483. குகனே குருபரனே
Learn The Song
Raga Vasantha (Janyam of 17th mela Suryakantham)
Arohanam: S M1 G3 M1 D2 N3 S Avarohanam: S N3 D2 M1 G3 R1 SParaphrase
குகனே குருபரனே என நெஞ்சில் புகழ (guganE guruparanE ena nenjil pugazha) : When I praise You heartily, saying "Oh GuhA! Oh Great Master!" குகனே, மேலான குரு மூர்த்தியே, என்று மனதார நான் புகழவும்,
அருள் கொடு நாவினில் இன்ப குமுளி (aruL kodu nAvinil inpa kumuLi) : blissful and sweet honey bubbles up profusely in my inner tongue due to Your grace. உன் திருவருளின் துணைகொண்டு எனது உள் நாவில் இன்பத்தேன் குமிழி பொங்க,
சிவ அமுது ஊறுக உந்திப் பசி ஆறி (siva amuthu URuga unthip pasi ARi) : As the nectar of SivA gushes within me, the hunger in my stomach is satiated. சிவ அமுது ஊறுவதால் வயிற்றுப் பசி ஆறி,
கொடிய இரு வினை மூலமும் ( kodiya iru vinai mUlamum) : The root of my wicked deeds, both good and bad, பொல்லாத இருவினைகளின் மூலப் பகுதியும்,
வஞ்ச கலிகள் பிணி இவை வேரொடு சிந்திக் குலைய (vanja kaligaL piNi ivai vErodu sinthik kulaiya) : evil vices and diseases are totally destroyed. கொடிய கேடுகள், நோய்கள் இவை அடியோடு தொலைந்து போகவும்,
நம சிவ ஓம் என கொஞ்சி களி கூர ( nama siva Om ena konji kaLi kUra) : I happily chant the ManthrA "Om NamasivAya". நமசிவய ஓம் என்ற மந்திரத்தை அன்புடன் ஓதி மகிழ்ச்சி நிரம்பவும்,
பகலும் இரவும் இலா வெளி இன்பு குறுகி (pagalum iravum ilA veLi inbu kuRugi) : I reach a blissful zone in the cosmic space where day and night cease to exist; பகலும் இரவும் இல்லாத வெளியில் இன்பத்தை அணுகி அடைந்து,
இணை இலி நாடக செம் பொன் பரம கதி (iNai ili nAdaga sem pon parama gathi ) : The matchless and heavenly cosmic dance by the Lord unfolds as the exquisite golden destination; ஒப்பிலாத (இறைவனுடைய) திருவிளையாடலும், செவ்விய அழகிய பரமகதியும்
இதுவாம் என சிந்தித்து அழகாக (ithuvAm ena sinthiththu azhagAga) : and I realize this beautiful state as the ultimate destination for redemption; இதுவே ஆகும் என்று உணர்ந்து அழகிய அந்த நிலையைப் பெறவும்,
பவளம் அன திரு மேனியுடன் பொன் சரண அடியவரார் ம(ன்)ன (pavaLam ana thiru mEniyudan pon saraNa adiyavarAr ma(n)na) : I have the vision of the Lord with coral-like body and hallowed feet, accompanied by His devotees who have already attained those feet. பவளம் போன்ற திருவுருவத்துடன் அழகிய திருவடியை (அடைந்த) அடியார்கள் பொருந்த உடன் வர,
அம் பொன் தருண சரண் மயில் ஏறி (am pon tharuNa saraN mayil ERi) : Mounting Your beautiful, gold-like and young peacock, that can give refuge to all, அழகிய பொலிவுள்ள, இளமை வாய்ந்த, அடைக்கலம் தர வல்ல மயில் மீது ஏறி,
உன் அம் பொன் கழல் தாராய் ( un am pon kazhal thArAy) : kindly grant me Your golden feet! உனது அழகிய பொன் அனைய திருவடியைத் தந்து அருளுக.
தகுட தகுதகு தாதக தந்தத் திகுட திகுதிகு தீதக தொந்தத் தடுடு டுடுடுடு டாடக டிங்குட்டு இயல்தாளம் (thakuda thakuthaku thAthaka ... dAdaka dingkuddu iyal thALam:) : To the meter of "thakuda thakuthaku thAthaka .... dAdaka dingku", (இவ்வாறு) ஒலிக்கும் தாளமும்,
தபலை திமிலைகள் பூரிகை பம்பை கரடி ( thabalai thimilaigaL pUrikai pampai karadi) : the two small drums (tabElA), the large drums (thimilai), flutes, and other percussion instruments of the variety, pampai and karadi (making animal sounds) பூரிகை (poorigai) : flute, ஊதுகுழல்; தபலை/தபேலா என்ற மத்தள வகை, திமிலை என்ற பறைவகை, ஊது குழல், பம்பை, கரடி கத்துவது போன்ற மிகுந்த ஓசையுடன் கூடிய பறை வகை;
தமருகம் வீணைகள் பொங்க (thamarugam veeNaigaL ponga) : hand-drums (udukkai) and veeNAs - all these rising in crescendo; உடுக்கை, வீணைகள் இவை எல்லாம் பேரொலி எழுப்ப,
தடி அழனம் உக (thadi azhanam uga) : the slain corpses were scattered all over;கொல்லப்பட்ட பிணங்கள் சிதறி விழ; தடி = தடியப்பட்ட, அழனம் = பிணம், உக = சிந்த;
மாருதம் சண்ட சமர் ஏறி ( mArutham saNda samar ERi) : with the speed of a cyclone, You went to the battlefield; வாயு வேகத்துடன் கொடிய போர் செய்யப் புகுந்து,
ககனம் மறை பட ஆடிய செம் புள் (gaganam maRai pada Adiya sem puL) : the dancing red eagles flocked together as if a space was enclosed blocking the skyview; ஆகாயம் வந்து பந்தரிட்டது போலக் கூத்தாடும் செவ்விய பறவைகளின் (செங்கழுகுகளின்)
பசிகள் தணிவுற சூரர்கள் மங்க (pasikaL thaNivuRa sUrarkaL manga) : those eagles' hunger was satiated when the demons were killed; பசிகள் அடங்கவும், சூரர்கள் அழியவும்,
கடல்கள் எறி பட நாகமும் அஞ்ச தொடும் வேலா (kadalgaL eRi pada nAkamum anja thodum vElA) : the seas were agitated due to boisterous waves and the eight great serpents were terror-stricken when You wielded Your spear, Oh Lord! கடல்கள் அலைபாயவும், அஷ்ட நாகங்களும் பயப்படவும் வேலைச் செலுத்தியவனே,
கயிலை மலை தனில் ஆடிய தந்தைக்கு ( kayilai malai thanil Adiya thanthaikku) : Your father, Lord SivA, who danced in Mount KailAsh, கயிலாய மலையில் திரு நடனம் செய்யும் தந்தையாகிய சிவபெருமானுக்கு
உருக மனம் முனம் நாடியே கொஞ்சி (uruga manam munam nAdiyE konji) : was delighted with a tender heart when You played with Him teasingly. மனம் உருகுமாறு அவர் முன்பு விருப்பத்துடன் கொஞ்சி விளையாடி,
கனக சபைதனில் மேவிய கந்தப் பெருமாளே.(kanaga sabaithanil mEviya kanthap perumALE.) : You have Your abode at the golden stage in Chidhambaram, Oh Kantha, the Great One! சிதம்பரத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.
ReplyDelete🙏🙏🙏
Translations to English greatly appreciated.
ReplyDelete