489. பரம குருநாத


ராகம்: ஹிந்தோளம்தாளம்: ஆதி
பரமகுரு நாத கருணையுப தேச
பதவிதரு ஞானப் பெருமாள்காண்
பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மை
பகருமதி காரப்பெருமாள்காண்
திருவளரு நீதி தினமனொக ராதி
செகபதியை யாளப் பெருமாள்காண்
செகதலமும் வானு மருவையவை பூத
தெரிசனைசி வாயப்பெருமாள்காண்
ஒருபொருள தாகி அருவிடையை யூரு
முமைதன்மண வாளப்பெருமாள்காண்
உகமுடிவு கால மிறுதிகளி லாத
உறுதியநு பூதிப்பெருமாள்காண்
கருவுதனி லூறு மருவினைகள் மாய
கலவிபுகு தாமெய்ப்பெருமாள்காண்
கனகசபை மேவி அனவரத மாடு
கடவுள்செக சோதிப்பெருமாளே.

Learn The Song



Raga Hindolam (Janyam of 20th mela Natabhairavi)

Arohanam: S G2 M1 D1 N2 S    Avarohanam: S N2 D1 M1 G2 S

Paraphrase

பரம குரு நாத கருணை உபதேச (parama gurunAtha karuNai upathEsa) : You are the Master of Lord SivA; and You preach very benignly. பரமசிவனுக்கும் குருநாதனே, கருணையுடன் உபதேசிப்பவனே,

பதவி தரு ஞானப் பெருமாள்காண் (pathavi tharu nyAnap perumAL kAN) : You are the Lord who grants blissful positions in the heaven. அருட் பதவிகளைத் தருகின்ற பெருமாள் நீதான்.

பகலிரவிலாத ஒளி வெளியில் (pagaliravu ilAtha oLi veLiyil) : In the bright cosmic space of Consciousness, where there is no day or night, பகலும் இரவும் அற்றதான ஞான ஒளி வீசும் சிதாகாச வெளியில்

மேன்மை பகரும் அதிகாரப் பெருமாள் காண் (mEnmai pagarum athigArap perumAL kAN) : You are the Lord with the authority to explain the Supreme Truth. மேலான உண்மைப் பொருளை விளக்கும் அதிகாரம் கொண்டுள்ள பெருமாள் நீ தான்.

திரு வளரு நீதி (thiru vaLaru neethi) : You are the Justice that brings up the concept of liberation. முக்திச் செல்வத்தை வளர்க்கின்ற நீதியே,

தின மனொகர ஆதி (thina manogara Athi) : You elate me everyday; and You are the first and foremost in this world! நித்ய மனோகரனே, ஆதிப் பரம்பொருளே,

செகபதியை ஆளப் பெருமாள் காண் (sekapathiyai ALap perumALkAN) : You are the Lord ruling over all kings of this world. உலகிலுள்ள மன்னர்களை எல்லாம் ஆள்கின்ற பெருமாள் நீதான்.

செகதலமும் வானு மருவு ஐ அவை பூத (sekathalamum vAnu maruvu ai avai pUtha) : This world, the Ether, and the five elements that engulf both மண்ணும், விண்ணும், அவற்றில் பொருந்தியுள்ள ஐந்து பூதங்களிலும் கலந்து விளங்கி

தெரிசனை சிவாயப் பெருமாள்காண் (therisanai sivAyap perumAL kAN) : are all Your manifestation as the ManthrA, SIVAYANAMA, Oh my Lord! தரிசனம் தரும் சிவாயநம என்ற பஞ்சாட்சரப் பொருளான பெருமாள் நீதான்.

ஒரு பொருள் அதாகி அரு விடையை ஊரும் (oru poruL athAgi aru vidaiyai Urum) : Being one and only substance, and mounting the Sacred Bull, Nandi, ஏக வஸ்துவாகி அருமையான ரிஷப வாகனத்தில் ஏறுகின்ற

உமை தன் மணவாளப் பெருமாள்காண் (umai than maNavALap perumAL kAN) : You are the Consort of Mother PArvathi, my Lord! பார்வதியின் மணவாளப் பெருமாளும் நீதான்.

உக முடிவு காலம் இறுதிகள் இலாத (uga mudivu kAlam iRuthikaL ilAtha) : You are not governed by the end of the Universe, Time and Destruction; பிரபஞ்சங்களின் யுக முடிவு, காலம், இறுதிகள் என்பவை இல்லாத

உறுதி அநுபூதிப் பெருமாள்காண் (uRuthi anubUthip perumAL kAN) : and You provide the permanent experience in SivA, my Lord! நிலை பெற்ற சிவாநுபூதியைத் தந்தருளும் பெருமாள் நீதான்.

கருவுதனில் ஊறும் அருவினைகள் மாய (karuvu thanil URum aruvinaigaL mAya) : You destroy karmas, which stem right from my mother's womb; and கருக்குழியிலிருந்தே ஊறி வருகின்ற கொடிய வினைகள் அழிய

கலவி புகுதா மெய்ப் பெருமாள்காண் (kalavi puguthA meyp perumAL kAN) : You are the true Lord to ensure that I am not born again! மீண்டும் என்னை மாயப் பிரபஞ்ச சேர்க்கையில் புகுத்தாத பெருமாள் நீதான்.

கனகசபை மேவி அனவரதம் ஆடு (kanaka sabai mEvi anavaratham Adu) : You enter the golden shrine of Chidhambaram and dance eternally! பொன்னம்பலத்தில் (சிதம்பரம்) பொருந்தி எப்போதும் திருநடனம் புரிகின்ற

கடவுள் செக சோதிப் பெருமாளே. (kadavuL seka sOthip perumALE.) : You are God Almighty in the form of the Universal Light, Oh Great One! தெய்வமாகின்ற ஜெகஜ்ஜோதியான பெருமாளே.

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே