490. மனமே உனக்குறுதி


ராகம்: கல்யாணிஆதி தாளம்
மனமே உனக்குறுதி புகல்வே னெனக்கருகில்
வருவா யுரைத்தமொழிதவறாதே
மயில்வாக னக்கடவுள் அடியார் தமக்கரசு
மனமாயை யற்றசுக மதிபாலன்
நினைவே துனக்கமரர் சிவலோக மிட்டுமல
நிலைவே ரறுக்கவலபிரகாசன்
நிதிகா நமக்குறுதி அவரே பரப்பிரம
நிழலாளி யைத்தொழுது வருவாயே
இனமோ தொருத்திருபி நலமேர் மறைக்கரிய
இளையோ ளொரொப்புமிலிநிருவாணி
எனையீ ணெடுத்தபுகழ் கலியாணி பக்கமுறை
யிதழ்வேணி யப்பனுடைகுருநாதா
முனவோர் துதித்து மலர் மழைபோ லிறைத்துவர
முதுசூ ரரைத்தலை கொள்முருகோனே
மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்குருகு
முருகா தமிழ்ப்புலியுர்பெருமாளே.

Learn The Song



Practice Raga Kalyani By Voxguru Rathna Prabha (65th Mela)

Arohanam: S R2 G3 M2 P D2 N3 S    Avarohanam: S N3 D2 P M2 G3 R2 S


Paraphrase

மனமே உனக்கு உறுதி புகல்வேன் (manamE unakku uRuthi pugalvEn) : Hark, Oh my mind, I shall give you some assuring words that will bolster your confidence. மனமே, உனக்கு உறுதி தரக்கூடிய நன்மொழிகளைக் கூறுவேன்,

எனக்கு அருகில் வருவாய் உரைத்த மொழி தவறாதே (enakku arugil varuvAy uraiththamozhi thavaRAthE) : Come closer to me and follow my advice implicitly. என் சமீபத்தில் வா, நான் சொல்லும் சொற்படி தவறாமல் நடப்பாயாக.

மயில்வாகனக் கடவுள் அடியார் தமக்கு அரசு (mayilvAganak kadavuL adiyAr thamakku arasu) : The Deity mounting the peacock as His vehicle is the king for all His devotees. மயிலை வாகனமாகக் கொண்ட தெய்வம், அடியவர்களுக்கெல்லாம் அரசர்,

மனமாயை அற்ற சுகம் அதிபாலன்/சுக மதிபாலன் (manamAyai atRa sukam athipAlan) : He is the child-God who can give you bliss that is free from mind and delusion, மனம் மாயை என்ற அனைத்தையும் கடந்த சுகத்தைத் தரும் இளம் குழந்தை;
or/அல்லது
He is the incarnation of bliss that is free from mind and delusion. மனம் மாயை என்ற அனைத்தையும் கடந்தவனும், சுக ஸ்வரூபமான மதியையும் உடைய பாலனும் சுக மதி பாலன் (suka mathi bAlan) : சுக சொரூபமான அறிவுள்ள சிறுவன்;

நினைவு ஏது உனக்கு அமரர் சிவலோகம் இட்டு (ninaivu Ethu unakku amarar sivalOkam ittu) : What else do you need to think of? He will give You the celestial world and eternal bliss; உனக்கு வேறு யோசனை எதற்கு? தேவலோகத்தையும், சிவலோகத்தையும் உனக்குத் தந்தருளி,

மல நிலை வேர் அறுக்கவல பிரகாசன் (mala nilai vEr aRukkavala pirakAsan) : and He is the great effulgence that can uproot your three slags, namely, arrogance, karma and delusion. நம்முடைய ஆணவ, கன்ம, மாயா மலங்களை வேரோடு அறுத்தெடுக்க வல்லவனும் ஜோதிஸ்வரூபனும்; மலநிலை (mala nilai) : ஆணவ, கன்ம, மாயா மலங்களை

நிதி கா நமக்கு (nithi kA namakku) : He is to us like the celebrated Treasures called the conch-shell treasure, lotus treasure and the celestial tree, KaRpagam; சங்கநிதியும், பதுமநிதியும், கற்பகச் சோலையும் ஆனவன். நிதி (nithi) : சங்க, பதும நிதிகள்; கா (kA) : கற்பகக்கா, கற்பகச் சோலை;

உறுதி அவரே பரப்பிரம (uRuthi avarE parappirama) : He is our firm refuge; He is the primordial God; அவனே நமக்கு உறுதி. அவரே முழு முதற் கடவுள்.

நிழல் ஆளியைத் தொழுது வருவாயே (nizhal ALiyaith thozhuthu varuvAyE) : He dispenses justice; You must continue to worship Him. (இத்தகைய) நீதிமானை என்றென்றும் விடாமல் தொழுவாயாக.ஆளி (ALi) : governor;

இனம் ஓது ஒருத்தி ருபி (inam Othu oruththi rupi) : She is the only one whom we can claim as our true relative; She is exquisitely beautiful; நமது உண்மையான சுற்றம் என்று சொல்லக் கூடிய ஒரே ஒருத்தியும், பேரழகுள்ளவளும்,

நலம் ஏர் மறைக்கு அரிய இளையோள் (nalam Er maRaikku ariya iLaiyOL) : She is beyond the comprehension of the great and valuable vEdAs; She is ever youthful; நலமும், சிறப்பும் உடைய வேதங்களுக்கு எட்டாதவளும், என்றும் இளையவளும், ஏர் (Er) : beautiful;

ஒர் ஒப்புமிலி நிருவாணி (or oppumili niruvANi) : She is absolutely matchless; She is in an unclothed nirvana state; ஒருவிதத்திலும் தனக்குச் சமானம் இல்லாதவளும், உடையற்ற திகம்பரியும், நிருவாணி (niruvaNi) : திகம்பரி, திக்கையே ஆடையாகக் கொண்டவள்;

எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கம் உறை (enai eeNeduththa pukazh kaliyANi pakkam uRai) : She is the Divine Mother who gave birth to me; She is the famous KalyaNi, known as UmAdEvi; She is held on the right side of என்னைப் பெற்றெடுத்தவளும், புகழ் பெற்ற கல்யாணியுமாகிய உமாதேவியை ஒரு பக்கத்தில் கொண்ட

இதழ் வேணி அப்பனுடை குருநாதா (ithazh vENi appanudai gurunAthA) : Lord SivA, our Father, who dons His tresses with kondRai (Indian laburnum) flower; You are the Master of that SivA! கொன்றை அணிந்த ஜடையுடைய எம் தந்தை சிவபெருமானின் குருநாதனே, இதழ் (ithazh) : கொன்றை;

முனவோர் துதித்து மலர் மழை போல் இறைத்து வர (munavOr thuthiththu malar mazhai pOl iRaiththu vara) : The Trinity (consisting of BrahmA, Vishnu and SivA) came along by Your side, praising You and showering flowers like rain all the way; முன்னவர்களாகிய அரி, அரன், அயன் ஆகிய மூவரும் துதி செய்து, மலர்களை மழைபோலத் தூவி வர, முனவோர் (munavOr) : முன்னவர்களான - அயன் - அரி - ருத்திரன் - என்னும் மூவர்களும்

முது சூரரைத் தலை கொள் முருகோனே (muthu sUraraith thalai koL murugOnE) : You beheaded the entire clan of the old demon SUran, Oh MurugA! பழமை வாய்ந்த சூரன் முதலியவர்களின் சிரங்களைக் கொய்தறுத்த முருகனே,

மொழி பாகு முத்து நகை மயிலாள் தனக்கு (mozhi pAgu muththu nagai mayilAL thanakku) : Her words are sweet like the molten jaggery and her teeth are like pearls; She looks like the peacock; for that VaLLi, சர்க்கரைப் பாகு போன்ற மொழியும், முத்துப் போன்ற பற்களையும் உடைய, மயிலை ஒத்த சாயல் கொண்ட வள்ளிக்காக

உருகு முருகா (urugu murugA) : Your heart melts out of love! Oh MurugA! உள்ளம் உருகும் முருகனே,

தமிழ்ப்புலியுர் பெருமாளே. (thamizhppuliyUr perumALE.) : You have Your abode at PuliyUr (Chidhambaram), where the air is thick with the fragrance of Tamil, Oh Great One! தமிழ் மணம் கமழும் புலியூர் என்ற சிதம்பரத்தில் உறையும் பெருமாளே.

Comments

  1. Can you pls tell us how நிழல் ஆளி can be interpreted as நீதிமான்?

    ReplyDelete
    Replies
    1. தொழில்+ஆளி = தொழிலாளி
      தொழிலுக்கு சொந்தமானவன், உரிமை கொள்பவன், வழி நடப்பவன், நடத்துபவன், இப்படி எல்லாமே.
      அதே போல், நிழல் என்பது அடைக்கலம். வேண்டுவாருக்கு அடைக்கலம் அளிப்பதே அவரது நீதி. ஆராயும் நீதி வேலும் மயிலும் கொண்டவன் முருகன் ("சீரான கோல கால" திருப்புகழ்); திரு வளரு நீதி ("பரம குரு நாத" திருப்புகழ்). முருகன் நிழல் எனும் சிறப்பான பதவியை தரும் நீதிமான். நீதி நேர்மை எல்லாவற்றிற்கும் தலைமை வகிப்பவன், நிலை நிறுத்துபவன், கடைபிடிப்பவன் எல்லாம் அந்த இறைவன்.

      Delete
    2. நிழல் என்பது அடைக்கலம் is a very nice way of saying. Thank you very much.

      Delete

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே