும் கிரெளஞ்சகிரி பொடியாகும்படி,

வாழ் அசுரர் ஓலமிடவே அயில்கொடு அமராடீ (vAzh asurar OlamidavE ayilkod amarAdee) : and the demons who lived there screamed in anguish when You fought them with Your spear.

ஓநமசிவாய குரு பாதம் அதிலே பணியும் யோக மயிலா (OnamasivAya guru pAdham adhilE paNiyum) : Lord SivA, the Master represented by the ManthrA "Om NamasivAya", bowed at Your feet, offering salutations as the yOgA Master, Oh Lord who mounts the peacock! (OR) Oh, rider of peacock and the Yoga Guru, You prostrated at the holy feet of Shiva who is the Master represented by the ManthrA "Om NamasivAya" ஓம் நமசிவாய என்னும் பஞ்சாட்சரத்துக்கு ஏற்ற குருவாம் சிவபிரான் உனது பாதங்களிலே பணியும்படியான உயர் நிலையைக் கொண்ட மயிலா (அல்லது) குருமூர்த்தியாம் சிவனது திருவடியிலே பணிந்து பூசித்த மயிலனே)

அமலை மகிழ் பாலா(amalai magizh bAlA) : You are the child elating Your mother, the impeccable Goddess PArvathi!

நாத ரகு ராம அரி மாயன் மருகா(nAtha ragurAma ari mAyan marugA) : Oh Lord, You are the nephew of Raghuraman, the great mystic Hari!

புவன நாடும் அடியார்கள் மனது உறைவோனே ( buvana nAdum adiyArgaL manadh uRaivOnE) : On this earth, You dwell in the hearts of Your devotees!

ஞான சுர ஆனை கணவா முருகனே(nyAna sura Anai kaNavA muruganE) : Oh MurugA, You are the consort of the wise damsel, DEvayAnai, belonging to the celestial land,

அமரர் நாடுபெற வாழவருள் பெருமாளே.(amarar nAdu peRa vAzha aruL perumALE.) : You graciously made it possible for the celestials to redeem their lost kingdom, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே