492. வாத பித்தமொடு

ராகம்: கானடா தாளம்: ஆதி 4 களை 1½ + 1½ + 1 (32)
வாத பித்தமொடு சூலை விப்புருதி
யேறு கற்படுவ னீளை பொக்கிருமல்
மாலை புற்றெழுத லூசல் பற்சனியொடந்திமாலை
மாச டைக்குருடு காத டைப்பு செவி
டூமை கெட்டவலி மூல முற்றுதரு
மாலை யுற்றதொணு றாறு தத்துவர்களுண்டகாயம்
வேத வித்துபரி கோல முற்றுவிளை
யாடு வித்தகட லோட மொய்த்தபல
வேட மிட்டுபொரு ளாசை பற்றியுழல்சிங்கியாலே
வீடு கட்டிமய லாசை பட்டுவிழ
வோசை கெட்டுமடி யாமல் முத்திபெற
வீட ளித்துமயி லாடு சுத்தவெளிசிந்தியாதோ
ஓத அத்திமுகி லோடு சர்ப்பமுடி
நீறு பட்டலற சூர வெற்பவுண
ரோடு பட்டுவிழ வேலை விட்டபுக ழங்கிவேலா
ஓந மச்சிவய சாமி சுத்தஅடி
யார்க ளுக்குமுப காரி பச்சையுமை
ஓர்பு றத்தருள்சி காம ணிக்கடவுள்தந்தசேயே
ஆதி கற்பகவி நாய கர்க்குபிற
கான பொற்சரவ ணாப ரப்பிரம
னாதி யுற்றபொருள் ஓது வித்தமையறிந்தகோவே
ஆசை பெற்றகுற மாதை நித்தவன
மேவி சுத்தமண மாடி நற்புலியு
ராட கப்படிக கோபு ரத்தின்மகிழ்தம்பிரானே.

Learn The Song

vatham piththamodu

Paraphrase

வாதம் பித்தமோடு சூலை விப்புருதி (vAtha piththamodu sUlai vippuruthi): Diseases caused by excessive rheumatism and biliousness, eczema, வாதம் பித்தம் மிகுதியால் ஏற்படும் நோய்கள், வயிற்று உளைவு, சிலந்தி, விப்புருதி(vippuruthi): abscess;

ஏறு கல் படுவன் ஈளை பொக்கு இருமல் ( ERu kaR paduvan eeLai pokkirumal): stone-like abcess of carbuncle, bronchitis, whooping cough, கல் போன்ற ஒரு வகைப் புண் கட்டி, கோழை நோய், குத்திருமல்,

மாலை புற்று எழுதல் ஊசல் பற்ச(ன்)னி ஓடு அந்தி மாலை (mAlai putRu ezhuthal Usal paR saniyodu anthi mAlai): ringworm around the neck, cancer, dizziness and vertigo, acute fever, night-blindness, கண்ட மாலை, புற்றுநோய், (உடல், மனம்) தடுமாற்றம், பல விதமான ஜன்னி நோய் இவற்றுடன் மாலைக்கண்,

மாசு அடை குருடு காது அடைப்பு செவிடு ஊமை (mAsu adaik kurudu kAthu adaippu sevidu Umai): blindness caused by gingivitis, deafness due to blockage of ear, speech-impairedness, அழுக்கு அடைவதால் வரும் குருடு, காது அடைப்பினால் வரும் செவிட்டுத் தன்மை, ஊமை,

கெட்ட வலி மூலம் முற்று தரு (kettavali mUla mutRu tharu ): spasmic fits and seizures, and bleeding piles - these are some of the diseases grown and ripened in the tree of this body! கெட்ட வலிப்புகள், மூல நோய் (ஆகிய நோய்கள்) காய்த்து முதிர்ந்த மரம்போன்றது இந்த உடல்,

மாலை உற்ற தொ(ண்)ணூறு ஆறு தத்துவர்கள் உண்ட காயம் (mAlai utRa thoNu RARu thaththuvarkaL uNda kAyam): This body is the seat where the ninety-six tenets seek orderly occupation; முறையாகப் பொருந்திய தொண்ணூற்றாறு தத்துவங்கள் இடம் பெறுகின்ற உடல்,

வேத வித்து பரிகோலம் உற்று விளையாடுவித்த கடல் ஓடம் ( vEtha viththu parikOlam utRu viLaiyAdu viththa kadal Odam) : This body is the arena for the many games of Lord Almighty, the essence of all scriptures who takes many forms and tosses the bbody like a little boat on the high seas; வேதத்தின் வித்தாகிய இறைவன் பல திருக்கோலத்தைப் பூண்டு விளையாட்டாக ஆட்டுவிக்கின்ற கடலிடைத் தோணிபோல அலைப்புறும் உடல்,

மொய்த்த பல வேடம் இட்டு பொருள் ஆசை பற்றி உழல் சிங்கியாலே (moyththa pala vEdam ittu poruL Asai patRi uzhal singiyAlE): this body also puts on various costumes and roams about greedily to make money, and in that process, poisons itself slowly; சூழ்கின்ற பலவிதமான வேடங்களைப் பூண்டு பொருளாசை கொண்டு திரிகின்ற, விஷம் போன்ற அழி செயலாலே, சிங்கி(singi): poison;

வீடு கட்டி மயல் ஆசை பட்டு விழ ( veedu katti mayal Asai pattu vizha): it builds a house and, therein, crumbles due to passionate lust.வீடு கட்டி, அதனுள் காம மயக்க ஆசையில் பட்டு வீழ்ந்து,

ஓசை கெட்டு மடியாமல் முத்தி பெற வீடு அளித்து (Osai kettu madiyAmal muththi peRa veedu aLiththu): I do not want to miss the inner musical tone and die in vain; for that, You will have to grant me liberation and a place in the heaven. உள்ளோசையாகிய) நாதம் அழிந்து, நான் இறந்து படாமல் முக்தியை அடையுமாறு வீட்டை அளித்து,

மயில் ஆடு சுத்த வெளி சிந்தியாதோ(mayil Adu suththaveLi sinthiyAthO): May I not meditate on You and have the blissful vision of Your cosmic dance, mounted on the Peacock? நீ மயில் மீது நடனம் செய்கின்ற வெட்ட வெளியான பரமானந்த நிலையைப் பெற என் உள்ளம் தியானிக்காதோ?

ஓத அத்தி முகிலோடு சர்ப்ப முடி நீறு பட்டு அலற(Otha aththi mugilOdu sarppa mudi neeRu pattu alaRa): The seas with roaring waves, the clouds and thousands of hoods of the serpent-king (AdhisEshan) were all shattered to pieces; அலையோசை மிகுந்த கடல், மேகங்கள், (ஆதிசேஷனாகிய) பாம்பின் முடிகள் (இவை எல்லாம்) பொடிபட்டுக் கலங்க, ஓதம்(Otham): waves; அத்தி(aththi): sea;

சூர(ன்) வெற்பு அவுணரோடு பட்டு விழ (sUra veRpu avuNarOdu pattu vizha): the demon SUran, his protective (seven) hills and the demons living thereon were all destroyed; சூரனும், அவனுடைய எழுகிரியும், அங்கிருந்த அசுரர்களோடு

வேலை விட்ட புகழ் அங்கி வேலா ( vElai vitta pugazh angi vElA): when You wielded the fiery and famous Spear of Yours into the seas, Oh Lord! அழிந்து விழும்படி கடலில் செலுத்திய புகழ் மிக்க நெருப்புப்போன்ற வேலை உடையவனே,

ஓம் நமச்சிவய சாமி சுத்த அடியார்களுக்கும் உபகாரி (Om namacsivaya sAmi suththa AdiyArkaLukkum upakAri): He is the primordial substance of the five lettered ManthrA coupled with "OM", namely, "OM NAMASIVAYA"; He is benevolent to all His pure devotees; ஓம் நமசிவய என்னும் பிரணவத்தோடு கூடிய ஐந்தெழுத்துக்கு மூலப் பொருளாகிய கடவுள், தூய அடியார்களுக்கு உதவி செய்பவர்,

பச்சை உமை ஓர் புறத்து அருள் சிகா மணி கடவுள் தந்த சேயே(pacchai umai Or puRaththaruL sikAmaNi kadavuL thantha sEyE): He is concorporate with UmAdEvi, the emerald-green Goddess, as a part of His side; He is the gracious jewel on the crown, Lord SivA; and You are His Son! பச்சை நிறங் கொண்ட உமையை தமது ஒரு பாகத்தில் வைத்து அருள் சுரக்கும் சிகாமணித் தெய்வமாகிய சிவபெருமான் பெற்ற குழந்தையே,

ஆதி கற்பக விநாயகற்கு பிறகான பொன் சரவணா(Athi kaRpakavi nAya karkkupiRakAna poR saravaNA): You emerged after the Primeval VinAyagA, who is like the wish-yielding KaRpaga tree, Oh Handsome Saravanabava! முதலில் தோன்றிய கற்பக விநாயகருக்குப் பின்னர் தோன்றிய அழகிய சரவண மூர்த்தியே,

பர பிரமன் ஆதி உற்ற பொருள் ஓதுவித்தமை அறிந்த கோவே (parap piraman Athi utRa poruL Othu viththamai aRintha kOvE): Oh Lord, You knew the meaning and the method of interpretation of the Primordial PraNava ManthrA! ஆதியாயுள்ள மூலமந்திரப் பொருளை ஓதுவிக்கும் தன்மை எவ்வண்ணம் என்று தெரிந்திருந்த தலைவனே,

ஆசை பெற்ற குற மாதை நித்த(ம்) வனம் மேவி(Asai petRa kuRa mAthai niththa vana mEvi:): You went to the millet-field everyday to meet Your beloved VaLLi, the damsel of the KuRavAs, உன் காதலைப் பெற்ற குற மாதாகிய வள்ளியை நாள்தோறும் தினைப்புனத்துக்குச் சென்று

சுத்த மணம் ஆடி(suththa maNam Adi): and eventually married her in the pure traditional manner! பரிசுத்தமான வகையில் திருமணம் புரிந்து

நல் புலியூர் ஆடகப் படிக கோபுரத்தின் மகிழ் தம்பிரானே.(naR puliyur Adagap padika kOpuraththin magizh thambirAnE.): In the great town of PuliyUr (Chidhambaram), You are seated with relish at the beautiful tower, shining like gold and marble, Oh Great One! நல்ல புலியூர் (சிதம்பரம்) என்னும் தலத்தில் பொன்னும் பளிங்கும் போல அழகு வாய்ந்த கோபுரத்தில் மகிழ்ந்து மேவும் தம்பிரானே.

No comments:

Post a Comment

சீசி முப்புரக் காடு — JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song cheechi muppura ( சீசி முப்புர ) in English, click the underlined hyperlink....

Popular Posts